விந்தைதான்
புஷ்பா கிறிஸ்ரி

பசியென்று கேட்கும் முன்
தட்டில் போட்டு உணவூட்டி
படியென்று சொல்லி விட்டு
இடி விழுந்தது போல்
அமர்ந்திருந்த போது
ஒன்றும் விளங்கவில்லை.
விளங்கிக் கொள்ள
ஞானமும் இருந்ததில்லை
பெற்றோராய் இருந்த போது
நீங்கள் பட்ட கஸ்டங்கள்
பள்ளிச் சிறார்களாய்
புரிய முடியாதவைகள்.
இன்று புரிகிறது
பெற்றோராய் நாம் இருந்து
மக்கட் பணி
செய்யும் போது..
தமது சுகம் மறந்து
நமது சுகம் காத்த
அன்புப் பெற்றோரின்
அருமைச் சுகம்
காக்கும் பணி
நமதென்று புரிகிறது
நம்மைத் தொடர்ந்து
நம் சந்ததியும்
நடந்து வர
நாமும் பெற்றவர்க்குப்
பணிவிடை செய்வோம்.
அன்பிற்கு அன்பு செய்வதும்
ஒரு அருமையான விந்தைதான்
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com