ரமேஷின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

ரமேஷ்


குறிப்பு:

நலமா ?
கிட்டத்தட்ட வலையின் இலக்கிய பக்கங்களில் ஒரு விதமாக பரிச்சியம் செய்துகொண்டாயிற்று…எங்கேடா
காணோமே என்று நினைத்து முடிப்பதற்குள் சிறு பத்திரிக்கைகளின் பிறத்தியோக வார்த்தைகளுடன் ‘குழாயடிச் சண்டை ‘களும் கண்ணில் பட, ஆஹா!- தமிழ் தாயை அவளின் அத்தனை குஞ்சுக் குளுவான்களுடன் தரிசித்துவிட்ட திருப்தி…அவளின் மடியில் நானும் ஆனந்தமாய் கூடியமட்டும் புரண்டு
அவளின் சீலையில் என் ஒழுகும் மூக்கையும் துடைத்துக்கொள்ள ஆசை கொண்டு இன்னமும் சில
கவிதைகளை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
***

முதல் நாள் காண்கையில் நிலைக்கண்ணாடியில் என் முகம்
ஒரு அழகிய பெண்முகமாய் மாறியிருந்தது!
சுழலும் காற்றினில் தங்க நிற துகள்களென
உதிர்ந்து மறைந்தன
அவயங்கள் பாலைவன மணலிடை…

என் மெளனத்தின் த்வனியை உணரலானேன்
அடியாழம் காணா இருட் குகையிலிருந்து
எழுந்த கானத்தில் கிறங்கிப் போய்
மறுநாள்
விரலெடுத்து நிலைக்கண்ணாடியின்
முகத்தைத் தொட்டேன்…

மின்னலின் வெளிச்சத்தில் எங்கெங்கும்
பட்டாம் பூச்சிகள் சிதறி சிறகடிக்க
எஞ்சியது
ரத்தக்குழம்பென
சதைக்கோளம்.

@@@@@@@

அடர்வெளி
வன மலர்கள்
மலர்ச்சியின் உச்சத்தில்
ஆனந்தக் கவிதையென
சுகந்தத்தை பரவவிட்டு
அருவியில் விரவி மறையும்…

தண்டுகள் நறுக்கப்பட்டு
இருட்டறை ஜாடிகளில்
மெளனமாய் மரித்தபடி
ஏனயன.

@@@@@

-ரமேஷ்

subramesh@hotmail.com

Series Navigation

ரமேஷ்

ரமேஷ்