மனிதக் கறை!மனித அக்கறை!

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

கவியோகி வேதம்


தேசம் எங்கும் வன்முறையா ?-இiந்தத்
..தெய்வ மண்ணில் பலகறையா ?
பாசம் விதைக்கும் பலசரிதம்-கேட்டும்
..பாவம் புரிந்தால் அதுசரியா ?
தியாகி பலபேர் ‘முள் ‘அகற்றி-உழைத்துச்
..செய்தார் இந்த ‘நந்தவனம் ‘!
வியாதி பிடித்த உறவினர்கள்-வேரும்
..விற்றார்!-ஆச்சே! பாலைவனம்!
காலை எழுந்து ‘செய்தி ‘ கண்டால்,-நம்
..காதில் ரத்தம் வடிகிறதே!
வாலைப் பருவப் பெண்கதைகள்- ‘கண் ‘
..வாயில் நீரைக் கொணர்கிறதே!
கோவில் கொள்ளை ஒருபக்கம்!-அட!
..குடிசை கலைத்தல் ஒருபக்கம்!
காவல் உடையில் பலகறைகள்!-அதைக்
..காக்கச் சதிகள் பலபக்கம்!
யாரை ஏழை நம்பிடுவான் ?-அவன்
..எவனை அண்டி வாழ்ந்திடுவான் ?
கோரைப் பல்லைக் காட்டி ‘விதி ‘-தினம்
..கொக்க ரித்தால்,எங்குசெல்வான் ?
காந்தி மகான்கள் பலர்வரினும்-iஇந்தக்
..கறைகள் துடைக்க வழியுண்டா ?
‘சாந்தி ‘ சாந்தி என நல்லோர்-தினம்
..ஜபமாய்ச் செயினும் பலன்உண்டா ?
அடிகள் வாங்கிச்,சிறையிருந்து-பலர்
.. ‘அன்னை ‘ விலங்கை உடைத்தாரே!
கொடிகள் ‘கொள்மு தலிலும் ‘ஊழல்-iஇன்று
..கோடி!-அன்னை அழுதாளே!
தவத்தைக் கலைத்(து)ஓ! சித்தர்களே!-என்
..தாயைக் காக்க வாருங்கள்!
சிவனைச் சார்ந்த யோகியரே!-நம்
..தேசம் நிமிர்த்தச் சேருங்கள்!

***
(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்