பெரியாழ்வார்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

கவியோகி வேதம்


பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்!
அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்து

வைரமே ‘மாலனிடம் ‘ மயங்கியதை அதிசயித்துத்
தைரியமாய் ஒப்படைத்த தனிச்சித்தர்.கண்ணன்பித்தர்!

சுவாதியில் பிறந்ததனால்,சுவாதிவிண் மீனுக்கே
சவால்விட்ட வைணவஒளி!வில்லிபுத்தூர் ஞானி!

மாலைக்கு மயங்கியவன் ‘மால் ‘ என அறிந்தே
மாலையாய்த் தொடுத்து ‘மாலை ‘க்கைக் குள்போட்ட

மாமனார்!இவர்போல் மாப்பிள்ளை யைப்புகழ்ந்த
கோமகன் வேறு-யார் ? கும்பிட்டோர் வேறுயார் ?

பல்லாண்டு பாடியே பரமனைப் பாதுகாத்ததார் ?
வல்லபதேவ மன்னன் ‘பட்டர்பிரான் ‘ என-iஇவர்க்குப்

பட்டமளித்து யானைமேல் பவனிவரச் செய்கையில்
அட்டகாச மான-iஇந்த ஆனந்த உலாகாண

வைகுந்த நாதனே பிராட்டியுடன் வந்திறங்க,-
செய்கை அறியாச் சித்தர்,விதிர்விதிர்த்து,

யானையின் மணிகளையே தாளமாய்க் கொண்டு
பூனைக்கண் மாந்தர்த்ரு ?டி பூரணனைப் பிடிக்காதோ ? ‘

எனப்பயந்து சங்குக்கும் ஆழிக்கும் பிராட்டிக்கும்
எனச்சேர்த்தே கற்பூரம் ஏற்றினாற் போல்பாடி,

‘த்ரு ?டி ‘சுத்திப் போட்டாரே! அந்த ‘அன்பு ‘ யார்க்குவரும் ?
க்ரு ?ணனைக் குழந்தையாய்க் கண்டு-ஒரு தாய்போல்

மகிழ்ந்துமகிழ்ந்து அவன்வாயை, மலர்ந்த அவன்-கண்ணை,
சுகித்து-அவன்தன் கால்விரல் சுவைக்கும் அழகையெல்லாம்,

‘திருமொழி ‘யாய்ப் பாடித் தெருமக்கள் அனைவரையும்
வருக!அழகு பருக-என வாயார அழைத்தாரே!

அந்த மனிதநேயம், அந்தக் கவியழகு,
அந்தக் கண்ணனை நாமும் அப்படியே

கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டேபோய் வெகு-எளிதாய்
தஞ்சம் அடைந்தபக்தி ஒன்றாலே ‘திவ்யதேசம் ‘

கண்டிடலாம் என்கின்ற ‘கண்பனிக்கும் ‘ புதுயுக்தி
கண்டுகொண்டு சொன்னாரே!கவிபட்டர்!அந்தமுக்தி

நிலைதான் யார்க்குவரும் ?நிfக்கருணை யார்க்குவரும் ?
நிலைத்துநிற்கப் பாடிவரும் நீங்களே சொல்வீரே!

****

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்