வா

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

அரவிந்த் அப்பாதுரை


வா…
அழைப்பு விடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்…
எந்த சுடரும் வருவதில்லை.
எத்தனையே கணங்கள் காத்திருக்கின்றேன் வரவில்லை.
ஒன்றுமே வரவில்லை.
வந்திருந்தாலும், அவை புலன்கள் தேடி, கண்டடைந்து, இன்பமுற்ற பண்டங்களாகவில்லை.
சுடர்கள் நிதானமாகி நன்மை புரியவில்லை.
வா…
நானும் அழைப்பு விடுத்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.
அழைக்காமலேயே வர கூடியது வறுமையும், பசியும், பட்டினியும்.
ஆசான் அம்ரித்யா சென் சிருஷ்டித்து ஞாலத்திற்கு நல்கிய பொருளாதார விஞ்ஞான புரிதல் மாதிரிகள் இருந்தும், அர்த்த சாஸ்திரங்கள் இருந்தும், அரசியல் கணக்கு பிழையாகி வறுமையும், பசியும், பட்டினியும் மீண்டும் தலைகாட்டலாம்.
நாமே பார்கின்றோமே, குழந்தைகள் யாசிப்பதை வீதிகளில். செல்வம் கொழிக்கும் தேசங்களின் வீதிகளில்.
நாகரிகத்தை சிகரங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று திடமான சொற்பொழிவுகளில், நாம்தான் கேட்கின்றோமே ஏற்றத் தாழ்வுகளை.
பிரபஞ்சத்தின் எந்த குரல் ?
எந்த குரல் அழைத்ததோ ?
ஒன்றன் பின் ஒன்றாக மதங்கள், அரசியல் சிந்தனைகள், தத்துவங்கள், போர்களங்கள், அரசாங்கங்கள், திருவழாக்கள், கண்ணீர் துளிகள்,
எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக, சொல்லி வைத்தது போல்.
வா என்று நான் அழைத்தது செவிகளை.
கேள்வி குறியாகி நிற்கும் செவிகளை !
அண்ட சராசரத்தில் சஞ்சரிப்பதெல்லாம் ஓசையென விழிகள் சொல்ல, விழிகள் சொல்ல,
இல்லை அவையெல்லாம் காட்சியென்று செவிகள் சொல்ல,
கலையாக விழிக்கின்றது என் உயிர்.
தென்றலைத் தழுவிய புயலாக கலையும் மென்மையடைகின்றது.
வா…

tiasci@wanadoo.fr

Series Navigation

அரவிந்த் அப்பாதுரை

அரவிந்த் அப்பாதுரை