வசந்தத்தின் வாசல்இதுவல்ல

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

அகல்யா.


என்
புன்னகையை
புதுக்கவிதையாய்
மொழி பெயர்த்தவனே!

ஆற்றங்கரையோரம்
நேற்று நீ
சொன்ன சொல்லெல்லாம்
இன்னும் என் நெஞ்சில்…

உறவறுத்து
வரச்சொன்னவனே,
ஓடிப்போகிறோம்-சாி
வாழ்க்கையைத் தேடிப்போகிறோமா ?

எனக்கு
இதயத்துடிப்பைக் கொடுத்தவளின்
இதயந் துடிக்க
வைக்கலாமா ?

விழிமூடும் கணம்கூட
எனக்காக
வழி தேடிய
தந்தையின்தலையில்
இடி இறக்கலாமா ?

ஊரைவிட்டு
வருமோமனம் ?
வேரைவிட்டு
வளருமோமரம் ?

வேதங்களிலும்
பேதங்களிலும்
முகத்தைத் தொலைத்துவிட்ட
உலகுக்கு நம்
காதலைப்
புாிய வைப்போம்,
கவிதை தீபத்தை
எாிய வைப்போம்.
சம்மதித்தால்
கரம் பிடிப்போம்,
வாழ்க்கைத் தோின்
வடம்இழுப்போம்!
***

Series Navigation