யாருக்கும் நான் எதுவுமில்லை

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

திலகபாமா, சிவகாசி


முல்லை மலர் வாசனையாய்
எனக்குள் விரியும் உலகம்
அதில் நான்
யாருக்கும் எதுவுமில்லை
தாய்க்கு மகளில்லை
தம்பிக்கு அக்காளில்லை
கணவருக்கு மனைவியில்லை
காதலனுக்கு காதலியில்லை
தோழனுக்கு தோழியுமில்லை
நான் சிருஸ்டித்த
எனக்கான உலகம் மட்டுமே
எனது குழந்தையாய்,நான் படைத்ததால்
தாயாய் , எனைத் தாங்கியதால்
காதலனாய் என்னோடே வாழ்ந்ததனால்
என் உலகத்தில்
பூக்களுக்கு மகரந்தகலில்லை
பூக்கள் அடையாளம் தொலைத்து
நிறம் மாறிய இலைகளாய்
சிரித்து திரியும்
கற்களில் பூக்கள் செய்யலாம்
பூக்கள் கல்லாக முடியாது
கனவுதானென்றாலும்
அடுத்தவர் கனவுகளின் நிஜமாயிராது
என் கனவுகளின் நிழல்
மணக்கும் கல்லாக முடியாத பூக்கள்
தொலைத்த மகரந்த உறவுகளோடு
உணர்வுகளை பேசித் திரியும்
மனிசியாய் நான் சிரித்து திரிய
யாருக்கும் நான் எதுவுமில்லாத
யாரும் புக முடியா என் புது உலகம்

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி