This entry is in the series 20050630_Issue

ரஜத்


எறும்பூர
கல்லும் தேயும்
நான்
அரும்பூர
தேய்ந்து போனேன்

நான்
சலனமற்ற நீர்
உன் சொற்கல் விழுந்தால்
வட்டம் வட்டமாய்
விரிவேன்

முப்பது நாட்கள்
பொறுத்தால்
நொருங்கிப் போவேன்
நீ முழு நிலா அல்ல
அதிகாலைச் சூரியன்

உன்
புன்னகையைப் பிடித்த
புகைப் படங்கள்
அத்தனையும்
பூக்கள்

ஊடல் வகிடு
கூடல் பின்னல்
குறள் பேசும் கூந்தல்
முதலடி நீ
முக்காலடி நான்

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation