This entry is in the series 20080925_Issue

யாழன் ஆதி


வழியும் தெரியாத உன்னை நான்
என்ன செய்ய முடியும் நண்பனே
அழிவின் கரைகளில் நின்று கத்துகின்ற
உன் குரல் கத்தும் கடல் ஒலியைத்தாண்டி
காற்றில் வருகிறது
அது ஆகாயத்தின் திசைகளில் எல்லாம்
பற்ற வைக்கின்ற துயரத்தின் நெருப்பை
ஊதி அணைக்க
ஒருகை காற்றெடுத்து வர இயலவில்லை என்னால்
இருந்தும் தவிக்கிற என் தாகத்தின்மீது
ஒருவாய் தண்ணீர் ஊற்றுவாயா

yazhanaathi@gmail.com

Series Navigation