புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அறிவிப்பு


தமிழ்ச் சிந்தனை உலகில் உரையாடல்களுக்கான புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் தொடர் முயற்சிகளில் புதியகாற்று மாத இதழ் ஈடுபட்டு வருகிறது.2006 மே இறுதியில் சென்னையில் இஸ்லாமிய இலக்கிய பேரவையுடன் இணைந்து இஸ்லாமியக் கருத்தியல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.இருநாள் அமர்வாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் பின்வரும் தலைப்புகளில் உரையாடல் நடைபெறவிருக்கிறது.

ஃ இன்றைய உலகமயச் சூழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

ஃ இந்திய முஸ்லிம்களும் இதர சிறுபான்மையினரும்:உறவுகளும்,உரையாடல் வாய்ப்புகளும்

ஃ முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அரசியல்-தேவைகள்,எதிர்பார்ப்புகள்,சிக்கல்கள்.

ஃ அடித்தள முஸ்லிம்களின் தொழில் முறைசார்ந்த வாழ்வியல்

ஃ மறுசிந்தனையில் முஸ்லிம்களின் தமிழ்

ஃ இஸ்லாம்-தலித்தியம் உரையாடலின் தேவைகளும்,களங்களும்

ஃ முஸ்லிம்களின் பன்மிய அடையாள அரசியல்

ஃ இந்தியாவில் முஸ்லிம்கள் வரலாறு இடையீடுகளும்,விடுபடுதல்களும்,தேடல்களும்.

ஃ முஸ்லிம்களும் திராவிட இயக்கமும்

ஃ முஸ்லிம்களும் இடதுசாரி இயக்கமும்

ஃ தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்கள்.

ஃ முஸ்லிம் பெண்கள் நிலையும் இஸ்லாத்தில் பெண்விடுதலைக் கூறுகளும்

இந்த தலைப்புகள் சார்ந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.கட்டுரைகளின் சுருக்கக் குறிப்புகளை(சினாப்சிஸ்) ஏப்ரல் 25ம் தேதிக்குள் அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பங்கேற்பு கட்டணம் ரூ100/-ஷிபா மிடியா என்ற பெயரில் வங்கியில் மாற்றத்தக்க வகையில் காசோலை அல்லது கேட்பு ஓலையாக அனுப்ப வேண்டும்.

பங்கேற்பாளர்களுக்கு உணவும் தங்கும் இடமும் ஒழுங்கு செய்து தரப்படும்.

முகவரி:புதிய காற்று,ஷிபா மீடியா,142,வடக்கு வெளி வீதி,மதுரை.

தொடர்புக்கு

எச்.ஹாமிம் முஸ்தபா – 9894780514

நிகழ்ச்சி அமைப்பு

ஏ.இ.எஸ்.ராஜா ஹஸனபர் அலி எஸ்.எம்.இதயத்துல்லா

புதிய காற்று இஸ்லாமிய இலக்கியப் பேரவை

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு