வேத வனம் விருட்சம் 4

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

எஸ்ஸார்சிபாரெங்கும்
பார்க்கக்கிடைப்பது
எதுவாயினும் நாராயணனே

செவியுறக்
கேட்கக்கிடைப்பது
எதுவாயினும் நாராயணனே

உள்ளும் புறமும்
நீக்கமற நிறைந்திருப்பது
அந்நாராயனனே. – தைத்திரிய ஆரண்யகம் 4 10 13 5

எங்கும் வீசும்
ஒளி
எங்கும் விரையும்
ஒளி
அதுவே உணவு
அதுவேசெரிப்பு
அதுவேஇருப்பு
அதுவேநிலைப்பு
அதுவேவிழிப்பு
அதுவே நாராயணம், “ 9

காணும்
பொருளின் அழகு
அழகின்
மூலாதாரம்
எங்கும் உறை
கரிய திருமால்
சிவந்த சிவன்
முக்கண்ணன்
வடிவங்கள் அனைத்தும்
அவன் வரிசை
அவன் ஆதி நாராயணன். 13

அசையும் அசையா
எங்கும் நிறை
அனைத்திலும்
உறையுது இறைத்திரு.

விட்டு விடுதலையாதல்
பெறும் பேறு.
அடுத்தவன் பொருளுக்கு
அரும்புமா நாட்டம். – ஈசாவாசிய 1

வினை மட்டுமே
ஆற்றுவதால்
பெறுவது இருள்
அறிவு மட்டுமே
பெறுவதால்
கிட்டுவது பேரிருள்
வினையொடு
இயைந்த அறிவு
கொணர்வதே ஆனந்தம். 9

மெய்யின் முகம்
பொன் தட்டால்
மூடிக்கிடக்கிறது.
உண்மையின் இறை
உதிக்கும் ஆதவன்
உணர்த்தட்டும்
மெய்யை எனக்கு. 15


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி