மனசெல்லாம் இசை வெள்ளம்.

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


____
மலை முகடுகளை
தொட்டு அழையும் முகில்கள்
என்னை சிலிர்க்க வைக்கும்
சின்ன சின்ன மழைத்துளி
தெப்பமாக
தன்னை நனைக்கும்
பிரயத்தனத்தில் இயற்கை
மொட்டையாக்கிப்போன
பனிக்காலத்தை
விட்டு விலத்தி
மெல்ல மெல்ல
ஒரு கருவின் அசைதல் போல்
தன்னை அழுகுபடுத்த முனையும்
மரங்களின் அரும்புகள்.
சக்கு சக்கு சக்கு
சளக் சளக் சளக்
டக்கு டக்கு டக்கு
கைய்யாாாா
ஏஏஏஏ
ஆஆஆஆ
என் மனசெல்லாம் மழைவெள்ளம்.
எதை என் உணர்வுகள் சேகாித்தக்கொண்டது.. ?!
எனக்குள் ஏதோ ஆனந்தப்பெருக்கம்.
தமது கைபிடி விடாது
இந்த இசையை எழுப்பிய படி
மழைவெள்ளத்துள்
விழையாடும் பட்டாம் பூச்சிகள்.
அப்படியே அப்படியே
கண்ணறும் தூரம் வரை
அந்த பட்டாம் பூச்சிகளை இரசித்தபடி.
ஏதோ ஒரு உணர்வு பரபரக்க
ஓடிச்சென்று மெய்மறந்து துள்ளி
விழையாடினேன் அந்த வெள்ளத்துள்.
கைகளை இறுக மூடியபடி
கண்களை திறந்தும் மூடியபடிக்கும்
கால்களால் வெள்ளத்தை
அடித்தும் உதைத்தும்
வெடி செய்தும்
டப் டப் டப்
சக்கு சக்கு
சளக் சளக்
சதக் சதக்.
? ? ? ?
அடடா மனசெல்லாம் இசைவெள்ளம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
08-04-2005

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.