பொறித்த அப்பள பொறியல் நட்பு
வே பிச்சுமணி

பச்சை அப்பள கட்டு போல
பாலர்பள்ளி முதல்
எட்டாம்வகுப்பு வரை நட்பு
ஒரே கூடையில் இருந்தாலும்
ஒட்டாது பொறித்த அப்பளம் போன்ற
பொறியல் கல்லூரி நட்பு
தோப்பாக இருந்தாலும்
ஒவ்வொரு தென்னைக்கும்
இடைவெளி பத்து அடி
சகவகுப்பு மாணவரை
போட்டி பந்தய குதிரையாய்
எண்ணும் எஞ்சியினியர் மனம்
தஙகளது தடத்தின் முடிவிலுள்ள
வேலை என்னும் காரட்டை
பிடிக்க தள்ளிவிட்டுகூட
ஓடும் குதிரைகளும் உண்டு
உதட்டு அளவு நட்பில்
உரசல் வருவது அதிசியம்
கல்லூரி முடித்ததும்
முகமன் சொல்ல கூட தயங்கும்
பொறித்த அப்பள பொறியல் நட்பு
உடைந்து நெருங்கிய அப்பளமாய்
சில நல்ல நட்புகளும்
தாமரையாய் பூப்பது உண்டு
v.pitchumani@gmail.com