மஞ்சள் மகிமை

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

கான்ஸருக்கும் கட்டிகளுக்கும் எதிர்ப்பாக மஞ்சள்


Kumamoto University குமாமாடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற பொருள் இண்டர்லூண் -8 என்ற புரோட்டான் உருவாவதை தடுப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இது interleukin-8 (IL-8) என்ற புரோட்டான் வெள்ளை ரத்த செல்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துவந்து அங்கு எரிச்சல் அரிப்பு போன்றதை உருவாக்குகிறது. இந்த curcumin என்ற மஞ்சளில் இருக்கும் பொருள் ஜீனில் இருக்கும் kappa-B (NF-kappaB) என்ற அமைப்பு மேற்கண்ட ஐ.எல்.8 புரோட்டானை உருவாக்கும் இடம். இதனையும் இது கட்டுப்படுத்துகிறது

இதன் பொருள் என்ன ? கட்டியில் இருக்கும் செல்கள் மிக அதிக அளவுள்ள ஐ.எல்.8ஐ சுரக்கின்றன. இந்த புரோட்டான் அந்த இடங்கள் சிவந்து போவதற்கு காரணமாக ஆகின்றன. கட்டியில் இருக்கும் செல்களை தூண்டும் அதே நேரத்தில், அந்த இடத்தில் இருக்கும் தடுப்புசக்தியையும் குறைக்கின்றன. ஆனால், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற பொருள், (இதுவே மஞ்சள் மஞ்சளாக இருப்பதன் காரணம்) கட்டிகள் பெரியதாக ஆகாமல் தடுக்கின்றன என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

ஜப்பானிய ஆராய்ச்சி, கான்ஸர் என்ற மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது. இதுவே முதன் முதலாக குர்குமினையும் ஆரோக்கியத்தையும் இணைத்து வந்த முதல் கட்டுரை. முன்பு வந்த செய்திகள், காயங்கள் ஆறுவதற்கும், அல்ஜைமர் வியாதிக்கும், மல்டிபிள் செலரோசிஸ் வியாதிக்கும் மஞ்சள் ஒரு மருந்தாக ஆகலாம் என்று வந்த செய்திகள்.

இன்னொரு ஆராய்ச்சியில், மஞ்சள் தேய்க்கப்பட்ட தோல், கான்ஸர் வியாதியஸ்தர்கள் ரேடியேஷன் மருத்துவம் எடுத்துக்கொள்ளும்போது அந்த தோல் புண்ணாக ஆகாமல் தடுப்பதை தெரிவிக்கிறது. குர்குமின் டோஸ் கொடுக்கப்பட்ட கட்டிகள் வளர்வது நின்று போவதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

***

Series Navigation