வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘

0 minutes, 11 seconds Read
This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

வரதன்


—-

வழக்கம் போல் திராவிடத் தமிழர்களின் ஒட்டுமொத்த தலைவர் பதவியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கருணாநிதி கூவியிருக்கிறார்… ‘ கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடக் கூடாதாம் ‘ ‘ஏனேன்றால வருணாசிரமக் கொள்கையை அது சொன்னதாம். ‘

ஐயா, கருணாநிதியே, வருணாசிரமக் கொள்கைதான் இடம் பெயர்ந்து அண்ணா அறிவாலயம் வந்து ‘கருணாசிரமம் ‘ ஆகி விட்டதே. பின் ஏன் கிருஷ்ணர் மேல் தாக்கு… ? ‘

அந்தக் காலத்தில் அரசர் ஆட்சி முறை இருந்த போது வந்த ஒரு வடிவம் கீதை.

கால மாற்றத்தில், பல விஷயங்கள் நமக்கு ஒவ்வாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் புனிதர் வேடமிட்டு ஏன் கீதையைத் தாக்க வேண்டும்… ?

இன்று முழுதாக வருணாசரம் முஞ்சும் ‘கருணாசிரமம் ‘ பற்றிப் பார்க்கலாம்.

அரசியல்: பிள்ளை, மாமன். மச்சான். சகலை இவர்களுக்குத் தானே திமுக-வில் பதவி.

ஏன், வை.கோ-வை திமுக-வில் இணைத்து அவரை உங்கள் கட்சியின் வாரிசாக அறிவிக்க வேண்டியது தானே.. ?

– வேண்டுமானால், ஒரு தகுதிப் போட்டிக்கு வை.கோ – சடாலின் இருவரையும் நிறுத்த வேண்டியது தானே… ?

இல்லை அன்பழகன் குடும்பத்தில் ஒருவரை திமுக பொதுச் செயலர் ஆக்க வேண்டியது தானே…

அன்பழகன் தான் 1967-ல் கருணாநிதி முதல்வர் ஆனால் , வீட்டில் என் மனைவி கூட என்னை மன்னிக்க மாட்டாள் என்று சொன்னவர் தானே. பின் எப்படி மனசு வரும்.

– மாறன் குடும்பத்திற்கு மத்திய காண்டிராக்ட் தந்தது தானே வருணாசிரமக் இல்லை ‘கருணாசிரமக் ‘ கொள்கை.

சன் டி.வி.: தயாநிதி மாறன், ஆங்கிலத்தில் பேசும் மேடை பேச்சு அழகை திருப்பித் திருப்பித் தரும் சன் டி.வியும், சன் நியூஸீம், ஏன் வை.கோவின் ஆத்மார்த்த நடை பயணத்தை ஒளிபரப்ப வேண்டியது தானே…!

அது ‘கருணாசிரமம் ‘ தானே..!

காங்கிரஸீற்கும் , பா.ஜ.க விற்கும் மாறி மாறி தாவுவது ‘கருணாசிரமம் ‘ தானே.. ?

ஐயப்பனையும், இராமரையும் விஞ்ஞானபூர்வ உங்களின் மேதா அறிவால் விமர்சிக்கும் நீங்கள், ‘ இயேசு பிறப்பு ‘ ‘உயிர்ப்பு ‘ பற்றி , உங்களின் உற்ற தோழர்கள், எஸ்றா சற்குணத்திடம் கேள்வி கேட்டு ‘முரசொலி ‘யில் எழுத வேண்டியது தானே.

அப்படி செய்தால், நீங்கள் ஒரு சத்தியமான பகுத்தறிவாளர் என்று ஒத்துக் கொள்கிறோம்.

மேலும், நோன்புக் கஞ்சி துன்னப் போகிற அன்று, நபிகள் பற்றி கேள்வி எழுப்பினால் நீங்கள், தைரியசாலி என ஒத்துக் கொள்கிறோம்.

அதை விட்டு, மஞ்சள் துண்டு போட்டு, இந்து மத ஓட்டால் வாழ்வு விமோசனம் அடைந்து, நன்றி கெட்டவராய், இந்துக்களை இன்னும் எத்தனை நாள் தான் தாக்கி உங்களின், பூனை படை சூழ்ந்த நிலையில், ‘உதார் ‘ ஷோ நடத்தப் போகிறீர்கள்.

உங்கள் ‘கருணாசிரமத்தின் ‘ மிகப் பெரிய கோட்பாடு, வருணாசிரம் கடைசி வாரிசு ஐயரைத் தாக்கு, ஆனால், முரசொலியில் நம்பர் டூ பொறுப்பை ஒரு ஐயரிடம் கொடு.

சன் செய்தி பொறுப்பை அக்கிரஹாரத்து ஐயருக்கு கொடு.

சன் நிறுவனத்தில் ஐயர்களை நன்றாக பயன் படுத்து.

ஹிந்தியை கறுப்பு மை பூசி அழி, ஆனால், தயாநிதி மாறனை ஹிந்தி மீடியத்தில் விடு. தமிழனைப் பார்த்து , ஹோன் ஹை.. ‘ என்று கேட்கட்டும்.

ஒரு சவால் உங்களுக்கு,

உங்களின் ஆலோசனை, மற்றும் சன் டி.வி பணிகளிலிருந்து ஐயர்களை அறவே நீக்க முடியுமா… ?

உங்கள் மருமான் பொள்ளைங்க மற்றும் குடும்பத்தினர், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசாமல் இருக்க முடியுமா… ?

ஐயர் கம்பெனியிலிருந்து உங்கள் மகள் விலகி ஒரு தமிழ் இலக்கிய பத்திரிக்கையில் பணியாற்ற முடியுமா..

செய்தால்,

நீங்கள் தமிழர் தலைவர். இல்லையென்றால் தமிழர் தலைவலி நீங்கள்.

கருணாநிதி அவர்களே உங்களால் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்க்கும் போது உங்கள் மேல் உங்களுக்கு மதிப்பு வருகிறதா… இல்லை தமிழக மக்களின் ஏமாளித்தனத்தை நினைத்து சிரிப்பு வருகிறதா… ?

வாழ்க கருணாசிரமம்.

—-

varathan_rv@yahoo.com

Series Navigation

author

வரதன்

வரதன்

Similar Posts