வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

சின்னக்கருப்பன்

ஏப்ரல் 14ஆம் தேதியன்று மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்னும் எம்சிசி அமைப்பு சுமார் 14 மனிதர்களை புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கெண்ட் மாநிலத்தில் கொன்றிருக்கிறது.

இது காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகளிலோ, அல்லது இடதுசாரி கட்சிகளிலோ, அல்லது நடுவாந்தர ஜனதாதளம் போன்ற காங்கிரஸ் நகல்களிலோ எந்த ஒரு சிந்தனையையும் கண்டனத்தையும் எழுப்பவில்லை. சமீபத்தில் நேபாளத்திலும் ஒரு கம்யூனிஸ்ட் குழு அங்கு இருக்கும் ஒரு கிராமத்து மனிதர்களை கொன்று காண்பித்திருக்கிறது.

வன்முறை என்பது மனிதர்களின் கூடப்பிறந்தது. மனிதன் வன்முறையால் செதுக்கப்பட்டவன். தன் உணவுக்கு ஆபத்து என்று வரும்போது மனிதன் அந்த உணவைக் காப்பாற்றிக்கொள்ளவும், தன் குழந்தைகளின் வாழ்வு பாதிக்கப்படும்போது அதற்கு சவாலாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் (அது சக மனிதர்களாக இருந்தாலும்) அழிக்கவும் துணிந்து விடுகிறான்.

இந்த வன்முறை என்ற மாயச்சுழல் நமது ஜீனில் எழுதப்பட்டது. நசுக்கப்படும் மனிதன் வீறு கொண்டு எழுவதும், ஒரு மனிதனை நசுக்க மற்றொரு மனிதன் முயல்வதும், இரண்டுமே, தன் தன் குழந்தைகள் வம்சம் வாழ வேண்டும் என்ற உந்துதலால் தோன்றுவது. தன்னைத்தானே அழித்துக்கொள்ளுவதைச் சொல்லித்தரும் ஜீன் அடுத்த தலைமுறைக்கு எப்படிச் செல்லும் ? தன் குழந்தைகளின் நலனைக்கருத வேண்டாம் எனச்சொல்லும் ஜீன் தன்னுடைய தற்கொலையை அந்தத் தலைமுறையிலேயே செய்து கொள்கிறது.

இந்த ‘தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் ‘ ஜீன் ஒவ்வொரு தாவரத்துக்கும், ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உள்ளே இருப்பது.

இதுவே முதலாவது தற்காப்பு.

இரண்டாவது தற்காப்பு சற்று சிக்கலாகப் புரிந்து கொள்ளவேண்டியது. தன்னைப்போன்று உள்ளவர்களைக் காப்பாற்ற தன்னையே இழப்பது என்பது இந்த இரண்டாவது தற்காப்பு. ஒரு பெண் தன் குழந்தையை எதற்கு கவனமாக காப்பாற்றுகிறாள் ? தான் கூட சாப்பிடாமல் தன் குழந்தை வாழ வேண்டும் என ஏன் அவள் முனைகிறாள் ? உதாரணத்துக்கு ஒரு எதிர்மாறான விஷயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு பெண்ணிடம், ‘குழந்தைகளை கவனிக்காத ஜீன் ‘ என்று ஒன்று இருப்பதாகக் கொள்வோம். என்ன ஆகும் ? அவ்வாறு சரியாக கவனிக்காத குழந்தைகள் அழிந்து போகும். ஆனால் அந்த குழந்தைகளிடம் தான் இவளது ‘தன் குழந்தைகளை கவனிக்காத ஜீன் ‘ இருக்கிறது. இவள் குழந்தைகளை கவனிக்காமல் குழந்தைகள் இறந்து போனால், அந்தக் குழந்தைகளிடம் இருக்கும் ‘தன் குழந்தைகளை கவனிக்காத ஜீன் ‘வும் அழிந்து போகிறது. மீதம் இருப்பது எல்லாம் ‘தன் குழந்தைகளை கவனிக்கும் ஜீன் ‘ மட்டுமே.

இதுவே விரிந்து தன்னுள் இருக்கும் ஜீன்கள் அதிகம் இருக்கும் மக்களை அடையாளம் கண்டு கொள்ளவும், அந்த மக்களை காப்பாற்றவும் தூண்டும் ஜீன்கள் மனிதர்களிலும் மற்றும் எல்லா விலங்குகளிலும் பரந்து இருக்கிறது. அதனாலேயே ஜாதியும், இனமும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. தன் இன மக்களைக் காப்பாற்ற போராடும் குணமும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இது இயற்கை. இதுவே நியதி. இந்த நியதியை ஒப்புக்கொள்ளாத இனம் அழியும்.

இது இரண்டாவது தற்காப்பு.

சங்ககாலத்து புறநானூற்றுப்பாடல்களில் தன் சமூகத்தைக் காக்க, மற்றொரு சமூகத்தை அழிக்க முயன்று உயிர்துறக்கும் மனிதர்கள் பாராட்டப்படுவது இதனால்தான். இது எல்லா இனங்களிலும், எல்லா மக்களிலும் அந்த அந்த இனத்தைக் காப்பாற்ற தன்னை பழிகொடுத்துக்கொள்ளும் மனிதர்கள் மீது காவியங்கள் இயற்றப்பட்டு அவர்கள் அந்த இன மக்களுக்கு உதாரண புருஷர்களாக ஆகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் வட்டம் இப்படியே விரிகிறது. முதலில் தான். பிறகு தன் மக்கள், பிறகு தன் பெற்றோரின் குழந்தைகள், பிறகு பெற்றோர்கள், பிறகு தன் சுற்றம், பிறகு தன் ஜாதி, பிறகு தன் இனம், பிறகுதான் எல்லா மனிதர்களுமான மனித சமுதாயம். இது இயற்கை. எங்கெங்கு தம்மிடம் உள்ள ஜீன் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதோ அந்த உயிரை, உயிர்களைக் காப்பாற்ற முதல் மரியாதை தருவது மனித இயற்கை.

ஆகவே வன்முறை என்பது தன்னுள் இருக்கும் ஜீன்களை காப்பாற்றிக்கொள்ளவும், தன்னுள் இருக்கும் ஜீன்களுக்கு உணவுக்கும் உயிர்ப்புக்கும் போட்டியாக இருக்கும் மற்ற ஜீன்களை அழிப்பதற்கும் ஒரு உத்தி.

சாதிச்சண்டைகள் நடப்பதும், சமூகங்கள் இடையே கலவரங்கள் நடப்பதும் தேசங்கள் இடையே போர்கள் நடப்பதும் இதனாலேயே.

ஆனாலும் மனிதர்கள் ஜீன்களின் அடிமைகள் அல்லர். அவர்கள் ஜீன்களிடமிருந்து விடுபட்ட தருணங்களில் கருத்துக்களின் அடிமைகளாகி விடுகின்றனர். இது தனி அறிவியலாக மெமடிக்ஸ் என்று வழங்குகிறது. ஜீன்களைப் போலவே மீம்களும் (கருத்துக்கள்) தங்களை தக்கவைத்துக்கொள்ள மனிதர்களை உபாயங்களாகப் பயன்படுத்துகின்றன. இது பற்றி வேறொப்பொழுதாவது பேசுகிறேன்.

உயிர்களின் பரிமாணத்தில் முதலில் மூளை தோன்றுவது, பலவேறு காரணங்களுக்காக. பல செல் உயிரிகளின் எந்தமாதிரி எந்த செல் பாதிப்படைகிறது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் உயிர்களும் அதற்குரிய ஜீன்களும் ஏதாவது முயூட்டேஷன் என்னும் ஜீன் மாறுதல்களில் தோன்றி உயிர்களின் உள்ளே நிலைக்கும் ஜீன்களாக தங்குகின்றன. இதுவே கண், காது, வாய், போன்ற அனைத்து அனுவத்துக்கும் அடிப்படையான ஜீன்கள் விலங்குகள் உள்ளே தோன்றக் காரணம். இங்கிருந்து வரும் அனுபவப்பதிவுகளை ஆராய ஒரு சின்ன அமைப்பு தேவைப்படுகிறது. அது சின்னதாக பத்து செல் சேர்ந்து இருக்கும் புழுவின் மூளையிலிருந்து பலகோடி செல்கள் சேர்ந்து இருக்கும் மனித மூளை அல்லது டால்பின் மூளையாக பலகோடி வருடங்களில் பரிணமிக்கிறது.

மூளையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் ஜீனின் ராணுவ ஆட்சியிலிருந்து மூளை தன்னை விடுவித்துக்கொள்கிறது. இதுவும் ஜீன்களின் பரிணாமமே. ஜீன்களின் பரிணாம வளர்ச்சியில், ஒரு உயிரின் எல்லா வேலைகளையும் எல்லா சூழ்நிலைகளிலும், உள்ளே இருக்கும் ஜீன்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே மூளையை உருவாக்கிக்கொடுத்துவிட்டு, என்னைக்காப்பாற்று என்று ஆணையிட்டுவிட்டு நகர்ந்து கொள்ளும் ஜீன்கள் பரிணாமத்தின் இயற்கையான வளர்ச்சியாக வந்துவிடுகின்றன.

மனிதனின் மூளை பலகோடிக்கணக்கான வருடங்களின் பரிணாம வளர்ச்சியின் விளைவு.

ஒரு மனிதன் தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்கும், ஒரு சிங்கம் தன் குழந்தைகளை காப்பாற்றுவதற்கும் வித்தியாசம் இல்லை. வேறு வழியும் இல்லை. எந்த முறையில் காப்பாற்றுகின்றன இந்த விலங்குகள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. சிங்கம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே வழியில்தான் வேட்டையாடுகிறது. மனிதன் தன் உணவுக்காக பல விதங்களில் நவீன உலகத்தில் வேட்டையாடுகிறான். புதிது புதிதாய் புதிய உத்திகளை கற்றுக்கொள்ளும் திறமை படைத்ததாக இருக்கிறது அவன் மூளை.

மனித மூளை மட்டுமே தன் ஜீன்களின் கட்டளைகளை புரிந்து கொள்ளவும் அந்தக்கட்டளைகளை சீர்தூக்கிப் பார்க்கவும் திறம் படைத்ததாக இருக்கிறது.

தன்னிடமிருந்து தானே விலகி தன்னைப்பார்த்தவர்கள் இந்திய ஞானிகள். தான் செலுத்தப்பட்ட இயந்திரம் போல வாழ்வதைக் கண்டு வாழ்வை மாயம் என்று சொன்னவர்கள் நம் மூதாதையர்கள். காயமே இது பொய்யடா என்று சித்தர் பாடியதன் உண்மையை இன்றைய அறிவியலின் மூலம் நான் இன்று அறிகிறேன். அப்படி ஞானம் எந்தச் சிந்தனையால் வந்தது என்பது என் அறிவுக்கு எட்டாதது. உபநிஷதத்தில் ‘நேதி நேதி ‘(இது இல்லை இது இல்லை) என்று உரைத்ததும், அதிலேயே ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ‘ என்று நேருக்கு மாறாகப் பேசுவதும் எப்படி உண்மையாக இருக்கின்றன என்று இன்று அறிவியலில் நான் காண்கிறேன். காற்றடைத்த பையைப் பற்றி அவலமாக பாடிய சித்தரே, காற்றடைத்த பையைச் சுமந்து திரியும் அதே மக்கள் நன்றாக வாழ முருகனுக்கு நவபாஷாணச்சிலை வைத்து அபிஷேகம் செய்யவைத்ததும் இதனாலேயே.

இந்தியா ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்டு அனைத்து மக்களுக்குமான தேசமாக, அனைத்து மக்களுக்குமான அதிகாரப்பகிர்வு நோக்கி கடந்து 50 வருடங்களாகச் சென்றும், ஏன் காஷ்மீர் போராட்டமும், நாகாலாந்து போராட்டமும், மாவோயிஸ்ட் போராட்டமும் இருக்கின்றன ? மக்களை உன் இனம் வேறு அவர்கள் இனம் வேறு என்று சொல்லிப் பிரிவு படுத்தி, உன் இனம் அந்த இனத்தால் அழியும் என்று சொல்லி பயமுறுத்தி, ஜீன்களின் அடிப்படைக் குணத்தை தட்டி எழுப்புவது மிக எளிது. இதைத்தான் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் சீனாவும், கிரிஸ்தவ இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் செய்து வருகின்றன. சீக்கியமதமும் சீக்கியர்களும் இந்தியாவில் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லி பஞ்சாப் பிரச்னையை பாகிஸ்தானால் ஆரம்பிக்க முடிந்தது. இஸ்லாமியர்களும் இஸ்லாமும் இந்தியாவில் அழிக்கப்படுகிறது என்று பாகிஸ்தானால் இந்திய காஷ்மீரிகளை சம்மதிக்க வைக்க முடிகிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே காஷ்மீர முஸ்லீம்களை போராட வைக்க முடியுமென்றால், பாஜக வந்தபின் பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம் தவிர வேறென்ன ?

(முஸ்லீம்கள் தனி தேசம் என்று பாகிஸ்தான் பிரிவினையை கேட்டு முஸ்லீம் லீக் போராடியது வெற்றி பெற்றதற்கும் இதே பயமுறுத்தலே காரணம்.)

வன்முறை எப்படி ஒரு உத்தியோ அது போல அகிம்சையும் ஒரு உத்தி என்பதை சொன்ன காந்தியை அறிவியற்பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும்.

காந்தி தன்னுடைய உடலின் உள்ளே இருந்த ஜீன்களின் பிரதிகள் அதிகமாக உள்ள இந்தியர்களின் வளமையான வாழ்வுக்காகவும், அவர்களின் வம்சங்கள் செழிக்கவும் தான் போராடினார். ஆனால் அவர் அதற்காக அந்த ஜீன்களின் போட்டி ஜீன்களை அழிக்கத்துடிக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்களோடு நட்புறவோடும், நம்பிக்கையோடும்,அன்போடும் இருந்தார். யோசித்துப்பாருங்கள். எந்த ஒரு விலங்கும் எந்த ஒரு உயிரும் செய்ய இயலாத ஒரு விஷயத்தை அவர் செய்திருக்கிறார். ஒரு ஜீனின் ராணுவக்கட்டளையை மறுத்து ஒரு புதிய பரிணாமத்துக்கு மனித இனத்தை அழைத்துச் சென்றிருக்கிறார். ( இருந்தும் அவர் மிகவும் தெளிவாகவே இருந்திருக்கிறார். கண்மூடித்தனமாக அஹிம்சையை பின்பற்றுவதும் மடத்தனம் என்பது அவர் சொன்னதுதான். ‘கோழைத்தனத்தைவிட வன்முறை சிறந்தது ‘ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.)

கோடிக்கணக்கான வருடங்களின் வரலாற்றுப்பின்னணியில், வன்முறையை நியாயப்படுத்துவது எளிது. அகிம்சையான எதிர்ப்பை நியாயப்படுத்துவது கடினம். அகிம்சையான எதிர்ப்பு கோழைத்தனம் என்பதே இளைஞர்களான தீவிரவாதிகளின் கோபக்கருத்தாக வெளிப்படுகிறது. ஜனநாயக இந்தியாவுக்குள் வன்முறைக்கான முகாந்திரம் தனிமனிதனின் காரணமாக இருக்க முடியுமே தவிர ஒரு சமூகக்குழுவின் காரணமாக நிச்சயம் இருக்க முடியாது என்பதே என் கருத்து.

ஏன் இந்தியா மக்கள் ஒற்றுமையாக இருப்பதை அழிக்க, மேற்கத்திய நாடுகள் பால்கனைசேஷன் Balkanaization என்ற முறையை பயன்படுத்தினார்கள். ஜனநாயக இந்திய வல்லரசு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் போட்டி என்று சுதந்திர இந்தியாவின் ஆரம்பத்தில் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் கருதினார்கள். (இன்றைய பால்கன் என்ற பிரதேசத்தில் துண்டு துண்டாக இருக்கும் சின்னஞ்சிறு தேசங்கள் போல இந்தியாவை உடைக்க பலவேறு பிராந்திய அரசியல்வாதிகளை ஊக்குவிக்க முயன்றார்கள்). அவர்களுக்கு அன்று உதவியாக இருந்த பாகிஸ்தான், இன்று அவர்கள் ஆதரவு இல்லாமலேயே தனியாகவே இந்த காரியத்தில் தீவிரமாக இருக்கிறது. இந்தியா துண்டுதுண்டாக உடைய வேண்டிய தேசம் என்று எழுதாமல் ஒருநாளும் பாகிஸ்தானிய உருதுப் பத்திரிக்கைகள் வருவதில்லை. இந்தச் சிந்தனை அவ்வப்போது மதிப்புக்குரிய பாகிஸ்தானிய ஆங்கிலப்பத்திரிக்கைகளிலும் வருகிறது. ஏன் இந்தச் சிந்தனை வருகிறது ? மீண்டும் ஜீன்களின் போட்டி மூலமாகவே இதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியர்கள் வளமையாக ஒற்றுமையாக இருப்பது மற்றவர்களது பாதுகாப்புக்கும் வளமைக்கும் எதிரானதாகப் பார்க்கப்படுவது மனித இயற்கை. இந்தியா துண்டு துண்டாக உடையவேண்டும் என்று இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானை எவ்வாறு சமாளிப்பது ? வாஜ்பாயி பஸ் மூலமாக பாகிஸ்தானுக்குச் சென்று வலிமையான வளமையான சுயநம்பிக்கையுள்ள பாகிஸ்தான் நல்லது என்றும் அது இந்தியாவுக்கும் நல்லது என்று பாகிஸ்தானியர்களை இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்க முயன்றார். அது அவ்வளவு எளிதான செயலில்லை என்பது பின்வரும் நிகழ்ச்சிகள் காட்டிவிட்டன.

இருந்தும் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சமாதான முயற்சிகளும், ஜனநாயகத்தை செழுமைப்படுத்தவும், அதிகாரத்தை பரவலாக்கவும், எல்லா மக்களையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு நோக்கிய முயற்சிகளும் தொடர்ந்து நடக்கும் என்றே நம்புவோம்.

***

Series Navigation