This entry is in the series 20020623_Issue

மு.புகழேந்தி


கடலென புழங்கும் மனித வெள்ளத்தில்
புரிதல் அறியா மாந்தருடனே
உழன்று, பழகி,திரிந்து, தனிமையில் வாடி
எண்ணம் பகிர துணையை தேடி
கண்டெடுத்த ஒர் உயிரின்
மலரினும் மெல்லிய மடியினிலே
முகம் புதைத்து அழும்பொழுது
என் உள்ள நினைவை உள்வாங்கி
மென் புன்னகை தவழும் முகத்துடனே
தன் உள்ள நினைவை உணர்த்தவே
தலை வருடும் உன் கரத்தின்
அன்பதனை உணர்வது சுகமே.

***
pugazhendi@hotmail.com
மு.புகழேந்தி

Series Navigation