மறுபிறவி மர்மம்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


நாமெல்லாம் குளிர்காலத்தில், கடுங்குளிரை எப்படி சமாளிப்போம் ? கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொள்வோம். அதைத்தான் நம்மால் முதலில் செய்ய முடியும். அதற்கப்புறம்தான் போர்வை, கம்பளி எல்லாமே ! மற்ற விலங்குகள் என் ன செய்யும் ? அவைகளுக்குக் கடினமான தோலும், அடர்ந்த ரோமங்களும் இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த பூச்சிகள் பாவம் என் ன செய்யும் ? அதை உணர்ந்ததாலோ என் னவோ, இயற்கை தனது படைப்பில் அவைகளுக்கு மட்டும் ஒருசில சலுகைகளைக் கொடுத்துள்ளது. கடுங்குளிரோ, கடும்வெயிலோ, தங்களுக்கு ஏதுவான சூழல் இல்லையெனில், பூச்சிகள் ஒரு தற்காலிக மரணத்தைத் தேடிக்கொள்ளும். வளர்சிதை மாற்றங்களையும், இதயத்துடிப்பையும் கணிசமாகக் குறைத்துக்கொள்ளும். அவ்வளவு ஏன், ஒருசில பூச்சிகள், முழுமையாகவே நிறுத்திக்கொள்ளும். குளிர்காலத்தில் தூண்டப்படும் இந்த தற்காலிக மரணம் Hibernation எனவும், கடுங்கோடையில் தூண்டப்படும் தற்காலிக மரணம் Aestivation எனவும் அழைக்கப்படும். (நமக்கு மட்டும் இப்படி ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும் ? கையில் காசு இல்லாதபோது விருந்தினர் வந்தாலோ, கடன்காரன் வந்தாலோ, உண்மையிலேயே ‘செத்து செத்து ‘ பிழைப்போம்). மீண்டும் ஏதுவான சூழல் வரும்போது, பூச்சிகள் மறுபிறவி எடுத்து, பழைய நிலைக்கே வந்துவிடும்.

****

கடுங்குளிரை தாளாத ஒருசில பூச்சிகள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறந்து, கண்டம் விட்டு கண்டம் கூட மாறிப்போகும். குறிப்பாக நன்கு வளர்ந்த மோனார்க் பட்டுப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரம் மைல்கள் பறந்து செல்லும். குளிர்காலத்தில், கனடாவிலிருந்து கிளம்பி மெக்சிகோ செல்லும். பொதுவாக, லோகஸ்ட்களைப் போலவே, இந்த மோனார்க் பட்டுப்பூச்சிகளும், பகல்பொழுதிலேயே (நன்பகல் 1 மணி வரை) பறக்கும். ஒரு கூட்டத்தில் பல்லாயிரம் பட்டுப்பூச்சிகள் இருப்பதால், ஏதேனும் நகரின் மேலே பறக்கும்போது, கதிரவனையே மறைத்து, அந்த நகரையே இருளில் தள்ளிவிடும். அது மட்டுமல்ல – அப்போது அவற்றின் இறக்கைகள் இயங்கும் ‘பட பட ‘ ஒலி கூட மிக துல்லியமாகக் கேட்கும். மெக்சிகோவை அடைந்த பிறகு, இனப்பெருக்கத்தைத் தொடங்கிவிிடும். இந்த வலசை போவதே ஏதுவான சூழலில் இனப்பெருக்கம் செய்யத்தானே ? பிறகு, வயதான முதிர்ந்த பட்டுப்பூச்சிகள் மெக்சிகோவிலேயே இறந்தும் விடும். ஆனால் அடுத்த சந்ததியைச் சேர்ந்த மோனார்க் பட்டுப்பூச்சிகள், கனடாவில் ஏதுவான சூழல் வரும்போது, மீண்டும் கனடாவிற்கே திரும்பி செல்லும். அதுவும் சரியாக அவற்றின் பெற்றோர்கள் வந்த பாதையிலேயே திரும்பி செல்லும்.

இந்த பாதையைக் கண்டுபிடிக்கும் சூட்சுமம் எப்படி அடுத்த சந்ததிக்கு வந்ததென்றால், அது படைத்தவனுக்கே வெளிச்சம்!!

****

என்ன நண்பர்களே, பூச்சிகளைப் பற்றிய ஒருசில சுவையான மற்றும் சுவாரசியமான செய்திகளை இந்த தொடாில் தொிந்து கொண்டிருப்பீர்கள் !

பூச்சிகளினால் நமக்கு ஏற்படும் இழப்பு பல மில்லியன் கோடி! பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் சூழல் தாக்கம் (Environmental Impact) அளவிடற்காியது. தினமும் நாம் உண்ணும் உணவில், அவ்வளவு ஏன், தாய்ப்பாலில் கூட, பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு (Insecticide Residue) இருக்கிறது. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகள் குறி த்து பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. மரபணுக்கூறு மாற்றப்பட்ட செடிகள் (Transgenic Plants) கூட அதன் ஒரு வடிவம்தான்! அதைப்பற்றிய ஆதியோடந்தமான செய்திகள்…. எனது அடுத்த தொடாில்!!

அதுவரை, இந்த தொடரைப் படித்த வாசகர்களுக்கும், மின்னஞ்சலில் ஆதரவு காட்டிய வாசகர்களுக்கும் நன்றிகள் பலப்பல!!!

மீண்டும் சந்திப்போம் சில வாரங்களில்!!

—-

Series Navigation