வேத வனம் விருட்சம் 8

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

எஸ்ஸார்சி


சவ்னகன் தொடுத்த வினா
எதைத்தெரிய எல்லாம் தெரிந்ததாகும் ?
ஆங்கிரசு கொடுத்த விடை
இரு வேறு அறிவுப்பாதைகள்
மேலதும்
கீழதும்
கீழ்தனுள் அடங்கும்
ருக் யஜுர் சாம
அதர்வண
எழுத்தொலி
இலக்கண
சொல்லியல்
அணியொடு
சோதிடம் எல்லாமே.

என்றுமுளதை
அறிய அடிப்படை
உயர் அறிவு. முண்டகோபநிசத் 1/5

சிலந்திதானேபின்னும் வலை
புவி மீது செழிக்கும் செடிகொடிகள்
முடி வளர் தோலுடை மனிதன்
பேரண்டம் படைக்கும் பிரம்மம். 1/7

இணைபிரியாத்
தோழமையொடு அமர்கின்றன
இரு பறவைகள்
சீவனும் பரமுமாய்
மானுடச்சரீரமெனும்
விருட்சத்தில்.
இனிய கனிகள்
உண்ணும்
சீவன் ஒன்று
ஏதும் உண்ணாது
வெற்றாய் வேடிக்கை மட்டுமே
பா¡ர்க்கும்
பரம் எனும் பறவை மற்றொன்று. 3/1

வாய்மையே வெல்லும்
பொய்மை அன்று
உன்னத வழிதனை
உண்மையே உரைக்கும்
ஆசைகள் வென்ற
ஆன்றோர் வழியது
சென்றடையும்
பேருண்மையை
எப்போதும் முடிவாய். 3/6

கடலோடு சேர்ந்த பின்
கங்கை தேடிக்கிடைக்காது
பேரும் உருவும்
போகும் இழந்து

பேரும் உருவும்
பொருட்டாதல் ஒய
தூய அது
மாய மாப்பொருளைச்
சமீபிக்கும். 3/8

பிரம்மத்தை அறிந்தன்
பிரம்மமே ஆகிறான்
இன்ப
துன்ப
நல்வினை
தீவினைப்
பந்தங்கள் பொடிபட
என்றுமுள ஒன்றொடு
உறையும் மாமுனிகளை
வணங்குவாம். 3/15

Series Navigation