ரவா கிச்சடி

This entry is part [part not set] of 10 in the series 20000730_Issue


என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் ‘அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ‘ என்று சொன்னான். நாங்கள் அனைவரும் ‘உப்புமா ‘ என்று கோரஸாய் சொன்னோம், என் மகன் அவசரமாய் ‘நான் வெளிநாட்டுக்கே போகலே ‘ என்றான் பதறியவாறு. கடைசியில் நாங்கள் அவனுக்கு கற்றுத் தந்தது இந்த ரவா கிச்சடி செய்வதற்கு எளிமையாது சுவையானதும் கூட.

தேவையான பொருட்கள்

ரவை : 1 ஆழாக்கு (லேசாக வறுத்தது)

கேரட் : 50 கிராம் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் : 50 கிராம் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி : 50 கிராம்

கறிவேப்பிலை : 1 சரம்

நெய் : 2 ஸ்பூன்

வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி : 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு : 3 பல் (நீளவாக்கில் நறுக்கியது)

இஞ்சி : சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

பட்டை : 1 துண்டு

கிராம்பு : 1

தண்ணீர் : 3 1/2 ஆழாக்கு (3 1/2 டம்ளர்)

பச்சை மிளகாய் : 3 (நீளவாக்கில் நறுக்கியது)

கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி இவைகளை வதக்கி, அறிந்த காய்கறிகளை அதில் போட்டு மேலும் நன்கு வதக்கி, அதில் 3 1/2 ஆழாக்கு நீரை ஊற்றி, உப்பு போட்டு, காய் முக்கால் பதம் வெந்து வரும்போது ரவையை கொட்டி கட்டியில்லாமல் கிளறி நீர் வற்றி ரவை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விருப்பட்டால் கொத்தமல்லி தூவலாம்.

Series Navigation