பிறந்த நாள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

வே பிச்சுமணிஎனக்கு சின்ன வயசில் இருந்து திருமணமாகும் வரை, பிறந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு நிறைய மக்கள் கொண்டாடுவார்கள் என தெரியாது. தலைவர்கள்,நடிகர்கள் ஆகியவர்கள் தான் ஆண்டுக்கு ஆண்டு கொண்டாடுவார்கள் என நினைத்திருந்தேன். எங்க அப்பா எனக்கு 1வது வயது பிறந்தநாளைக்கு திருசெந்தூர் சென்று மொட்டை போட்டு பண்டாரங்களுக்கு சாப்பாடு போட்டதை எங்க அம்மா அடிக்கடி ரொம்ப சிலேகித்து சொல்லுவா அதுதான் பிறந்த நாள் என்றால் நினைவுக்கு வரும் மற்றபடி விசேஷமா ஒன்றும் நினைவுக்கு வராது.

அதற்கப்புறம் எனக்கு என்னுடைய பிறந்தநாள் கொண்டாடபட்டதாக தெரியவில்லை. ஆண்டில் என்றாவது எங்க அப்பா குறுக்குதுறை முருகன் கோயிலுக்கு போய் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து காலையில் தூங்கி கொண்டு இருக்கும் என்னை எழுப்பி திருநீறு பூசிவிட்டால் அன்று எனக்கோ எங்க அப்பாவுக்கோ பிறந்த மாதத்தின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கும். அப்ப கூட எங்க அம்மா எந்த நாளில் பிறந்தா என்று இப்போகூட தெரியவில்லை.( ஊருக்கு போகும் போது கேட்க வேண்டும். பாவம் எங்க அம்மா) பிறந்த நாளுக்கு புது ஆடை எடுத்தாகவோ சாக்லேட் சக பிள்ளைகளுக்கு கொடுததாகவோ நினைவு இல்லை. எட்டாம கிளாஸ் மதிதா இந்து கல்லூரி உயர்பள்ளியில் சேரும் பொழுதும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுதும், பியூசி,பிஏ,எம்ஏ ஜான்ஸ் கல்லூரி யில் சேரும் பொழுதும், வேலைக்கு விண்ணப்பம் போடும் பொழுதும் தான் பிறந்தநாள் பற்றி நினைவு வரும். அப்புறம் வேலையில் சேர்ந்த பின் பயிற்சியின் போது ஐந்தாண்டுகளுக்குள் பிறந்தநாளில் ஏதாவது மாற்றமிருந்தால் செய்ய வேண்டும் எனும் விதி பற்றி தெரிய வந்துவுடன், பள்ளி சான்றிதழ்களில் ஒருநாளும் , ஜாதகத்தில ஒருநாளும் பிறந்த நாள் குறிப்பிட்டு இருப்பது எனக்கு பெண் பார்க்க போக எனது பெற்றொர்கள் ஆயத்தம் செய்ய தொடங்கும் பொழுது தெரிய வர, மாற்றுவதற்கு விண்ணப்பித்து பத்தாண்டுகள் போராடி மாற்றி விட்டேன். ஆனாலும் நாளது வரை எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென் எனக்கு தோன்றியதே இல்லை.

ஆனால் திருமணமான மறுஆண்டு, என் மனைவியின் பிறந்த நாள் பற்றி தெரியாததால் . அந்த பிறந்த நாள் அது பாட்டுக்கு கடந்து போக , அடுத்த நாள்,” பெண்டாட்டிக்கு பிறந்த நாளு என்றால் எதாவது வாங்கி கொடுக்க வேண்டுமென்று தெரியாதா” என என் மனைவி கேட்க நான்” உன் பிறந்த நாள் என்னைக்கு என்று தெரியாது “என சொல்ல அவள் முஞ்சியை தூக்கி வைத்து கொள்ள பின்னர் புடவை எடுத்து கொடுத்தாக ஞாபகம். அதற்கு பின் வந்த பல ஆண்டுகளிலும் அவளது பிறந்த நாளினை மறந்து, தரும சங்கட பட்டு உள்ளேன் ஆனா திருமண நாள் எப்போதும் நினைவில் இருக்கும் திருமணமான ஜோரில் கிராண்டாகவும் போக சுமாரகவும் கொண்டாடி (திண்டாடி) வருகிறேன்.

எனது மகளின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அவளது ஜென்ம நட்சத்திர நாளிலும் ,ஆங்கில நாளிலும் என் மனைவி நினைவு படுத்த, ஆடை எடுத்து சாக்லேட் அவளது சக பிள்ளைகளுக்கு கொடுதது கொண்டாடி வருகிறோம். இப்போது என் மகளோ, அம்மா நாள், பரிசு நாள், என்று ஏதாவது ஒரு நாள் என்று ஏதாவது சொல்லி பரிசு கேட்டு நான் மறந்து போக நீங்க “என்ன அப்பா” என்று கேட்கபடு……………கிறேன்.

இந்த ஆண்டும்கூட என் மனைவியின் பிறந்த நாள் மார்ச் மாதமா, ஏப்ரல் மாதமா என குழப்பம் அடைந்து நைசாக அவளது +2 மதிப்பெண் சான்றிதழினை பார்த்து ஏப்ரல் மாதம்தான் என உறுதி படுத்தி காலண்டரில் பிறந்தநாள் என குறிப்பிட்டால் தெரிந்து விடுமென மனைவியின் பெயரை சிம்பலிக்காக குறிப்பிடுவதாக பூவின் படத்தை வரைந்து வைக்க என் மகள் “என்ன அப்பா அம்மாவின் பிறந்தநாளை சிம்பலிக்காக வரைந்து வைத்திருக்கிறீர்களோ எனவும் என்னுடை பிறந்த நாளாவது நினைவில் உள்ளதா” என கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

இதனால் என்னென்ன தயவு செய்து உங்களை மறந்து போனலும் போங்க உங்க மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்து பரிசு என எதாவது கொடுக்கவும். நீங்க கொடுப்பது ஏது என்றாலும் அவர்களை சந்தோஷ படுத்தும். மறந்தவீட்டீர்கள் என்றால் அவ்வளவுதான் சின்ன விஷயம் பெத்த நஷ்டம்.

என் மனைவிக்கு என்ன பரிசு வாங்கலாமென நான் இன்னும் முடிவு செய்ய வில்லை . அதை யோசிக்குனும் நான் வரேன்.
“வாழ்த்துக்கள்”


vpitchumani@yahoo.co.in

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி