மனித உரிமை ஆணையம்..!!!

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

கோச்சா ( எ ) கோவிந்த்


—-

மனித உரிமைகள் நிலை நிறுத்துவது அனைவரின் தலையாய கடமை. அதற்கு மனித உரிமைகள் ஆணையம் நிச்சயத் தேவை ஆகும்.

அதே சமயம், கரூர், மேட்டு மகாதனபுரம் மகாலஷ்மி கோவில், மண்டையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வுக்கு மனித உரிமைகள் ஆணையம் எந்த தீர்வும் தர முடியாது.

அந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்பந்திக்கப்பட்டு அவர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்படுகிறது என்றால் , அப்படி பாதிக்கப்படுபவர்களோ அல்லது பொது மனுவோ தாக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

அப்படி ஒரு வேளை நீதிமன்றம் தடை விதித்தால், மண்டையில் தேங்காயை உடைக்க விரும்பும் சில மரமண்டைகள் வேண்டுமானால் தங்களின் மனித உரிமை பறிக்கப்படுவதாக , மனித உரிமை ஆணையத்தின் மூலம் வாதாடலாம்.

மனித உரிமை ஆணையமும் அவர்களுக்கு தேங்காய் தலையில் உடைக்கும் உரிமையை வாங்கித்தர பேனர் பிடித்துக் கொண்டு பொது இடத்தில் போராடும்.

சந்தேகமிருப்பவர்கள், கல்கத்தா, தனஜேய் சத்தர்ஜி , விஷயத்தில் மனித உரிமை குழுக்கள் அந்த அயோக்கியனை , தூக்கிலிடுவது தடுத்த நிறுத்த போராடியதை படித்து உணரலாம்.

மெழுகுவர்த்தி ஏந்தி தூக்கிலிடப்படும் கயவனுக்கு ஏசுநாதர் அந்தஸ்து தர நினைத்தது கேவலம்.

ஒரு வேளை விவசாயத்தில் களை எடுப்பது கூட இவர்கள் எதிர்த்திருப்பார்கள் – செடிகள் உரிமை ஆணைம் அமைத்திருந்தால்.

மேலும் , ஒண்ணுக்கு போகுமிடம் என்ற அளவில் மட்டும் பிறப்புறுப்பைப் பற்றி அறிந்திருக்கும் இவர்களது சின்னஞ்சிறு மகளை யாராவது காமுகன் சிதைத்து, புணர்ந்து, சூறையாடி, துடிதுடிக்கக் கொன்றால், தூக்குத்தண்டனை உடனே நிறைவேற்று எனக் கொடிபிடிக்கலாம்.

ஜெயிலில் வசதி மறுக்கப்படுவது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று , ஜெயில் வசதிகளைப் பெருக்கி, தூக்குத்தண்டனையையும் எடுத்து விட்டால் அப்புறம் சூப்பர் தான்.

சுகத்துடன் தவறுகள் பண்ணி, ஜெயிலில் சுகவாசம் செய்து பின் ஒரு அரசியல் தலைவர் பிறந்தநாளில் விடுதலை ஆகிவரலாம், என்ற நிலை வந்தால்…. ? நீங்களே யோசியுங்கள் எப்படியிருக்கும் என.

மனித உரிமைக் கழகம், நமது கழகங்கள் போல் தான் ஆகிக் கொண்டிருக்கின்றன.

gocha2004@yahoo.com

—-

Series Navigation

கோச்சா (எ) கோவிந்த்

கோச்சா (எ) கோவிந்த்