விருது

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

ரஜித்இதயங்கள் புல்லரிக்க
இரண்டே வரிகள்
நீ எழுதியதுண்டா?

உன் முதல் காதலை
கவிதையாய் எழுத
முன்னூறு முறை நீ
தோற்ற துண்டா?
பின் வென்ற துண்டா?

பிறந்த மண்ணை
பிரிந்து சேர்கையில் உனக்கு
சிறகு முளைத்த துண்டா?

தமிழை
உண்ணத் தெரியாதவனுக்கும்
ஊட்டிவிடும் மென்பொருளை
நீ உருவாக்கியதுண்டா?

ஒரு எறும்பை
அதன் எல்லைவரை
நீ தொடர்ந்த துண்டா?

ஒரு மலரின் மீது
மணிக் கணக்கில் நீ
பயணித்த துண்டா?

எவருக்கும் கிடைக்காத
சங்கப் பாடலொன்றை
தேட நீ நினைத்த துண்டா?

உண்டு என்றால்
உனக்கு விருதுகள்
தேவையில்லை ஆனால்
விருதுக்கு நீ தேவை


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation