மணிப்பூரின் போர்க்கோலம்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

புதியமாதவி


====

தேசப்படத்தின்
எல்லைக்கோடுகள்
கிறுக்கிய
எல்லைமீறிய
வன்புணர்ச்சியில்
மணிப்பூரின் நிர்வாணம்.

முலைகளே ஆயுதமான
போர்ப்படை
புறப்பட்டுவிட்டது
வலிகளின் வரிசையுடன்.

எதிர்க்க முடியாத
அவலத்தில்
தோற்றுப்போகிறது
நேற்றுவரைக் குறிவைத்த
உன் நீண்ட துப்பாக்கிகள்.

….அன்புடன்,

புதியமாதவி,
மும்பை

Series Navigation