பிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


புனைக்கதையின் கட்டமைவு சாத்தியப்பாடுகளில் புதிதாக வெப்லாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. பிலாக் பிக்ஸன் (Blog fiction) 1999 ல் அய்ஜெனரேசன் உதவியுடன் முழுமையான கலைவடிவில் பயன்பாட்டிற்கு வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு தற்போதுவரை பதிப்பகங்களின் பிடியில் அமைந்திருந்த புனைக்கதை வடிவங்கள் வெப்புலக தளமாற்றத்தில் புது வடிவில் பிலாக் பிக்ஸனாக உருமாறியுள்ளது
இன்டர்னெட் செயல் பாடுகளின் வீரியம் இன்று அதிக அளவில் அதிகரித்து வரும் வேளையில் பிரதியியல் செயல்பாடுகள் மாறத்துவங்கியிருக்கிறது.லாரன்ஸ் ஸ்ரேனின் திரிசாம் சாண்டியாக இருக்கட்டும் அல்லது மாயூரம் வேதநாயகத்தின் பிரதாபமுதலியார் சரித்திரமாகட்டும் அச்சு ஊடகத்தின் தாக்கங்கள் தான் புத்தக வடிவிற்கு அதிக ஊட்டம் அளித்தன.ஆனால் விசுவல் மீடியத்தின் தாக்கம் அதிகமாக புதிய திசைவழிகளை புனைக்கதைகள் காட்டத்துவங்கியது.தற்போது இண்டர்னெட் பயன்பாடுகள் முந்தைய வடிவங்களை கலைத்துவிட்டன.பிலாக் பிக்ஸனிஸ்டாக அறியப்படும் டைகோ டாவல் இதைவிட சிறந்த முறையில் சிறிதாவோ அல்லது நேர்த்தியாகவோ வாசகர்களை முன்னிறுத்தி எவ்வித வரிசையோ அல்லது ஒழுங்கமைவோ இல்லாமல் புனைகதை உருவாக்க சாத்தியமில்லை என்கிறார்.மேலும் அவர் கூறும் போது தற்கால எழுத்தாளர்கள் உயர் இலக்கிய மாதிரிகளிலும் அவந்த் கார்ட் முறைகளிலும் வாசகர்களை எரிச்சல் கொள்ளவைத்த போது பிந்தைய முதலாளித்துவத்தின் நுகர்வு கலாச்சாரம் இலக்கியத்தை பொழுது போக்கிற்க்காக மாற்றிய போது எழுத்தாளர்களின் நிலை கேள்விக்குள்ளானது. எனவே தான் பிலாக் பிக்ஸன் உயர் இலக்கிய வடிவாகவும் வாசக ஊடாட்டத்தை முன்னிலைப்படுத்தியும் உருவாக முடிந்தது.எழுத்து பொருள்கள் கிளிக் செய்யும் கலாச்சாரத்துக்கு மாறிய போது புனைக்க்தையிலிருந்து எல்லாமே எலக்ட்ரானிக் வடிவங்களில் மாறின.இசபெல்லா இதை பற்றிக்கூறும் போது வாசிப்பை புதிய தளங்களில் வாசகர்களுக்கு உருவாக்கித்தந்திரிக்கிறோம் என்கிறார்.
சில பிலாக் பிக்ஸன் வடிவத்தில் புனைவு பாத்திரம் வழியாக புனைவை மாற்றியமைக்கும் உத்திகளும் காணப்படுகிறது.வயதுக்கு வந்தோர்களின் சர்வதேச சமாச்சாரங்களின் நினைவுகள் என்பன போன்ற புனைக்கதையல்லாத பிலாக்குகளும் இன்று பிரபலடைந்து கொண்டுவருகிறது.அவளின் இடர்மிக்க பறத்தல் என்ற பிலாக்கில் இப்படி வருகிறது.2003 மார்ச்2 பிற்பகல் 4.12 மணிக்கு நான் கண்ணுக்கு தெரியாமலானேன்.எனது பெயர் இசபெல்லா ஆனால் உண்மையல்ல.எனக்கு இருபது வயதிருக்கும்.ஆனாலும் நான் சர்வதேச சமாச்சாரங்களை விவாதிப்பவள்.இம்மாதிரியான பிலாக்குகள் புனைவுவடிவில் சைபர்ஸ்பேசில் இயங்கி வருகிறது.எனவே புனைவுக்கும் உண்மைக்குமான வடிவங்கள் இங்கே கலைக்க பட்டிருக்கிறது.மிக விவாதங்களை உருவாக்கிய கால் கேர்ள்,டைரிஸ்ட் போன்றவை லண்டன் நகரில் உள்ள விலைமாதுவின் நடவடிகைகளை சொல்லுவதாக அமைந்திருக்கிறது.பெயரும் சம்பவ இடமும் மாற்றப்பட்டிருக்கிறது என்ற வழமையான விஷயம் இங்கே புனைவாக அதே சமயம் உண்மையாக இருக்கிறது.உண்மையின் இருண்மைமயக்கம் இங்கே பிரதானபடுகிறது.ஆக்கபூர்வமான புனைவல்லாத கதைகளும் பெருமளவுக்கு பிலாக்குகளை பிடித்திருக்கிறது.தற்போது Blog fiction studies (B.F.S.), Blog Studies (B.S.), New Media Studies (N.M.S.) போன்றவை புகழ்பெற்று வருகிறது.
பெரும்பான்மையான விமர்சகர்களும் இலக்கிய பிரபலங்களும் பிலாக் பிக்ஸனை நிராகரிக்கிறார்கள்.எனவே பிலாக்கர் பரிசை 2006 ல் லூலூ அறிவித்து அதை அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்.சைபை என்பது போல கெவின் கிரைடர்மன் பிலாக்பை என்ற பதத்தினை பயன்படுத்துகிறார்.பின் நவீனவாதிகளை பொறுத்தவரையில் பிலாக்பையை ஆதரிக்கிறார்கள்.இது ஒரு புது வகைமையாக இன்னவெற்றீவ் பிக்ஸனுக்கு (innovative fiction) அடுத்து வருகிறது.ஹாரி மேத்யூஸ் போன்றோர்கள் ஜெர்னலிசத்தின் புதுவடிவாக பிலாக் அமையும் என்கிறார்.ரியல் பிலாக்ஸ் என்கிற நாண் பிக்ஸன் வகைகள் எதார்த்தவாததின் தொடர்ச்சி என்றே சொல்லப்படுகிறது.ஆனால் ரோலண்ட் பார்த் சொல்லும் ரியாலிட்டி எபக்ட் என்கிற கருத்தாக்கமே விமர்சன கோட்பாட்டிலிருந்து பிலாக்ஸை உருவாக்கியுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது.புனைவு வடிவில் வரலாற்றியல் எழுத்தாக இது அமைவதால் பின் நவீன கலைவெளிப்பாடாகவே கருதுகிறார்கள்.
பிலாக்பையை இன்று பின் நவீன மெட்டாபிக்ஸனின் புது வகைமை என்று கருதுகிறார்கள்.இது உண்மையை மொழிவழியாக சமூக கட்டமைப்புச் செய்யும் வழிவகைகளை கவனபடுத்திக்கொண்டு எப்படி புனைகதை சமூக பண்பாட்டு மற்றும் வரலாற்று தளத்தில் வாசகர் உணர்வுநிலையில் ஊடாட்டம் செய்ய இயலும் என்பதையும் விவாதிப்பதன் மூலம் சிறப்புகவன ஈர்ப்பை பெறுகிறது.இதுவரை அச்சு ஊடகங்கள் சித்தரித்திருந்த உண்மை உலகம் என்பது தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.பிலாக்பை எழுத்துகளில் காணப்படும்(பிரதிகளில்) ஆர்கானிக் அலகுகளை மறு உருவாக்கம் செய்து பின் நவீன பிக்ஸனாக தன்னிலை,சித்தரிக்கப்படுபவர் போன்ற துண்டாடல்களை சுய புனைவுமயமாக்கலாக பலதரப்பட்ட உருவங்களில் பார்வைகளில் குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் இடையிலான இடுகுறியாக தற்சுட்டு தன்மையுடன் உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
பிலாக்பை வாசகர் எதிர்வினை கோட்பாட்டின் அடிப்படையில் பின் நவீனத்துவ செயல்திட்டமாக கற்பனை தோற்றநிலை மெய்ய்மை சமூகங்களை இனையதளம் வாயிலாக எழுத்தாளர்-பார்வையாளர் ஊடாட்டத்துக்கு ஏற்றம் தரும் வகையில் உருவாக்கப்படுகிறது.முக்கியமாக புனைகதைகளை பொறுத்தவரையில் வாசகரின் விருப்பத்தின் பேரில் உருமாறி மீண்டும் உருமாறி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.அல்லது வாசகர்கள் தங்களது விருப்பதிற்கேற்ப எழுதியும் தொகுத்தும் உருவாக்கப்படும் போது இது தொகுக்கப்படும் எழுத்தாகவும் மாறுகிறது.இது முந்தைய அச்சு எழுத்து முறையிலிருந்து மாறுபட்டதாக அமைகிறது.அது போல ஹைப்பர் டெஸ்ட் பிக்ஸன் வகையிலிருந்தும் வேறுபாடு புலர்த்துகிறது.ஹைபர் டெக்ஸ்ட் பிக்ஸனை பொறுத்தவரையில் வாசகர்களின் ஊடாட்டம் அமைந்திருந்தாலும் வாசகர்களின் சுதந்திரம் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.ஹைபர் டெக்ஸ்டுகளான வெப்தளம் அல்லது சி.டி.கள்.,டி.வி.டிகள் வாசகர்களின் பங்கேற்பை செய்தபோதும் வாசகரை பயன்படுத்த அதாவது வாசகர்களின் கற்பனையை எழுத்தாளரின் கற்பனையோடு இணைத்து முன்செல்வது இயலாத காரியம்.ஆனால் பிலாக்பையில் இவை சாத்தியமாகிறது.
பிலாக் பிக்ஸன் வடிவத்தில் செயலாற்றும் கெவின் கிரைடர்மனின் மேட்மேன்ஸ் மியூசியம் எனும் பிலாக் நாவல் எக்ஸ்பரிமெண்டல் பிக்ஸனாக அறியப்படுகிறது.வெகுஜன திகில் அல்லது துப்பறியும் கதை வடிவில் அண்டர்கிரவுண்ட் சொசைடி பற்றிய நாவல்களான The Da Vinci Code, The Camel Club, Foucault’s Pendulum போன்றவை போல கெவினின் பிலாக்பை அமைந்திருக்கிறது.அதுபோல பால் போர்டின் எப் டிரையின் மற்றும் ஜிம் முன்ரோவின் ரூமேட் பிரம் ஹெல் போன்ற பிலாக்பிக்ஸன்கள் உலக புகழ் பெற்றவையாகும்.தமிழில் பிலாக்பிக்ஸன் அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
——————–

Series Navigation