முளைத்த பல்

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

மு. பழனியப்பன்


புத்த பிரானின்
தங்கப் பல்லைத்
தடவிப் பார்த்ததைப் போல
அக மகிழ்ந்தாள் மனைவி.
அலுவலகக் கோப்பிற்குள்
கிடந்த என்னை
உசுப்பியது
தொலைபேசியின் முனகல்
மறுமுனையில் மனைவியின் குரல்
பல் முளைத்துவிட்டதாம்
குழந்தைக்கு
மகிழ்வின் உடன் நொடியைப்
பகிர்ந்து கொள்கிறாள் மனைவி
கேட்டதும் சிறு
மின்னல் எனக்குள்
அலுவலக பொதுப் பேசி
அதனால்
மகிழ்ச்சி எல்லோருக்கும் பரவியது
மென்மை உதடுகள்
ஈறு வரம்பில்
புதிய பல்லின் சிறுமுனை
வந்தும் வராமலும்
விரல் வைத்தால் கடிக்க
முனைகிறாள்
உள்ளம்
வளர்ச்சிக்கு ஏங்குகிறது.
—-
muppalam2003@yahoo.com
muppalam@hotmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்