முதலாம் பிசாசின் நடத்தை

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

றகுமான் ஏ. ஜெமில்


ஒரு பனித்துளியளவிலான தயவுமின்றி
என் சாந்தமான முகத்தை
குலைத்துவிடும்படியான காட்டோித்தனத்தை
எந்தப் பிசாசின் நடத்தையிலிருந்து காவிற்றாய்
இத்தனை கொடூரத்தனமாக.

உன்னை விரசமூட்டும்படியாக
உப்பிநிற்கும் முலைகளோ
வெடித்த கொச்சிப்பழ உதடுகளோ
அன்றி பெருத்த தொடைகளென்றான
எந்த உறுப்புகளும் என்னிடத்திலில்லை.

ஆறுவயது நிரம்பியபடியாக
குறும்புகள் காட்டி கிடுகிடுத்தோடும்
நின் செல்லம்போன்றே நானும்
என் பிஞ்சுமுகத்தை கொஞ்சுவதற்கு மாறாக
ஒரு அத்துமீறலையே நடாத்திவிட்டாய்
இந்தப் புள்ளப்பூச்சியின்மீதாக.

மறுபடியும் மறுபடியுமாக
சித்திரமொன்றை அளித்தளித்து வரைந்து
புள்ளும்படியான காகிதம்போல்
என்னையும் நிர்மூலமாக்கிவிட்டாயே கீலம்கீலமாக
கூட்டி எடுக்கமுடியாதபடி.

சனநொிசலுள் தெத்திக்கோடு விளையாடி
சும்புமிட்டாய் கேட்டழும்
ஏன் வெகுழிசுபாவத்தை தூபமிட்டு
நின் விரகமிருகத்தை
என்மீது கொதறிவிட்டாயே வெறியடங்கும்படியாக.

என் அலாதியான சிறகடிப்பை
துளித்துளியாய் குடித்த முதலாம் பிசாசே
படுக்கையில் கிடக்கும் தனித்த சூழலில்
நின் தாயை சகோதாியை
இன்னும் மகளை எப்படிப் பார்க்கின்றாய் ?

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

riyasahame@yahoo.co.uk

Series Navigation

றகுமான் ஏ. ஜெமில்

றகுமான் ஏ. ஜெமில்