வேதவனம் விருட்சம் 5

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

ராமச்சந்திரன் சுந்தரேசன்


கண்கள் காணாது
காட்சிக்கு எட்டாது
பேசி முடியாது
பேசா நிற்பது
சிந்திக்கச் சிக்காது
மனத்தால் மாளாது
எப்படி அறிய வைப்பாய்
அறியதோரை
தெரிந்த ஒன்றில்
பிறிதொன்று
தெரியாப்பலவும்
தெரிந்திடாஒன்று
அப்படித்தானே சொல்கிறார்கள்
முன்னோர்கள்
பாதை பயின்றவர்கள். கேனோஉபநிசத் 1/3

மக்கள் கூவிக்கும்பிடும்
அதுவாய் இல்லை அது
சொல்ல வாராது
சொல்லில் ஒளிர்வது

மக்கள் கூவிக்கும்பிடும்
அதுவாய் இல்லை அது
சிந்தனையில் அகப்படா
சிந்தனை மூலமது

மக்கள் கூவிக்கும்பிடும்
அதுவாய் இல்லை அது
காட்சிக்குச்சிக்கா
கண்களின் மூலமது

மக்கள் கூவிக்கும்பிடும்
அதுவாய் இல்லை அது
செவிக்குள் புகா
செவியின் மூலமது

மக்கள் கூவிக்கும்பிடும்
அதுவாய் இல்லை அது
முகர்தல் முடியா
முகர்வின் மூலமது. கேனோ 2, 4-8

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் “ 2,3

துரும்பை
எரிக்காது தோற்றான்
அக்கினி
துகளைத்தூக்காது
தோற்றான் வாயு
அகந்தக்கிழங்கு
அறிவையே புசிக்கும்
தேவலோகத்து அதிபதி
இந்திரனேயாகிலும்
தானே அறிந்ததாய்
நினைவெழ
அறிந்தவை போகும் அவமாய் “ 3,6

Series Navigation

ராமச்சந்திரன் சுந்தரேசன்

ராமச்சந்திரன் சுந்தரேசன்