பிரிவோம்…சந்திப்போம்!

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

பாலு மணிமாறன்


நாம்
ஒரு முறை சந்தித்தோம்…

முற்றிலும் மீழ்கி விடுவோமோ…
அஞ்சும் அளவு அன்பின் சக்தி
ஆக்கிரமித்தது.

உணர்வுகள்
கொப்பளித்து, கொப்பளித்து
குளிர்ந்தது.

பெருத்த மேகங்களுக்கு
பின்னிருந்து விரல் நீட்டின
நம்பிக்கை ரேகைகள்.

சீக்கிரமே –
காலத்தின் விரல்களால்
சிதைந்தோம்…
மெல்ல
விழி திறந்து உயிர்தோம்.

சந்தித்தல் சாத்தியமற்ற
சூழலில்
மீண்டும் ஒருமுறை
முன்னிறுத்தப் பட்டோம்.

தொட்டதும் சுருங்குவது
தொட்டாச்சிணுங்கி மட்டுமா ?
நீயும் நானும் கூடதான்.

இதோ…
இன்னொருமுறை
பிரிவதற்கு தயாராக நாம்.

இந்தப்பிரிவு
தற்காலிகமென
சொல்லிக் கொள்கிறோம்.

நம் பாதைகள்
இன்னொருமுறை சந்திக்கலாம்
என்றும் கூட.

உறுதியல்ல…
என்றாலும் அது
நடக்கும் என்றே
தோன்றுகிறது.

காரணம் –
கடந்த காலத்தின்
வெற்றிடத்தை
அது மட்டும்தானே
அடைத்துச் செல்ல முடியும் ?

ap_cholan@yahoo.com

Series Navigation

பாலு மணிமாறன்

பாலு மணிமாறன்