மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்த கட்டுரை மன்னிப்பு குறித்து எழுதப்படுகிறது. தந்நிலை விளக்கம் அளிக்க அல்ல.

‘முக்கால் இந்து கால் முஸ்லீம் ‘ என பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாமை ஞாநி கூறிய போது பாரத மரபினை மதிக்கும் அதன் அடிப்படை மதிப்பீடுகளுடன் தன் வாழ்வை இசைவிக்கும் எவரையும் ஞாநி எவ்விதம் ‘மதிக்கிறார் ‘ என்பது விளங்கும். நாற்பதாண்டுகள் ஒரு கோவிலாக இயங்கி வந்த பாப்ரி கட்டிடத்தை ‘வரலாற்றறிவியல் ‘ அடிப்படையில் மசூதியாக காட்ட முன்வந்தவர்கள் இடது சாரி ‘பேராசிரியர்கள் ‘ என்பதையும் அவர்கள் வேண்டுமென்றே பேரா.லாலை தவறாக மேற்கோள் காட்டியதை சுட்டிகாட்டியவர், நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரல்லாத ஐராவதம் மகாதேவன் என்பதையோ நாம் ஞாபகப்படுத்தினோமென்றால் ஞாநி ‘இராமரின் கோவணத்தை தேடும் முயற்சி ‘ என கூறி கொச்சைப்படுத்தாத அயோத்தி அகழ்வாய்விற்கு தொடக்க காரணம் யார் என்பது தெரியும். ( ‘நான் அது கோவணத்தை தேடும் முயற்சி என்றா சொன்னேன் தேடுங்கள் கோவணம் கிடைத்தாலும் கிடைக்கும் என்றுதானே சொன்னேன் ‘ என்று தங்கள் மார்க்சிய கோவண தர்க்க வாத திறமையை காட்டுவீர்களாயின் அதற்கு அவசியமில்லாமல் இப்போதே ஒரு அட்வான்ஸ் மன்னிப்பு, நிபந்தனையில்லாமல்.) சீனாவில் மார்க்ஸிஸ்ட்களால் தகர்க்கப்பட்ட இயங்கி வந்த பெளத்த மடாலயங்கள், திபெத்தில் மார்க்சிஸ்ட்களால் மலம் உண்ண வைக்கப்பட்ட பெளத்த துறவிகள், ஸ்டாலினால் இன ஒழிப்பு செய்யப்பட்ட மத்திய சோவியத் (1917ெ1990/91) பெளத்த மக்கள், அரசியல் கைதிகளின் உறுப்புகளுக்கு ஒரு சந்தையையே உருவாக்கியிருக்கும் செஞ்சீனம் ஆகியவையெல்லாம் மார்க்சிஸ்ட்கள் செய்யாத விஷயங்களை அவர்கள் மீது சுமத்தும் பாசிஸ சதி. 1947க்கு பின் மட்டும் நுறெ¢றுக்கும் மேற்பட்ட (அவற்றுள் சில பல நுறெ¢றாண்டுகள் பழமையானவை) தங்கள் கோவில்களை இஸ்லாமியர் அழிக்க கண்டுவிட்டு தங்களது ஒரே ஒரு புனிததலத்தில் மட்டும், அதுவும் ஏற்கனவே நாற்பதாண்டுகள் ஒரு கோவிலாக இயங்கிய இடத்தில், மினார்கள் இல்லாத மசூதி போன்ற அமைப்பினை கொண்ட ஒரு கட்டிடத்தை மீண்டும் கோரியது ‘கோவணம் தேடும் ‘ விஷயமாக ஞாநிக்கு போகிவிட்டதென்றால், அது அவர் பாரத அறிவு மரபின் மீது கொண்டிருக்கும் பெரும் மதிப்பினைத்தானே காட்டுகிறது. ‘…அநேகமாக ஆதிவாசிகளாகத்தான் அல்லது குரங்குகளாகத்தான் இருக்க முடியும். ‘ என வனவாசிகளை குரங்குகளுடன் இணைத்து பேசும் அவர் வார்த்தைகளை கொண்டு நாம் அவர் ஒரு இனவெறியர் எனும் முடிவுக்கும் வரலாகாது.

ஏனெனில் அவர் கண்ணியமான மார்க்சியவாதி.

‘தற்போது பி.ஜே.பி ஆட்சியில் சி.எஸ்.ஐ.ஆர், நீரி, சிடிஆர்.ஐ, சி.பி.ஆர்.ஐ முதலிய அறிவியல் அமைப்புகள் எல்லாம் மாட்டு மூத்திரத்தின் சிறப்பை ஆராய்வதில் விஸ்வ ஹிந்து பரீஷத்துடன் ஒத்துழைத்து வருகின்றன. ‘ என கர்ஜிக்கிறார் ஞாநி. ஆனால் இந்த பாசிஸ்ட் ஹிந்துத்வ வெறியனான அரவிந்தன் நீலகண்டனோ இல்லை அதற்கு முன்பே அத்தகைய ஆராய்ச்சிகள் தேசிய அளவிலான அறிவியல் அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளன என்கிறான். யார் சொல்வது உண்மை ? பாசிஸ்ட்கள் பொய் சொல்ல தயங்குவதில்லை. வீர சவார்க்கரை எடுத்துக்கொள்ளுங்கள். தான் இனி எவ்வித பிரிட்டிஷ் விரோத நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவர்களும் இவரை நம்பின பிறகு, நேரம் பார்த்து ராஷ்பிகாரி போஸுக்கு கடிதம் எழுதி நேதாஜி போஸுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து…பிறகு நேதாஜி வீர சவார்க்கரின் இந்த பச்சை துரோகத்தை புகழ…சே சே நாட்டின் விடுதலைக்காக இந்த பாசிஸ்ட்கள் தான் எப்படி புளுகிறார்கள். வீர சவார்க்கரின் கால்துெசுக்கு பெறாவிட்டாலும் அவரது கருத்தியலில் உருவானதுதானே இந்த அரவிந்தனின் கருத்தியல் பின்னே இவனிடம் பொய்யும் புளுகுமின்றி வேறென்ன வரும் ? ஆனால் ஞாநி எப்படிப்பட்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர் ? தேசம் போன்ற குறுகிய எல்லைகளில் கட்டுண்டு கிடக்கும் பிற்போக்கு வாதியா என்ன ? பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு, சீக்கியர்கள் தனி தேசமென்கிற அறிவிப்பு, செஞ்சீன ஆதரவு, நேதாஜியை ஜப்பானிய ஏவல் நாயென்ற வர்ணனை, கலாமை வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப் என வர்ணனை…என எத்தனை விடாப்பிடியாக தேசத்தை அகில உலக மார்க்சிய பார்வைக்கு தியாகம் செய்திருக்கும் தியாக நேர்மை செவ்வொளி விட்டு பிரகாசிக்கும் எம்.என்.ராய் தொடங்கி ஈ.எம்.எஸ் ஊடாக யெச்சூரி வரையிலான பாரம்பரியத்தில் வந்தவரல்லவா ? அப்போது அவர் பேசுவதுதான் உண்மையாக இருக்க முடியும். அப்போது அக்கட்டுரையில் பி.ஜே.பி ஆட்சிக்கு முன்பே சாணம் குறித்த ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகள்… ? ப்பூ! அதை கொண்டு நாம் ஞாநி தகவலடிப்படையில் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட முடியாது.

ஏனெனில் அவர் கண்ணியமான மார்க்சியவாதி.

‘மூத்திரம், சாணி போன்ற அசிங்கமான விஷயங்களைப் பற்றி அமைச்சர் அளவில் பேசுவ ‘தாக கூறும் ஞாநி , ‘பி.ஜே.பி ஆட்சியில் சி.எஸ்.ஐ.ஆர், நீரி, சிடிஆர்.ஐ, சி.பி.ஆர்.ஐ

முதலிய அறிவியல் அமைப்புகள் எல்லாம் மாட்டு மூத்திரத்தின் சிறப்பை ஆராய்வதில் விஸ்வ ஹிந்து பரீஷத்துடன் ஒத்துழைத்து வருகின்றன ‘ என கூறுவது நிச்சயமாக சாணத்தின் கிருமி நாசினித்தன்மை மற்றும் இன்ன பிற குணங்கள் குறித்த ஆராய்ச்சியினை குறை கூறுவதாக அமையவில்லை என அவர் கூறுகிறார்.இதையும் நாம் பச்சை பொய் என்றோ புளுகு என்றோ கூறிவிடமுடியாது.

ஏனெனில் அவர் கண்ணியமான மார்க்சியவாதி.

இனி அரசு பணத்தை விரையும் செய்யும், சக மனிதர்களை கழிவாக காணும் மனப்போக்கு குறித்து ஞாநி கூறியிருப்பவற்றை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மாவோ தன் வயோதிகத்தில் வாலிபத்தை திரும்ப பெற செலவளித்த தன் அக்கறையையும் அரசதிகாரத்தையும், செல்வத்தையும் கொண்டு ஒருவேளை பல கோடி சீன உயிர்களை பஞ்சங்களிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். காலாவதியாகிப்போன ஏங்கல்ஸின் ‘முரண்பாட்டியங்கியல் ‘ நுலெின் சில சித்தாந்தங்களுக்கு முரணாகிறதென்று சோவியத் களையெடுத்த மெண்டலிய பயிர் மரபணுவியலாளர்கள் காப்பாற்றப்பட்டு, ‘முரண்பாட்டியங்கியல் ‘ வெளிப்பாட்டிற்கு ‘ஆமாம் சாமி ‘ போட்ட லைசென்கோ போன்ற போலி அறிவியலாளர்கள் மேலே வராமல் இருந்திருந்தால் சில மில்லியன் ரஷிய விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். மார்க்சியத்தில் அன்று ஊறி திளைத்ததாக நம்மையெல்லாம் ஜீவா (ஆம் ஜீவாவேதான் , அவரை ஸ்டாலினிஸ்ட் என்று குறிப்பிட்டதால் நான் அவரை படித்திருக்கவில்லை என ஒரு வாசகர் குறிப்பிட்டாரே அதே ஜீவா,) நம்ப சொன்ன ஸ்டாலின் செங்கோலோச்சிய அந்த சோவியத் நாடு விவசாயிகள் செத்தால் சாகட்டும் எத்தனை விவசாயி குடும்பத்தோடு பட்டினி கிடந்து செத்தால் எனக் கென்ன என்று அணு ஆயுத போட்டியில் இறங்காமல் இருந்திருந்தால் (சீனா சோவியத் ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் நாட்டு மக்கள் பஞ்சத்தால் வாடும் போதே அணு ஆயுத போட்டியில் இறங்கியவை. பாரதம் தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த பின்னே அணு ஆயுத சோதனையில் இறங்கியது.) இன்னமும் சில கோடி உயிர்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம். நேதாஜி பர்மாவிலிருந்து அரிசி கொடுத்தபோது அதை வாங்காமல் காலனிய அரசு வங்காளத்தில் சில இலட்சம் இந்தியர்களை சாக விட்டது. உள்ளூர் காம்ரேட்கள் நேதாஜியை கழுதையாகவும் கைப்பூனையாகவும் ஜப்பானியர் காலை பிடிக்கும் குள்ளனாகவும் கேலிப்படம் போடாமல் தங்களது அன்றைய பாசிச எதிர்ப்பு தோழர்களான அல்லது கூலி கொடுத்த எஜமானர்களான காலனிய பிரிட்டிஷ் சர்க்கார் மூலம் பர்மாவிடமிருந்து அரிசி வாங்க வகை செய்திருக்கலாம். வங்க பஞ்சத்தின் மானுட உயிர்பலிகள் தவிர்க்கப்பட்டிருக்கும். (ஆனால் அதெல்லாம் புரட்சி வெள்ளத்தை தடை செய்வதல்லவா. அது எங்கே இந்த பாசிச மரமண்டைக்கு புரிய போகிறது.) பல மதக்கலவரங்களை தடுக்க நடத்தப்படும் அகழ்வாய்வுதான் ஒரு வீண் தண்ட செலவு. ஆனால் ஈராக் போரை பயன்படுத்தி இந்திய முஸ்லீம் ஓட்டு வங்கியை தன் தன் பக்கம் இழுக்க இஸ்லாமிய அடிப்படை வாதிகளுடன் மார்க்ஸிஸ்ட்களும் காங்கிரஸும் தெருவில் இறங்குவது இருக்கிறதே …இறங்கி உள்ளூர் அப்பாவி மக்களின் மண்டையை உடைப்பது இருக்கிறதே அது தான் முற்போக்கு முகாமின் இறுதி வெற்றிக்காக செய்யப்படும் தியாகம் மிளிர்கிற மற்றொரு இடம். இஸ்லாமிய பயங்கரவாதம் அதனோடு கை கோர்க்கும் மார்க்சிய அடிப்படைவாதம் ஆகியவை சகமனிதர்களை கழிவாக காணவில்லை. சக மனிதர்கள் என்னும் கணத்தில் ஹிந்துக்களும், சதாம் ஸ்கட்டினால் தாக்கிய யூத பொதுமக்களும் இடம் பெறவில்லை என்றால் அது ஹிந்துக்களும் யூதர்களும் மனிதர்கள் என முற்போக்காளிகளால் கருதப்படும் அளவு முற்போக்கடையவில்லை என்பதைத்தானே காட்டுகிற்து. ஏனெனில் மும்பை தொடர்குண்டு வெடிப்புகளின் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதமல்ல மும்பையின் நில விலை உயர்ச்சியும் அதற்கு காரணமான சந்தை பொருளாதார சக்திகளுமே காரணம் என்று கூறும் இடதுசாரி அறிவுஜிவிகள் முகாம்களிலிருந்து வரும் ஒரு கண்ணியமான மார்க்சியவாதி அவர்.

‘பி.ஜே.பிக்குள் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் குறைவு. அத்வானி, வாஜ்பாய், ஜோஷி போன்ற மேல்சாதியினரின் ஆதிக்கமே அதிகம். ஆனால் பாபர் மசூதி உடைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு உடல்பலம் உடைய பிற்படுத்தப்பட்ட , தலித் வகுப்பினரின் சக்தியை பி.ஜே.பி திரட்டியாக வேண்டியிருக்கிறது. எனவேதான் உமாபாரதி, வினய் கட்டியார், நரேந்திர மோடி போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறது. ‘ என்று ஏதோ ‘சூத்திரர்கள் ‘ மற்றும் ‘அதி சூத்திரர்கள் ‘ ஒரு கட்சியில் சேர்க்கப்படுவது அவர்களது உடல்பலம் கருதி மட்டுமே என்று ஞாநி கூறுவதில் (ஞாநி, ‘காம்ரேட்கள் தைரியசாலி ஆவது எப்படி ? ‘, பிப்ரவரி 2, 2003 திண்ணை) சாதீயம் இருக்கிறது என்று கூட நான் கூறப்போவதில்லை. ஏனென்றால் எனக்கு தெரியும், வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அவர் சாதீயம் கடந்த துரித மெய் ஞானம் அடைந்த மார்க்சிய பண்டிதர். இன்று ஹிந்துத்வ சித்தாந்தத்தின் சித்தாந்த பரிணாமத்தை செதுக்கும் முக்கிய சிற்பிகளில் முதன்மையானவர்கள் சூத்திரர்கள் என்றும் அதி சூத்திரர்கள் என்றும் ஒதுக்கப்பட்டவர்கள் தான் என்பது போன்ற பாசிச பொய்கள் ஞாநியிடம் எடுபடாது.

ஏனெனில் அவர் ஒரு கண்ணியமான மார்க்சியவாதி.

(ஆனால் திரு. ஞாநி நீங்கள் கூறியதை வைத்துக் கொண்டு யாராவது ‘சட்டியில் இருப்பது தானே ஆப்பையில் வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிற்படுத்த வகுப்பு மக்கள் சேர்க்கப்படுவது இதை எண்ணித்தானா ? மேலே நாற்காலிகளில் ராமமூர்த்திகளும், நம்பூதிரிபாடுகளும், பட்டாசார்யாக்களும், நாயனார்களும், பாஸுக்களும் தானே வரமுடிகிறது எனவே உண்மையான சமுதாய இசைவிப்பு சங்க ஷாகாக்களில் தான் கிடைக்கும் போல. ‘ என்று நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் பாருங்கள் இந்த சிந்திக்கும் திறன் வர்க்க வர்ண எல்லைகளுக்கப்பால் மானுடம் முழுமைக்குமாக இருக்கும் ஒரு திறன். ஒரு குறிப்பிட்ட கட்சியின் பாலிட் பீரோ உறுப்பினர்களுக்கு மட்டும்தான் சிந்திக்கும் திறன் அளிக்கப்பட வேண்டும் என்கிற முற்போக்கு சிந்தனை இந்த குருட்டு இயற்கைக்கு இல்லை…என்ன செய்வது தோழர் ?)

தலித்களும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக பொத்தம் பொதுவாக கூறுகிறார். ‘அரவிந்தன் நீலகண்டன் என்கிற பெயரில் எழுதும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகனாகிய நான் ‘ எந்த இடத்திலும் மாட்டிறைச்சி சாப்பிடு என்றோ சாப்பிடாதே என்றோ சொல்லவில்லை என்பது ஒரு புறமிருக்க, இன்றைய தேதியில் இந்தியாவில் மாட்டிறைச்சிக்கும் கொலை களத்திற்கு அழைத்து செல்லப்படும் கால்நடைகளின் அவல நிலை குறித்தும், சர்வ தேச அளவிலான மிகச் சிறந்த விவரணப் படம் எடுக்கப்பட்டிருப்பது எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பாலும் அல்ல, மாறாக சர்வ தேச அளவிலான இஸ்லாமிய அமைப்பு ஒன்றினால்தான் என்பதையும், அண்மையில் பெனாஸிர் பூட்டோ கூட இறைச்சியை முழுமையாக விட முடியாவிட்டாலும் குறைக்கவாவது பாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் என்பதையும் கூறினால் அவர்களை எல்லாம் ‘முக்கால் ஹிந்து கால் முஸ்லீம் ‘ என்கிற சமன்பாட்டுக்குள் அடைத்துவிடும் திறம் திரு.ஞாநிக்கு உண்டு. பாரதத்தில் எத்தனை தலித் சமுதாயங்களில் மாட்டிறைச்சி சாப்பிடும் வழக்கம் உள்ளதோ அதைப்போலவே அதை ஒருவேளை அதை விட கூடுதலாக கூட பசுவுக்காக உயிர் தியாகம் செய்தது முதல் அதனை தங்கள் குல தெய்வமாக கருதும் பண்பாடும் பல வனவாசி மற்றும் தலித் சமுதாயங்களில் உண்டு. எனவே பொத்தம் பொதுவாக ‘மாட்டிறைச்சி சாப்பிடுகிற தலித்களும் முஸ்லீம்களும் ‘ என்று கூறுவது ஒரு வெறுப்பியல் ஒற்றைப்பரிமாண மனச் சித்திரத்தை உற்பத்தி செய்வதென்று சில பாசிஸ்ட்கள் கருதலாம். ஆனால் திரு.ஞாநி அத்தகைய தவறுகளை செய்யமாட்டார். சிந்து மாகாண முஸ்லீம்களின் குறுகிய நில உடைமை தன்மை கொண்ட ஸுஃபி மதில்களை (அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஹிந்து மேலாதிக்க பாஸிஸ்ட்கள் அவற்றை ஸுஃபி பாலங்கள் என கூறக்கூடும்) உடைத்து அங்கு முஸ்லீம் லீக் என்கிற முற்போக்கு இயக்கத்தை வேரூன்ற வைப்பதில் பெரும் பங்கு புரிந்த கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த

ஒரு கண்ணியமான மார்க்சியவாதி அவர்.

இந்த கண்ணியமான மார்க்சியவாதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை ‘என் பாவமே என் பாவமே எனது மகா பாவமே ‘ என்று ஒரு பாவ மன்னிப்பாகவே கேட்பதுதான், அரவிந்தன் நீலகண்டனை போன்ற குறுகிய மனப்பான்மையும் மதவெறியும் கொண்ட சவார்க்கரிய ஹிந்து தேசியவாதிக்கான கதி மோட்சமாக ஒரு ஆதர்ச ஸ்டாலினிய உலகில் இருக்க கூடும். ஆனால் மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி. இது இன்னமும் பாரதம். கொல்கத்தா நகர வீதிகள் கூட தின்னாமென் சதுக்கங்கள் அல்ல; திருவனந்த புரம் ஸ்டாச்சு ஜங்ஷன் கூட ஒரு தேர்தல் விட்டு ஒரு தேர்தல் காலம் மாஸ்கோ செஞ்சதுக்கம் ஆவதில்லை. நீங்கள் வேண்டுமானால் இந்திய ஸ்டாலின்களின் லைசன்கோவாக இருக்கலாம் ஆனால் தோழரே உங்கள் இந்திய ஸ்டாலின்கள் (வங்கத்து டைனோசர்கள் உட்பட) இன்னமும் அரசாளவில்லை எனவே நம் நாட்டு தார் பாலைவனத்துக்கு நீங்கள் என்னை சைபீரிய வாசம் அனுப்பவும் முடியாது. என்ற போதிலும் ஒன்று செய்யலாம் தோழர், திண்ணையை ‘ப்ராவ்தா ‘ ஆக்க முயற்சிக்கலாம். ஆனால் ‘என்னைப் பற்றி எழுதினால் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை விமர்சிக்கும் கட்டுரையை வெளியிட்டால் ஆசிரியர் குழு வருத்தம் தெரிவிக்க வேண்டும் ‘ என்கிற ‘சார் இவன் என்னை நுள்ளிட்டான் நீங்க இவனை அடி கொடுத்து பெஞ்ச் மேலே ஏத்தலைன்னா நான் போய் எங்க அப்பாருகிட்ட சொல்லுவேன் ‘ என்பது போன்ற மனநிலையிலிருந்து வளர்ச்சி அடைய வேண்டுமென்பதை ‘நிபந்தனையற்ற மன்னிப்பு ‘ என்கிற கோரிக்கையின் அச்சமின்றி நான் உங்களிடம் சொல்லலாமென்று நினைக்கிறேன். அல்லது இந்த கட்டுரை( ?)க்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமா ?

மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…நான் மன்னிப்பு கேட்க போவதில்லை.

திரு. ரஃபீக் அவர்களது கடிதம் மிகவும் மென்மையாக தனது நிலைபாட்டை கூறியது. மாற்று கருத்தினரை கீழ்த்தரமாக தாக்குகையில் அவர்களும் கருத்து வேறுபாடுகளை தாக்குவதை விடுத்து அதே கீழ்த்தர வேகத்துடன் மீண்டும் தாக்க வழி செய்யும். இதன் விளைவாக கருத்து பரிமாற்றத்துக்கு பதில் வசை பரிமாற்றமே நடக்கும். அதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சமய விவாதங்களில் பிற நம்பிக்கைகளை வசை பாடுவதை கைவிட வேண்டும் ஏனெனில் அது நீங்கள் புனிதமாக கருதுபவற்றை பிறர் வசை பாட வழி வகுப்பதாகும் என்பதாக ஒரு நபி மொழி உண்டு. இதன் அடிப்படையிலேயே திரு. ரஃபீக்கின் கடிதம் அமையப்பட்டிருந்ததாக கருதுகிறேன். இந்நிலையில் ஒரு இஸ்லாமியரை எவ்வித ஆதாரமுமின்றி ‘ராம பக்தர் ‘ என குறிப்பிடுவது அவரை ‘இணை வைத்தல் ‘ எனும் இஸ்லாமிய மார்க்கத்தில் விலக்கப்பட்டிருக்கும் ஒரு பழியை சுமத்துவதாகும். இதனால் ஒரு இஸ்லாமியர் ‘ராம பக்தர் ‘ ஆகிவிட்டார் என்பது இன்று புற்றீசல் என பரவிவரும் பயங்கரவாதிகளுக்கு அவர் மீது வன்முறையை பயன்படுத்த ஒரு துணெ¢டுதலாக அமையக்கூடும். ஞாநி பாணியில் ‘வேண்டுமென்றே என் வார்த்தைகளை திரித்து என் மீது வன்முறையை துணெ¢ட முயற்சிக்கிறார் ‘ என்று சொல்ல ஞாநியை விட திரு.ரஃபீக் அவர்களுக்கு முகாந்திரம் உள்ளது ஆனால் திண்ணை கடிதங்கள் மூலம் நானறிந்த வகையில் திரு. ரஃபீக் அப்படி செய்யமாட்டார். ஏனெனில் திரு. ரஃபீக் ஒரு கண்ணியமான மார்க்சியவாதி அல்ல மாறாக ஒரு தைரியமான நல்ல மனிதர் என நினைக்கிறேன். மின்மினி பூச்சி வெளிச்சத்தில் குளிர் காய முயன்ற குரங்கிடம் அறிவுரை கூறியதாம் துகெ¢கணாங் குருவி. அறிவுரையால் ஆத்திரம் கொண்ட குரங்கு குருவி கூட்டை பிய்த்து போட்டதாம். ஆனால் திரு. ரஃபீக் ஒருவிதத்தில் தப்பித்திருக்கிறார். ரஃபீக் என்கிற பெயரில் எழுதும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் என அவருக்கு காக்கி நிக்கர் போட்டுவிடாத திரு.ஞாநியின் பெரிய மனசுக்கு திரு.ரஃபீக் நன்றியுடையவராக இருப்பாராக.

அடுத்ததாக திரு.கே.ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் சில தகவல்கள் மற்றும் கருத்துகள் குறித்து.

‘அவர் ரோமிலா தாப்பர் கட்டுரையை எப்படி திரித்து எழுதியுள்ளார் என்பதை திண்ணை ஆசிரியர் குழுவிற்கு நான் விரிவாக எழுதினேன். அதற்கு இது வரை பதில் வரவில்லை. அரவிந்தன் எழுத்துக்கள் குறித்து விவாத களத்தில் விரிவான விமரிசனங்கள் உள்ளன. லைசென்கொ மற்றும் ஹால்டேன் பற்றி அவர் எழுதியவை தகவல் பிழைகள் அல்ல. உண்மையை மறைக்கும் முயற்சிகள். ஹால்டேன் பொது வாழ்வை விட்டு ஒதுந்கியதாக அரவிந்தன் குறிப்பிட்டது பொய் என்று அனாமிகா நிருபித்தார். ‘

ரொமிலா தாப்பர் குறித்த கட்டுரைமுன் வைக்கும் வாதம் குறித்து நான் எந்த பதிலையும் வைக்கவில்லை என்பது அரை பொய்யா, கால் பொய்யா அல்லது முழுப்புரட்டா என்பது குறித்து எனக்கு முழுமையான தெளிவில்லை. ஆனால் திண்ணை விவாத களத்தில் அதற்கு மிகத்தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது என கருதுகிறேன்.

கட்டுரையில் கூறப்படும் கருத்துகள்:

1. ரொமிலா தாப்பர் ஆரிய இனவாதத்தை பாரதிய தேசியவாதிகள் தங்கள் உயர்ஜாதி சமுதாய மேன்மையை இனரீதியில் நியாயப்படுத்தவும் மற்றும் அன்றைய காலனிய அரசாளர்களான பிரிட்டிஷாருடன் தாங்கள் இனரீதியில் உறவுடையவர்கள் என உறவு கொண்டாடவும் பயன்படுத்தினர் என கூறுகிறார். இதற்கு அவர் கொடுக்கும் சான்று கேஷப் சந்திர சென்னின் ஒரு மேற்கோள். கீழே ‘ஆரிய கேள்வி ஒரு மறுபார்வை ‘ எனும் தலைப்பில் பேரா.தாப்பர் 11 அக்டோபர் 1999 இல் அக்காடமிக் ஸ்டாஃப் காலேஜ் , ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் பகுதியை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். (தமிழில் மொழி பெயர்த்து கட்டுரையில் அளித்திருந்தேன். ஆனால் அதில் வேண்டுமென்றே நான் பேராசிரியையின் வார்த்தைகளை திரித்து விட்டேன் எனக் கூறக் கூடும்.)

‘On the Indian nationalist side it could be argued that the upper caste Indian who has always been regarded as ‘the ‘ Indian, that was the creator of the Indian civilization is Aryan and is related in fact to the coloniser, to the British. And there is one statement which I am very fond of quoting. I quote it in everything that I write, which is Keshab Chandra Sen talking about the coming of the British to India being the coming together of ‘parted cousins ‘ which in a sense gives you an idea of part of the reason why there is the interest in this theory. ‘

2. இதனை நான் பினவரும் தகவல்களால் மறுத்திருந்தேன். பாரதிய தேசியவாதிகள் என்று கூறுகையில் அது கேஷப் சந்திர சென்னை சேர்க்கமுடியாது என்றும் கேஷப் சென் ஏறக்குறைய கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்ட ஒரு சமுதாய சீர்திருத்தவாதியே என்றும்

கூறியிருந்தேன். மேலும் அவர் கூட ஆங்கில ஆரிய இன சகோதரத்துவத்தை குறித்து பேசியது சாதியத்தை ஆதரித்தல்ல என்றும் அவரே ஒரு சாதிய மறுப்பாளர் என்பதுவும் தான் உண்மைகள். பின்னர் ஸ்வாமி விவேகானந்தர் ஸ்ரீ அரவிந்தர் ஆகிய பாரதிய தேசியத்தின்

நவீன சிற்பிகள் சாதியம் மற்றும் ஆரிய இனவாதம் இரண்டையுமே எதிர்ப்பதையும் இரண்டையும் இணைப்பதை எதிர்ப்பதையும் மேற்கோள்களுடன் சான்று காட்டியிருந்தேன்.

இதில் நான் எங்கு பேரா.தாப்பாரின் கருத்துகளை திரித்துக் கூறியிருந்தேன் ?

அடுத்ததாக ஹால்டேன்.

இந்த விஷயத்தில் விவாதத்திற்கு அடிப்படையாக விளங்கிய கட்டுரையின் சோவியத் உயிரியல் ெலைசன்கோ ஓர் சித்தாந்த உதயம் எனும் பகுதியை அப்படியே தருகிறேன்:

மார்க்ஸ் தன்னை டார்வினின் சமூகதள வாரிசாகவே பாவித்து வந்தார். எனவே தன் மூலதனம் நுெலை டார்வினுக்கு அர்ப்பணிக்க முனைந்த போது டார்வின் அதை மறுத்து விட்டார். டார்வினிய பரிணாமத்தின் அப்போதைய பலவீனம் மரபியல் செயல்பாடுகளின் அறிவின்மையே. பிரெடரி ஏங்கல்ஸ் இதற்கான தீர்வினை லமார்க்கிய மரபியல் செயல்பாட்டினை கொண்டார். அக்காலத்தில் அதுவே முன்வைக்கப்பட்ட தீர்வாக இருந்தது. ஒரு உயிர் அதன் வாழ்வின் போது அடையும் மாற்றங்களின் கூட்டு அதன் சந்ததிகளுக்கு கடத்தப்படும் எனும் இந்த மரபியல் செயல்பாடு முரண்பாட்டியங்கியலுக்கு உகந்ததாக ஏங்கல்ஸால் கருதப்பட்டது. இதில் உயிரியல் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் ஐரோப்பிய கலாச்சார முதன்மை வாதமும் கலந்திருந்தது. உதாரணமாக அவர், ‘ஒரு ஐரோப்பிய குழந்தை இயல்பாகவே ஒரு ஆஸ்திரேலிய ஆதிவாசியை விட கணித விதிகளை எளிதாகக் கற்றுவிட முடிவதை நாம் காணலாம். ‘ என குறிப்பிடுகிறார். (இந்தியாவின் கலாச்சாரம் குறித்த மார்க்ஸின் பார்வையும் இச்சித்தாந்த அடிப்படையிலேயே அமையப் பெறுகிறது. தமிழகத்தின் மார்க்சீய அடிப்படைவாதியான ஞானியிலும் மார்க்ஸின் காலனீய கலாச்சார பார்வையினை காணலாம்.) எனவே ஸ்டாலினின் காலகட்டத்தில் உருவான லைசென்கோ நிகழ்வு ஒரு மார்க்சீய அடிப்படை அசைக்கப்பட்டதின் பேரில், அவ்வடிப்படையின் மேலெழுப்ப பட்ட அதிகார இயந்திரத்தின் எதிர்வினை எனவே காண வேண்டும்.இவ்வகையில் எந்த மத்திய கால கத்தோலிக்க புனித விசாரணைகள் மற்றும் தீயெரிப்புகளை விட சோவியத் விசாரணைகளும் தண்டனைகளும் மிகுந்த துல்லியத்தன்மை வாய்ந்தவையாகவே இருந்தன.

டார்வினிய பரிணாம வாதம் தன்னியல்பில் பெரும் பலவீனமாக கருதிய மரபியல் செயல்முறையினை மெண்டெலிய மரபணுக் கொள்கையால் தீர்த்துக் கொண்டது. வெய்ஸ்மானால் முன்வைக்கப்பட்ட மரபியல் தொகுதிகள் மற்ற உயிரியல் தொகுதிகளிலிருந்து பிரிந்திருப்பதும், மெண்டலிய விதி சார்ந்த மரபணு இயக்கமும் பரிணாம வாதத்தினை முழுமையாக அறிவியல் தன்மைக்கு கொண்டு சென்றன. மார்க்சீயம் இங்கு ஒரு அடைக்கப்பட்ட சித்தாந்தமாக செயல்பட்டது. இந்நிகழ்வுகளின் முரண்தன்மை நோக்குதற்குரியது. முக்கியமாக இடதுசாரி சோஷலிஸ்ட் எண்ணவோட்டம் கொண்ட பல பிரிட்டிஷ் உயிரியலாளர்கள் மரபியல் துறையின் முன்னோடிகளாக உள்ளனர். உதாரணமாக கார்ல் பியர்சன், ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்கள். அதே சமயம் அவர்கள் இனதுயெ¢மை வாதிகளாகவும் இருந்திருக்கின்றனர். (அதே சமயத்தில் மற்றொரு பரிணாம வாத தத்துவவியலாளரான ஹென்றி பர்கூசன் இனரீதியாக மரபியல் தன்மைகள் காலம்காலமாக சேர்ந்து தனி இனத்தன்மைகள் உருவாகக் கூடும் என்பதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.)

1930 களில் சோஷலிசத்திலிருந்து மார்க்சிசத்திற்கு பரிணமித்துக் கொண்டிருந்தவர் ஹால்டேன். மரபணு சார்ந்த மனிதருக்கு மனிதர் ஏற்படும் வேறுபாடுகள் சோஷலிசத்திற்கு பெரும் ஆதரவான காரணமாக அமையும் என அவர் கருதினார். ஆனால் மார்க்சீயத்திற்கு இது ஏற்படுத்தும் தத்துவார்த்த சிக்கல்களையும் அவர் உணர்ந்திருந்தார். 1932 இல் புதிதாக உயிர்த்தெழும் மரபணுவியல் துறையை அவர் ‘சோவியத் குடியரசு அறிவியல் மீது கொண்டுள்ள பற்றுக்கான பரீட்சை ‘ என குறிப்பிட்டார். ஆனால் மீண்டும் கால வேடிக்கையாக 1930 களில் தீவிர மார்க்சீய பற்றாளராக ஹால்டேன் மாறிய அதே சமயத்தில்தான் லைசென்கோ தன் போலிெஅறிவியலை சோவியத் அதிகாரத்தின் தத்துவ ஆசீர்வாதத்துடன் மிகக் கொடூரமாக அரங்கேற்றிக்கொண்டிருந்தார். ஹால்டேனின் லைசென்கோவிசத்திற்கான எதிர்வினைகள் முடிந்த வரை மார்க்சீய பாதுகாப்புக்காக உண்மையை மறுதலிப்பதாகவே இருந்தது. ஸ்டாலினின் தனிமனித துதி வட்டத்திற்கு எவ்விதத்திலும் ஆளாகாத அறிவியலாளரான ஹால்டேன் லைசென்கோ நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் சித்தாந்த பற்றன்றி வேறல்ல. இவ்விதத்தில் ஹால்டேன் தன் தனிப்பட்ட நண்பரும் ரஷியாவின் சிறந்த மரபணுவியலாளருமான நிகலொய் வவிலாவ் லைசென்கோவினால் பெற்ற மரணத்தை கூட பொருட்படுத்த வில்லை. வவிலோவ் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு சிறையில் உயிரிழந்தார். அவரது விசாரணை குறித்த பதிவு இதனைத் தெளிவாக்குகிறது.

விசாரணையாளர் க்வாத்: நீர் யார் ?

நிகலொய வவிலாவ் : நான் அறிவியலாளர் வவிலோவ்

விசாரணையாளர் க்வாத்: நீர் அறிவியலாளர் அல்ல. நீர் வெறும் ஒரு மலக் குப்பை 14

லைசென்கோவிற்கு ஆதரவாக ஹால்டேன் வானொலி விவாதங்களில் தனது சக சிறந்த மரபணுவியலாளர்களான ரொனால்ட் பிஷர் போன்றவர்களை எதிர்த்து பங்கெடுத்தார். பின்னர் அறிவுடைய எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத அளவு லைசென்கோ ரஷிய உயிரியலை அழித்தொழித்திருப்பது வெளிவந்த பின் தன் பொது வாழ்விலிருந்தே ஹால்டேன் ஒதுங்கிக் கொண்டார். ஹால்டேனின் எதிர்வினையின் முக்கியத்துவம் எவ்வாறு ஒரு சிறந்த அறிவியலாளர் கூட தன் சித்தாந்த பற்றினால் மானுட சோகங்களுக்கு துணை போக முடியும் என்பதே. பற்று கொள்ளும் சித்தாந்தத்தின் தன்னியல்பும் இத்துணை போதலுக்கு பெரும் பங்காற்றுகிறது.

(இப்பகுதிக்கான தகவல்கள் பின்வரும் நுலெ¢களில் இருந்து எடுக்கப்பட்டவை:

ஃ ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Dialetics of Nature, Third Revised Edition, Progress Publishers, மாஸ்கோ 1964.பக்ெ271

ஃ கார்ல் மார்க்ஸ், ‘The British Rule in India ‘ (1853), கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Articles on Britain , Progress Publishers, மாஸ்கோ 1971 பக்ெ166ெ72

ஃ ஞானி, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை ? ெ ஒப்பிட்டு பார்க்க ஹனுமான் குறித்த

ஞானியின் வார்த்தைகளை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளுடன்.

ஃ ஜே.பி.எஸ் ஹால்டேன், The Inequality of Man, Penguin 1932.

ஃ Soyfer, Valery Lysenko and the Tragedy of Soviet Science (Rutgers, 1994) )

இதில் கேள்விக்கு உட்படுத்தப்படுவது ‘பின்னர் அறிவுடைய எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத அளவு லைசென்கோ ‘ ரஷிய உயிரியலை அழித்தொழித்திருப்பது வெளிவந்த பின் தன் பொது வாழ்விலிருந்தே ஹால்டேன் ஒதுங்கிக் கொண்டார். ‘ எனும் வரியின் இறுதிப்பகுதி மட்டுமே. (ஓ…மறந்துவிட்டேன், ‘கட்டுரைகள் என்ற பெயரில் எழுதியுள்ள அரை,முக்கால்,முழுப் பொய்களுக்கு பதில் சொல்லுவது ‘ ‘அவாள் ‘ வேலை அல்ல என்பதால், நேரமின்மை காரணமாக இந்த ஒரு வரி ஐந்து வார்த்தை பொய்க்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறார் போல.)

1. ஹால்டேன் மிக முக்கியமான பிரிட்டிஷ் இடதுசாரி பத்திரிகையின் பிரதம கட்டுரையாளராக திகழ்ந்தவர். ஒரு சில ஆண்டுகளில் நுறெ¢றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். ஆனால் லைசென்கோவினை முதலில் ஆதரித்த ஹால்டேன் பின்னர் மனமொடிந்து கட்சியிலிருந்து வெளியேறினார். உதாரணமாக கொலம்பிய கலைக்களஞ்சியத்தில் (ஆறாவது பதிப்பு) ஹால்டேன் குறித்த உள்ளீடு பின்வருமாறு கூறுகிறது, ‘Disillusioned with Marxism in the 1940s and 50s, he eventually moved to India to conduct scientific research. ‘

2.ஹால்டேனின் நல் நம்பிக்கையை சோவியத்கள் பயன்படுத்தி அவரது தலத்தை தங்கள் ஒற்றுவேலை கேந்திரமாக பயன்படுத்தினர். என்றும் இதன் விளைவாகவே அவர் ஒரு போர் எதிர்ப்பினை காரணம் காட்டி இந்தியா வந்தார் என்று பலர் கருதுகின்றனர். உதாரணமாக

பிரிட்டிஷ் உளவுத்துறையின் மேலதிகாரி ஒருவரால் எழுதப்பட்ட தன் பணி நினைவு நுலொன ‘ஸ்பை கேச்சர் ‘ ல் இத்தகவல் குறித்து காணலாம்.

3. லைசென்கோவை பொறுத்தவரையில் மார்க்சிய சித்தாந்த வெறியே ரஷிய விவசாயத்தையே நிர்மூலமாக்கிய இந்த கோமாளி கூத்தை அரங்கேற்ற உதவியது.

இந்த பொய்யைத்தான் அனாமிகா விவாததளத்தில் தோலுரித்து காட்டியிருந்தார். இவ்விவாத இழையை முழுமையாக வாசித்தவர்கள் அறிவார்கள் யார் எதை எப்படி நிறுவினார்கள் அல்லது நிறுவவில்லை என்பதை.

ஹால்டேன் குறித்து எனது கட்டுரையில் எங்கும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. பொதுவாக எனது கட்டுரைகளில் எவரைப்பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஹால்டேனிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். நியோ டார்வினியத்தின் முக்கிய் சிற்பிகளில் ஒருவரான ஹால்டேனின் ஆன்மிக தேடலுக்கு தவறுதலான வடிகாலாக மார்க்சிசம் அமைந்ததால் அவரது வாழ்வே சோகமாகிவிட்டது என்பதே என் நிலைபாடு. இது ஒரு தனிக்கட்டுரைக்கான விஷயம் என்பதால் இது குறித்து அதிகம் இங்கு கூறவில்லை. கோவை ஞானியின் கருத்துலகில் அவரது மார்க்சிய பற்று உருவாக்கியுள்ள குறைபாடுகள் குறித்தும் தனிக்கட்டுரை தேவைப்படும்.

***

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்