ரோஜாப் பூக்கள்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

வைகைச் செல்வி


நான் தெரு வழியே செல்கையில்
சிவப்பு ரோஜாக்கள் சிரிக்கின்றன.
கதிரவனின் துகள்களைப் போல
மஞ்சள் ரோஜாக்கள் மயக்குகின்றன.
வெள்ளை ரோஜாக்களும்
வெண் முயலாய் அசைகின்றன.
துாரத்தில் ரோஜா வண்ண ரோஜாக்கள்
அல்ல. . .அல்ல. . .
ரோஜாக்கள். . கம்பீரமாய்..சுகந்தமாய்..
என் ரோஜாப்பூவிற்கு
அடைமொழி எதற்கு ?
உண்மையைப் போல. . சத்தியத்தைப் போல..
ரோஜாக்கள் . .ரோஜாக்களே.

—-
vaigai_anne@yahoo.com

Series Navigation