‘புது மரபு ‘

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

அனந்த் (அனந்தநாராயணன்)


மரபு:

பழைய பத்தாம்பசலிப் பஞ்சாங்கம்
புளித்துப் போன பானைச்சோறு
வேண்டவே வேண்டாம் வயிற்று வலி.

புதுமை:

அஸ்திவார மில்லாக் கட்டிடம்
ஆளுக்கு ஆள் செய்யும் அதிகாரம், அலங்கோலம்
பழைய, உருளைப்பூமியைத் தட்டையாக்கிப் பார்க்கும் அறிவின்மை
பழைய வானத்தில் பழைய கதிரவனின்
அழகை ரசிக்கத் தெரியாத அவதிநிலை

புதுமரபு:

தாற்காலிகத் தீயில் புடமிட்டெடுத்த பழம்பொன்!
தளையறுத்த பழம்புதுமை! புதுத்தூரிகையால் புத்துலகைச்
சுதந்திரமாய், சுந்தரமாய்த் தீட்டும் கவியோவியம்!

வாசகன்:

ஆகா! எங்கே ? எங்கே உங்கள் புதுமரபுக் கவிதை ?
நான் காணத் துடிக்கின்றேன்!

புதுமரபன்:

நண்பா! அதை எழுதிய கணமே அது
பழையதாகிவிட்டது!

Series Navigation

அனந்த் (அனந்தநாராயணன்)

அனந்த் (அனந்தநாராயணன்)