புரிய இயலாத உனது அந்தரங்கம்
நட்சத்ரவாசி
எனது உச்சம் உயிர் வழிதலில்
முடிந்து விடுகிறது
அதன் பின்னான உனது விழித்தல்
புரிய முடியாத அந்தரங்கத்தில்
எங்கே உள்ளது
இயங்கி கொள்ளும் போதும்
இயக்கம் நின்ற போதும்
உனது சலனமற்ற விரைப்பு
எதனால் ஆனது
பின்னரே எனது இயலாமை என்றும்
புரிந்து கொள்ள முடியாத மூர்க்கம் என்றும்
புகார்களை தொடுக்கிறாய்
எதன் பொருட்டாவது
உனது முறைப்படுத்தல்களில்
பகிர்தல்களில் தொடர்ச்சியற்று போனாலே
நியாயமெனக் கொள்ளலாம்
வெறுமனே பிதற்றலில்
அர்த்தமும் இல்லை
உனது இரத்தத்துக்கு
சூடும் இல்லை
என்னையும் வெறுப்படைய செய்து
உன்னையும் கேள்விக் கேட்டு
இயலாமை பட்டியலுக்குள்
நீயே புகுந்து கொள்ள
யாருனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்?
mujeeb.h
mujeebu2000@yahoo.co.in