வெள்ளி

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

புஹாரி, கனடா


நீலவான் பந்தலில்
நெஞ்சமள்ளும் கவிதையுடன்
நீள்விழி அசைத்தே மெல்ல
நில்லெனச் சொல்லும் வெள்ளி
விண் வெள்ளி…!

உள்ளுக்குள் வந்துபோகும்
ஒட்டுமொத்த உணர்ச்சிகளை
ஒரே மூச்சில் கொட்டித் தர
ஓயாமல் அழைக்கும் வெள்ளி
திரை வெள்ளி…!

தலைக்குமேல் ரேகைகளாய்
அனுபவத்தின் பரிசுகளாய்
க்ஷருள் கிழிக்கும் விடியலின்
ஒளிவடிவில் பூக்கும் வெள்ளி
நரை வெள்ளி…!

மேகங்கள் காதலிக்க
மின்னல்கள் கண்ணடிக்க
பொன்வான முற்றந்தன்னில்
வெட்கி, முக்காட்டு க்ஷடுவதும்
மீண்டும் ஆசையில் வருவதுமாய் வெள்ளி
நிலா வெள்ளி…!

நெருப்போடு காதலாகி
நீண்டபால் வீதிவழி
சூரியனின் முத்தம் ஏந்த
முந்தும், க்ஷரண்டாம் கோள் வெள்ளி
வீனஸ் வெள்ளி…!

அலுவலக க்ஷறுக்கத்திற்கும்
க்ஷயந்திர க்ஷயக்கத்திற்கும்
விடுதலை ஒத்திகை நாளாய்
க்ஷனிப்பள்ளி வரும் வெள்ளி
கிழமை வெள்ளி…!

ஆகாயக் கொடி நிறைத்து
அழகு வெண் பூப்பூத்து
நிலமகள் மேனிதூவி
விளையாட வாவெனும் வெள்ளி
பனி வெள்ளி…!

தண்ணீர்ச் சந்தங்களாய்
தரைவிழும் சொர்க்கமாய்
அத்தனை மக்களையும்
மொத்தமாய் முத்திடும் வெள்ளி
அருவி வெள்ளி…!

நிலத்தின் புதையல்கள்
உழைப்பின் வியர்வையால்
நெல்மணிகளாய்க் குவிந்து
புதுப்பானையில் வழிந்தோடும் வெள்ளி
பொங்கல் வெள்ளி…!

சிணுங்கிச் சிணுங்கி
ஜென்மம் முழுதும் தொடர்ந்து
திறந்த விழியரங்கில்
கனவுகள் கொண்டாடும்
எப்போதோ கேட்ட
க்ஷன்னிசை வெள்ளி
என் காதல் தேவதையின்
தங்கக்கால் கொலுசு வெள்ளி…!

***

Series Navigation