யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue


கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான்

நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன

கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான்

சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்.. ஆமாம்… இரவு

அப்புறம் வக்கீல்கள், சாட்சிகளிடம் கேட்ட உண்மையான கேள்விகள்

‘உன் இருபத்தியோரு வயசாகும் கடைசிப்பையனுக்கு என்ன வயசிருக்கும் ? ‘

‘உன்னை இந்த போட்டோ எடுக்கும்போது அங்கே இருந்தாயா ? ‘

‘போரில் இறந்தது நீயா உன் தம்பியா ? ‘

‘அவன் உன்னைக் கொன்றானா ?

‘இரண்டுகாரும் இடித்துக்கொண்டபோது இந்த கார்கள் இரண்டுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும் ? ‘

‘நீ எத்தனை முறை இதுவரை தற்கொலை செய்திருக்கிறாய் ? ‘

‘நீ வெளியே போகும்வரை அங்கே உள்ளே இருந்தாய், உண்மைதானே ? ‘

Series Navigation

செய்தி

செய்தி