புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

அறிவிப்பு


திண்ணை இதழின்

அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கங்களும் வாழ்த்துகளும்.

எங்களின்

துவக்கு இலக்கிய அமைப்பு

மாற்று கவிதையிதழ் மற்றும் கூடல்.காம் இணையதளம்

ஆகியவற்றுடன் இணைந்து

புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான

கவிதைப்போட்டியினை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இப்போட்டியின் நெறியாளராக கவிஞர் அறிவுமதியும்

நடுவர்களாக கவிஞர் இன்குலாப், கவிஞர் த. பழமலய், கவிஞர் மு. மேத்தா

ஆகிய முன்னணி கவிஞர்களும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்கள்.

இப்போட்டி குறித்த செய்தியினை தங்களின் இதழில் வெளியிட்டு

இக்கவிதைப் போட்டியில் அனைத்து கவிஞர்களும்

பங்கேற்று சிறப்பிக்க வழி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இத்துடன் போட்டி தொடர்பான விவர அறிக்கை இணைத்துள்ளோம்

தங்களின் பார்வைக்காக.

தொடர்ந்து போட்டி தொடர்பான செயல்பாடுகளையும், செய்திகளையும்

தங்களுக்கு அறியத் தருவோம்.

தங்கள் இதழின் ஆதரவும், ஒத்துழைப்பும்

கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

தொடர்ந்து தங்களின் தமிழ்ப்பணியும், தமிழர் பணியும் சிறக்க

புலம்பெயர்ந்த சூழலில் மொழிக்காவும் இனத்திற்காகவும்

இயக்கம் அமைத்து செயலாற்றிவரும்

எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மிக நம்பிக்கையோடு

இ. இசாக்

ஒருங்கிணைப்பாளர், துவக்கு இலக்கிய அமைப்பு

கவிதைப்போட்டி முதன்மை ஒருங்கிணைப்பாளர்

துவக்கு இலக்கிய அமைப்பு

மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம்

ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும்

புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான

மாபெரும் கவிதைப் போட்டி

முதல் பரிசு: உருபா. 10,000

இரண்டாம் பரிசு: உருபா. 7500

மூன்றாம் பரிசு: உருபா. 5000

பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.

இ. இசாக்

post Box: 88256

Deira- Dubai

U.A.E

சி. சுந்தரபாண்டியன்

மாற்று கவிதையிதழ்

கோணான்குப்பம் – 606 104

விருதாசலம் வட்டம்

தமிழ்நாடு

மின்னஞ்சலில் அனுப்ப

thuvakku@yahoo.com

thuvakku@gmail.com

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.திசம்பர்.2005

விதிமுறைகள்

? ? 1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும். ? 2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும். ? 3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும். ? 4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம். ? 5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது. ? 6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.

மேலும் விரிவான விபரங்கள் அறிய:

www.thuvakku.comm மாற்று கவிதையிதழ் www.koodal.com

ஆகியவற்றை பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 503418943. கவிமதி- 00971 505823764 நண்பன்- 00971 50 8497285.

சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653, சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

Series Navigation