வாக்கு பெட்டி
ரவிசந்திரன்

1.மந்திரி
தரிசாய் போன வாரிசுக்காக
தாயிக்கு அவசர வாய்க்கரிசி
தயங்காத தனயன்.
***************************************************
2. ஒட்டுப் பெட்டி
சொந்த செலவில் சூன்யம் பலருக்கு
சிலருக்கு சூறாவளியால் சொர்க்கத்திற்கு பயணம்
*********************************************
3. விரல்
பார்க்க முடியாத பகுத்தறிவு செய்த பிழைக்கு
பாவம் பழி (கரும்புள்ளி) சுமக்கும்
****************************************
4. ஊழியர்கள்
ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன
பஞ்சப் படியும், பதவி உயர்வும் சிலருக்கு ,
பலருக்கோ பழியும் பாவமும் மட்டும்.