வானோர் உலகம்

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

அனந்த் (அனந்தநாராயணன்)


இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது
இவ்வுலக மாதரின்சல் லாபம்

பகலிரவாய்ப் பாடுபட்டு
அகலிகையை அடைந்ததற்குக்

கிடைத்ததெல்லாம் கெளதமுனி சாபம்!

***********

அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை
அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை

அக்கினிக்கு சொன்னதைஅப்
பக்கம்வந்த வருணன் கேட்க

அவன்பிடித்தான் நாரதரின் சிண்டை!

***********

அசுரர்தேவர் முன்புநின்று கண்ணைக்- காட்டும்
அழகுமய மானஅந்தப் பெண்ணை

அடைவதற்குத் தயிர்க்கடலைக்
கடைவதற்குக் கிளம்பியதும்

அசுரருக்கே கிட்டியது வெண்ணை! (-அந்த
அமரர் முகம் வழிந்ததய்யா எண்ணை!!)

***
‘Ananthanarayanan, Vettai ‘

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)