புதுவருடக் கவிதைகள் இரண்டு

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

சேவியர்


வாழ்த்துக்கள்… வாழ்த்துங்கள்

வாருங்கள்
மகிழ்வோம்.

கடந்த தலைமுறைக்குக்
கிடைக்கவில்லை,
இந்த
விஞ்ஞான மனங்களின்
வீதியில் உலாவும் பாக்கியம்.

இது
நமக்கே நமக்கான
புத்தாண்டு.
உடலுக்கும் உள்ளத்துக்கும்
புதிய ஆடை தயாரிப்போம்
வாருங்கள்.

வரலாறுகளின் கவசங்கள்
வாள் பிடிப்போருக்காய்
வடிவமைக்கப்பட்டவை,
அவை
பூ வளர்க்கும்
நமக்குப் -பாருந்துவதில்லை.

கடந்த ஆண்டின் தோல்விகள்
பழைய
நாள்காட்டிகளோடு சேர்த்து
புதைக்கப் படவேண்டியவை
அவை
உள்ளுக்குள் உலாவும்
உயிர் உறிஞ்சி வேர்களுக்குப்
பச்சையம் தருவதைப்
பரிசீலிக்கவும் வேண்டாம்.

கனவுகளின்
விளைந்தவற்றைக் -காண்டு
நிஜங்களில்
சமையல் -சய்வது சாத்தியமில்லை.

இது புத்தாண்டு…

கடந்த ஆண்டின்
முத்துத் தேடல்கள்,
இந்த ஆண்டும் நடக்கட்டும்.
முத்துக்கள் மறுதலித்தாலும்
முற்றங்கள் முழுதும்
சிப்பிகள் நமக்கு மிச்சமாகும்.

மனசுக்கும் மனசுக்கும்
இங்கே
தலைமுறை தலைமுறையாய்
தன்மானத் தகராறுகள்.

இந்தப் புத்தாண்டு
பகைப் புகையை விலக்கட்டும்.
தன்மான மாயையை விட்டு
மனிதாபிமானம்
-வளிக்குதிக்கட்டும்.

வீதிக-ளங்கும்
வறுமையின் குடிசைகள்,
ஈசல்களாய் நிறைகின்றன,
ஆயுளோ அவதியில்
பாதியாய் குறைகிறது.

இந்தப் புத்தாண்டு -காஞ்சம்
கண்ணிகள் இன்றி கீழிறங்கி வந்து
புண்ணிய பூமியின்
புண்கள் துடைக்கட்டும்.

இது புத்தாண்டு,
ஓர்
புன்னகையால் இதைத் தீண்டு.

எதிர் எதிர் நிகழ்வுகள்
புதிர்ப் புற்றுக்களாய்
பாம்புகளைப் பிரசவித்தாலும்,
எதிர்கால எதிர்பார்ப்புகளுக்காய்
நம்பிக்கைத் தைலத்தை
நாம் தயாரிப்போம்.

இது புத்தாண்டு,
அழுகையில் துவங்கி
அழுகையில் முடிவதை விட,
புன்னகையில் துவங்கி
நம்பிக்கையில் முடிப்போம்.
வாருங்கள்.

0

புத்தாண்டு எனும் பரிசு

0

இதோ
வாசலில் காத்திருக்கிறது
புத்தாண்டு எனும் பரிசு.

நாள்காட்டி கிழிக்கும்
அவசரத்துடன்
அதை
பிரித்துப் பார்க்காதீர்கள்.

ஒவ்-வாரு நாளும்
ஓர் -வள்ளைக் காகிதம்.

யாரும் உங்களுக்கு
அதில் கவிதை எழுதித்
தரப் போவதில்லை.

பிள்ளையார் சுழி போட
உன்
கைப்பிடித்து யாரும்
கற்றுத் தரப் போவதில்லை.

உன் காகிதத்தில் யாரும்
ஓவியம் வரைந்து
வைக்கப் போவதுமில்லை.

உனக்கானது
-வள்ளைக் காகிதம் தான்.

து-ரிகையைத் துடைக்கவும்
நீயே தான்
துவங்க வேண்டும்.

அதோ,
கடந்த ஆண்டைய பரிசு
சகதி போர்த்து
-கால்லையில் கிடக்கிறது
குற்றுயிராய்.

எழுதப் படாத பேனாக்களும்
ஈரமாகாத து-ரிகைகளும்
பரிசின்
திறக்கப்படாத பாகங்களில்
மறைந்தே கிடக்கின்றன.

கனவுகள் போர்த்துக்
கனவுகள் துயில,
நினைவுகள் விழித்-தழும்
புத்தாண்டுக் காலையில்
புதிய பரிசு காத்திருக்கும்.

இந்த ஆண்டேனும்
திற,
ஒப்பீட்டுக் கவலைகளையும்,
வரம் வரவில்லை எனும்
வருத்தத்தையும்,
மற.

எழுதத் துவங்கு.
பயன்படுத்தாத தினங்கள் எல்லாம்,
பழுதான நிலங்களே,
அங்கே
விதைக்காமல் நீ
அறுவடைக்காய் கூடாரமடிக்காதே.

0

Series Navigation