வார்த்தைகளுடையவன்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

எச்.முஜீப் ரஹ்மான்மிகப்பெரிய வார்த்தைகளையுடைய
ஒருவனை உங்களுக்கு தெரியுமா?
அது அவனுக்கு எளிதானதே
நீங்கள் நினைப்பது போலில்லை
மிகப்பெரிய வார்த்தையொன்றில்
அவன் பறந்துக் கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு திசையையும்
கடக்கும் போது
பத்தை நெருங்கிவிட்டது போலொரு சங்கல்பம்
அவன் செல்ல வேண்டிய
இலக்கு ஒருவேளை
அதுவாக கூட இருக்கலாம்
இன்றோ நாளையோ
அல்லது சற்று நேரம் கழித்தோ
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அவன் பத்தை நெருங்குவது உறுதி
அந்த வார்த்தைகளை போல்
உடையவர் உங்களில் யாரவது இருந்தால்
ஒருவேளை அவனை காப்பாற்றி விடலாம்
சொல்லுங்கள்
உங்களில் யாரிடமாவது
மிகப்பெரிய வார்த்தைகள் இருக்கிறதா
தயவு செய்து அதை வைத்துக்கொண்டு
அவனை காப்பாற்றுங்கள்

தலையின் கீழ் நான்

நீங்கள் தலைகீழாய் நடப்பது பற்றி
கவலையில்லை.நான்
தலைகீழாய் இருக்கவில்லை என்று
நீங்கள் நம்பவேண்டும்
நீங்களோ நானோ ஏதோ ஒரு புள்ளியில்
தலைகீழாக தான் நிற்கிறோம்
நீங்கள் தலைகீழாக நின்ற போதிலும்
அருந்தும் காபி கூட கீழே சிந்தவில்லை
என்பது ச்சரியம் தான்
நீங்கள் தலைகீழாய் விமானத்தில்
பறப்பது பற்றிக் கூறுகிறீர்கள்
சர்வ நிச்சயமாய் விமானம்
தலைகீழாய் பறந்த போதிலும்
தலைகீழாய் இருக்க முடியாது
உங்கள் தலையின் கீழ் தான்
நீங்கள் இருக்கிறீர்கள்
என்று சொல்லுவது வரை
தலைகீழ் பிரச்சனையில்
நான் தலை கீழாய் இருக்கவில்லை
மேலும் நீங்கள் மட்டுமே
தலைகீழாய் இருக்கிறீர்கள்
——————————————————-

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்