முக்திப்பாதை

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

விஜய்ஆனந்த ச


பிறவாதிருக்க வரம் வேண்டும்,
பிறந்தால் தன்னை உணர்ந்திடும் நிலை வேண்டும்,
மாய வலையில் விழாதிருத்தல் வேண்டும்,
விழுந்தால் வினையின்றி வெளிப்பட வேண்டும்,
தீய கோள்கள் தீண்டாதிருக்க வேண்டும்,
தீண்டிணால் தீங்கின்றி தப்பித்தல் வேண்டும்,

குறை இல்லா உடல் வேண்டும்,
சூதில்லா மணம் வேண்டும்,
பிரழா நெறியில் வாழ்க்கை வேண்டும்,
சாண்ரோர் சொல் மதித்தல் வேண்டும்,
கபடு வரா நட்பு வேண்டும்,
குறையா கீர்த்தீ வேண்டும்,
மாறா வார்த்தை வேண்டும்,
மன நிம்மதி வேண்டும்.

அன்டத்தில் உள்ளதை நாடும் மணம்
இப்பிண்டத்தில் உள்ளதை உணற வேண்டும்.

மூன்று ஆசைகளை வெண்றிட வேண்டும்,
ஐம்புலகளை அடக்கிட வேண்டும்,
முன்னை வினை இரண்டும் வேரருத்து விட வேண்டும்,
பின்னை பிறப்பறுக்கும் நிலை வேண்டும்,
இப்பிறப்பில் தன்னை உணற வேண்டும்,
இதற்கெல்லாம் அவன் அருள் வேண்டும்.

vijayanandc@hotmail.com

Series Navigation

விஜய்ஆனந்த ச

விஜய்ஆனந்த ச