This entry is in the series 20070830_Issue

றஞ்சினி



மனதைக்கிழித்து உயிரை
உறிஞ்சும் வலி
என்னுள் கரையும் கண்ணீரில்
எதைத்தேடுகிறாய்
பொய்யாக வாழ
தெரியவில்லை எனக்கு
மீண்டும் மீண்டும்
வாழ்வாகிப்போன பிழைகளுடன்
தோற்றுப்போகிறேன்
விலகிடமுயல்கையில்
பிழைகள் என்னைக் கொல்லும்
பிழைகள் என்னை பலவீனமாக்கும்
பிழைகள் என்னை அடிமைகொள்ளும்
பிழைகள் என்னை தொடரும்
பிழைகள் என்னை தடுக்கும்
பிழைகளைக் கொன்று பிழைகள் இல்லாதுவாழ
முடிவதில்லை
எப்பவும ;எவராலும் என்னாலும்.


shanranjini@yahoo.com

Series Navigation