மானிடவியல்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

சாமிசுரேஸ்



சுயநலத்தின் எச்சில் எங்கு விழுகிறது

வாழ்வாதார அலைகளின் வளைவுகளில் மேல்
நேர்கோட்டுப் பயணமாய் காலம் மோதுகிறது

காலங்களில் போர்த்திய போர்வையை விலக்கி
நஞ்சுண்ட நாதனாய் முகங்களை மூடுவர் சிலர்

வார்த்தைகளில் மட்டுமே மழை

தனித்து விடப்பட்டு துகிலுரிந்த விழிகளொடு
இருப்பில் சிதறினேன்
மொழி அகத்தினுள் மறைந்துருளுகின்ற
இரகசியங்களைத் தேடிப் பரபரத்த கைகளில்
இசை நாறுகிறது

நாற்பறமும் நவீனக் காடுகளின் சிரிப்பொடு
இருளும் விடியலுமான இசைவுகளை
வழித்தெடுத்துப் புதைத்தேன்

கலியுகமாம் இது

ஒவ்வொரு துளிகளாய் உதிர்ந்துகொண்டிருக்கும்
சமுத்திரக்கடல் மீது
நேரிடையாய் விழுந்துகிடக்கிறது
ஓர் மானிடம்

போலிகட்கும் சிலுவைகட்கும் மாலையிட்டு
சிரிக்கிறது சுற்றத்தின் தொகுப்ப

பூமியின் ஆழ்மனமெங்கும்
மௌனவிதை பரவிக்கிடக்க
விருட்சமாய் வளர்கிறது வலி

என் ஆத்மாவை ஒரு வெள்ளைத்தாளில்
நிரப்புவதன் மூலம்
ஓh பன்னகையை அறையமுடிகிறது

சும்மாயிரு நானும் மனிதன் தான்

எம் தொன்மங்களின் ஏணிகளைத் தேடியபடி
ஞானமற்ற வாழ்வு
காகிதக்கோப்புகளில் அமிழ்ந்து ரணமாகிறது

இது முற்றுப்பெறாக் கவிதை
இங்கு யார் பூசினும் வேலிகள் மேயாது


sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்