புதியமாதவி, மும்பை
மழை நேரம்..
எப்படியும் மழைப்பற்றி ஒரு கவிதை
எழுதிவிட வேண்டும்.
இது மழை நேரம்..
மண்மகளைத் தழுவவரும் மழை மேகம் ..
மும்பையில் தவறாமல் வருகின்றதே..
வாக்குத்தவறாமல் வருகின்றதே..
இருக்கின்றது இன்னும் இதயங்களில் ஈரம்..
இது மழைநேரம்..
என் முற்றத்தில் தவறாமல் ஓடிவரும் மழைநேரம்..
உடல் குளிர்ந்து உணர்வுகள் எரியும் சூட்டில்
கதகதப்பில் காய்கின்றன உயிர்கள்
உயிர்களின் அணைப்பில் ஒரு கவிதை
மகோன்னதமான ஒரு காதல் கவிதை
எப்படியும் எழுதிவிட வேண்டும்
வேண்டும் மழையில் நனைந்து உடலில் குளிர்ந்து உயிரில் இணையும் காதல் பற்றி
இதுவரை எழுதாத எழுத்துக்களில்
இமைகளால் இப்போதே எழுதிவிட வேண்டும்
இது மழை நேரம்..
சன்னல் கண்ணாடிகளில் தெறிக்கும் முத்துக்கள்-
தொட்டிச் செடிகளின் இலைகளில் மின்னும் வைரங்கள்-
‘டபக் லபக் ‘ என்று ஓடும் தண்ணீரில் விளையாடும் சிறுவர்கள்-
மழைக்கோட்டுக்குள் சின்னதாக எட்டிப்பார்க்கும் நர்சரி தோட்டத்தின் இளம் பிஞ்சுகள்-
நனைய நனைய குடைப்பிடிக்காமல் தண்டவாளத்தில் ஓடிவிளையாடும் மின்சார வண்டிகள்-
‘சர் சர்ர்ர் ‘ என்று அடைத்தக் கண்ணாடிக் கதவுகளுடன் மழைரோட்டில் சறுக்கி ஆடும் சக்கரங்கள்-
முக்காடு போட்ட பெண்ணைப் போல இரண்டு பக்கமும் பர்தா தொங்க பள்ளங்களைக் கடந்துவந்து
பாதைகளை அடைத்து நிற்கும் ரிக்ஷாக்கள்-
எதையும் விட்டுவிடாமல்..
அப்படியே என் மழைநேர நாவலில் அள்ளி எடுத்து வந்து
என் எழுத்துக்களஞ்சியத்தை நிரப்பிவிட வேண்டும்.
மழை .. பார்வையிலேயே என்னைத் தழுவி அணைத்து
ஈரத்துக்குள் சூடேற்றி தீக்குள் நனைந்த சுகத்தில்
காலம் காலமாய் கண்மூடி , நினைவுகளின் தவத்தில் ஒன்றாகக் கலந்து
நான் மழையாக
மழை நானாக
மீண்டும் மீண்டும் கருமேகக் கருவறையின் பிரசவமாய்ப்
பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதோ இந்த நிமிடம்..
நான் மழையாக மாறப்போகும் பரிணாமநேரம்..
என் கண்திரையில் விழுவது யார்.. ? யார் இவர்கள் ?
எங்கிருந்து எழுந்து வந்தது இந்த முகங்கள் ?
கருப்பும் வெள்ளையுமாய்..
எங்கிருந்து.. ?
கட்டி முடிக்காதக் கட்டிடங்கள்
வாய்ப்பிளந்து கோரமாய்ச் சிரிக்கும் கூரைகள்
ப்ளாஸ்டிக் தாட்டுகளால் ஆன தடுப்புச்சுவர்கள்
குட்டிப்போட்ட நாயுடன் சேர்ந்து கண்மூடிக் கனவுகாணும் பொடிசுகள்
இன்றொ நாளையோ.. எப்போதும் இன்னொரு உயிர் வந்துவிடலாம் என்று சுருக்குகள் விரியக்
காத்திருக்கும் சுருக்குப்பையின் உதடுகள்
கொட்டும் மழையில் அவன் சூடானச் சுவாசக்காற்றில்
அவள் நனைந்த மேனி
காய்ந்து கொண்டிருக்கிறது.
காதல் காட்சி.. இதுவும் காதல் காட்சிதான்..
ஏனோ எழுத முடிவதில்லை.
கண்ணில் கண்ட நிஜக்காதலை
வெள்ளையும் கருப்புமாய்ப் படம் பிடிக்கமுடியாமல்
மனத்திரையில் புதைந்துவிட்ட நிஜக்காட்சிகளை வெட்டி எடுத்து எறிந்துவிடவும் முடியாமல்
நடக்கின்றேன் குடைவிரித்து.
வெள்ளை உடையில் தேவதைகள்
மழையில் நனையும் பாடல் காட்சியை மழையில் நனையாமல் பார்த்துக் கொண்டே
கழிகிறது என் மழைக்காலம்….
****
puthiyamaadhavi@hotmail.com
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- உயிர்க்குடை
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- மரண தண்டனை எதற்காக ?
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- கிள்ளுப் பூ
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- காற்று
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்