மேலமைன்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ரஜித்


செப்டம்பர் அக்டோபர் 2008 ல் குழந்தை உணவில் கலந்த
மேலமைன் நச்சால் சீனாவில் ஆயிரக்கான குழந்தைகள் பலி
அந்தச் செய்தியை ஒட்டி

அன்பு நிலத்தில்
அக்னி விதைகள்

அமுதசுரபியில் ஆலம்

பாய்ச்சிப் பயிரிட்ட
வயல்வெளிகளை
மேய்ச்சலாக்கிவிட்டது
மேலமைன்

சலித்துச் சலித்து
சந்தைக்கு வந்த சரக்கு
சல்லடையாக்கிவிட்டது
செல்லங்களை

இது
கறந்தபின் சுரந்ததா?
சுரந்தே கறந்ததா?

கா£ரணம் யார்?
கடவுளா? கரங்களா?

துப்பறிகிறது நெருப்பு
எரிக்காமல் விடாது

இயற்கை வளங்களை
நசுக்கி வாழ்கிறோம்
நச்சால் வேகிறோம்

இயற்கையாய் வாழும்
மிருகங்களிடம்
மேலமைன் இல்லை

மனிதர்கள் நாம்
மாணவர்களாவோம்
மிருகங்களிடம்

Series Navigation

ரஜித்

ரஜித்