பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

ஃபாரிதா. எம். சையது (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையின் வார இதழிலிருந்து)

‘எதிர்பார்த்திருக்க முடியாத காட்டுமிராண்டித்தனம், முன்னெப்போதும் இராத மாபெரும் அழிவு, வரலாற்றின் தனிப்பெரும் நிகழ்வு அது. ஆறு கொடுமையான வாரங்களுக்கு, மத்திய இருண்டகாலத்தின் பிளேக் நோயைப்போல, கொலை செய்யும் மனவியாதி தீப்போல வட இந்தியாவின் முகமெங்கும் பரவியது. இந்தத் தீயிடமிருந்து தப்பும் சரணாலயம் ஏதும் இல்லை, இந்த வைரஸ் தொத்தாமல் தப்பிக்கும் வழியும் இல்லை. காலம் காலமாக அருகருகே வாழ்ந்து வந்த சமூகங்கள், ஒருவர் மீது ஒருவர், வெறுப்பின் தீயார்வத்தில் விழுந்தார்கள் ‘

பிரித்தானியர்கள் இந்தியாவை 130 வருடங்கள் ஆண்டார்கள். 1947 ஆம் ஆண்டு, சூன் மாதம் 3 ஆம் தேதி, கடைசி வைஸ்ராய் லார்ட் மெளண்ட்பேட்டன், பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டத்தை வெளியிட்டதும், மெல்ல சூடாகி வந்திருந்த சமூகக் கசப்பு பொங்கித்ததும்பியது. அடுத்த மாதங்களில், 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதக்கொலைகள் நடந்தேறின. பிறகு உலகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் தொகை நகர்வும் நடந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினை வங்காள மாநிலத்தையும், பஞ்சாப் மாநிலத்தை ராட்கிலிஃப் கமிஷன் தயாரித்த வரைபடத்தை ஆதாரமாய்க் கொண்ட எல்லைக் கோடுகளை வைத்துப் பிரித்தது. உடைந்த இந்த மாநிலங்களில், கும்பல் வெறி பைத்தியக்காரத்தனத்தை எட்டியது. மக்கள் அதிர்ச்சியில் எரிந்தார்கள். எதிர்த்துப் போராட பல குழுக்கள் உருவாக்கப்பட்டன. குழும வெறியின் உறைவிடமான பஞ்சாப், வெகு விரைவிலேயே சமூகக் கொலைக்கும் முக்கிய இடமாயிற்று.

‘முக்கியமான உண்மை, ஜனநாயக அரசாங்கம் உடைந்ததுதான். பொதுமக்கள் நிர்ணயம் செய்த தலைவர்கள் இல்லாத நிலையில், அதிகாரம் இருக்கும் ஒரே நிறுவனமான ராணுவத்தால், பெரும் கிராமப்புறங்களிலும், கடைவீதிகளிலும், குறுகிய தெருக்களிலும், சாதாரண மக்கள், மற்ற சாதாரண மக்கள் மீது செய்யும் கொலைகளையும், தீவைப்புக்களையும், கற்பழிப்புகளையும் தடுக்க முடியாது. இந்த குற்றங்களே, இந்தக்குற்றங்கள் தோற்றுவித்த நிலைத்த பயமுமே, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், இந்துக்களையும் சீக்கியர்களையும் இந்தியாவுக்கும் போகும்படித் தூண்டியது ‘ என்று ஹெச். வி. ஹோட்ஸன், நடந்த படுகொலைகளை விளக்குகிறார்.

தனது புத்தகமான, ‘பெரும் பிளவு (The Great Divide) ‘ புத்தகத்தில் ‘பயம், இதயமுறிவு, அனாதரவான நிலை எல்லாமே, எதிர்பார்க்காததாகவும், திடாரெனத் தோன்றியதாகவும், பெருக்கெடுத்த மாபெரும் வெள்ளத்தில், திடாரென விழுந்த சாவின் துயரத்தைவிடவும் கொடியதாக இருந்தது ‘ என்று எழுதுகிறார்.

குரூரத்திற்கு இனம் இல்லை. இந்துக்கள் மசூதிகளை உடைத்தார்கள். முஸ்லீம்கள் கோவில்களை உடைத்தார்கள். கலவரங்கள் நகரங்களை பேய்வீடுகளாக்கின. காட்டுமிராண்டித்தனமான குழும வன்முறை மேலும் கோபத்தையும், பயத்தையும் கிளப்பியது. மாபெரும் அலை போல எழுந்த பயமும் திகிலும், கிழக்குப் பஞ்சாபிலிருந்தும், வடமேற்கு இந்தியாவிலிருந்தும் மாபெரும் முஸ்லீம் வெளிநடப்பையும், பாகிஸ்தான் என நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலிருந்து இந்துக்கள் சீக்கியர்களின் வெளிநடப்பையும் வெடித்துக்கிளம்பச்செய்தன.

கல்கத்தா கொலைகள் பற்றிக் கேள்விப்பட்டும் , அதனால் அயராமல்,, பத்துலட்சம் அகதிகள் இரண்டு வங்காளங்களுக்கும் அஸ்ஸாமுக்கும் இடையே நகர்ந்தார்கள். தங்கள் இடங்களிலிருந்து பெயர்க்கப்பட்ட இந்த மக்களின் நகர்வு இந்த சோகத்தின் கடைசி அத்தியாயம் இல்லை. காலம் கடந்து கராச்சியில் நடந்த கலவரங்களால், அங்கிருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் இந்தியாவுக்கு ஓடினார்கள். பிறகு இந்தியா நடத்திய ‘போலீஸ் ஆக்ஷன் ‘ என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத் கைப்பற்றலின் போது அங்கிருந்து புது அகதிகள் பாகிஸ்தான் நோக்கி ஓடிவந்தார்கள். பிரிவினையின் போது இப்படி நகர்ந்த மக்கள் தொகைதான் வரலாற்றில் நடந்த மாபெரும் மக்கள் நகர்வாக கருதப்படுகிறது.

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு எல்லைக்கோடுகளைத் தாண்ட ஓடினார்கள். சைக்கிளிலும் , ரயிலிலும், கழுதையிலும், மாட்டுவண்டியிலும், கால்நடையாகவும் கையில் எடுத்துக்கொண்டு போகமுடிந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். பாதுகாப்பு நோக்கி அவர்கள் ஓடியதில் பலர், தங்களது குறிக்கோளை அடையவே இல்லை.

பயபீதியடைந்த மக்கள் பரந்த நிலப்பரப்பில் மைல்கணக்கில் நீளும் வரிசையில் மெதுவாக ஊர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான மாட்டுவண்டிகள் எழுப்பிய புழுதி மேகமாக கருத்து எழுந்தது. நன்கு தின்று கொழுத்த வல்லூறுகளால் பறக்கக்கூட முடியவில்லை. இறந்த உடல்கள் கடல்கள் போல. லாகூருக்கும் அம்ரித்ஸாருக்கும் இடையே இருந்த 35 மைல் வழி முழுவதும் பிணங்கள் குவிக்கப்பட்டிருந்தன. ‘அந்த முழு பிராந்தியமும் மிகப்பெரிய சாவுக்கிடங்கு போல இருந்தது ‘

இரண்டு புறமும் மக்கள் அதிகமாக செல்லச் செல்ல, ரயில் ரயிலாக இறங்கிய கேவலப்பட்ட அகதிகள் எல்லைக்கோட்டின் இருபுறமும் அடிபடுவதற்கு ஏற்ற பலிகடாக்களாக ஆயினர். சில சமயங்களில், நான்கு அல்லது ஐந்து நாட்களாக, வீங்கிப் போன துண்டு துண்டாக வெட்டப்பட்ட, பிணவீச்சாய் நாறும், ஈக்கள் மொய்க்கும் அமைதியான பிணங்கள் இல்லாமல் அமிரித்ஸரிலிருந்து எந்த ரயிலும் வரவில்லை. இந்த நகரும் பிணப்பெட்டிகள், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும்போது, ரத்தம் இந்த அமைதியான கம்பார்ட்மெண்டுகளிலிருந்து ஒழுகி ரயில் தண்டவாளங்களில் படிந்தன ‘சூடான ஒரு கோடை நாளில், ரெஃப்ரிஜிரேட்டரின் கீழே ஒழுகும் தண்ணீர்போல ‘.

இந்த மரண ரயில்கள், (இப்படித்தான் அவை அழைக்கப்பட்டன), வரும் எந்த வருடங்களிலும் பிரிவினைபற்றி பேசும்போதெல்லாம் திரும்பத் திரும்பப் பேசும் கதையாய் நிரந்தரம் கொண்டன.. ஒவ்வொரு சோகக்கதையும் முந்தைய சோகைக்கதையைவிட இன்னும் சோகமாய்த் தான் இருந்தது. இனப்படுகொலை போரில், பெண்களும் சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், மதம் மாற்றம் செய்விக்கப்பட்டார்கள், கல்யாணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

குரு நானக் அவர்களின் பிறந்த இடம் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டபடியால், கோபம் கொண்ட சீக்கியர்கள், தாக்குதல்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டார்கள். லைஃப் பத்திரிக்கையின் புகைப்படநிபுணர், மார்கரெட் போர்கே-வொயிட், இந்த அளவிடமுடியாத கொடூரத்துக்கு, பீதியடைந்த சாட்சி. அம்ரித்ஸர் ரயில் நிலையத்தில் ஒரு சீக்கியக்கும்பலைப் பார்த்ததை ‘நீண்ட தாடிகளுடன், அகாலி பிரிவை அடையாளப்படுத்தும் பிரகாசமான நீல முண்டாசுகளுடன், சப்பணங்கால் போட்டு அமைதியாக பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும், நீண்ட வாளை தன் மடியில் வைத்து அடுத்த ரயில் வண்டி வருவதற்காக காத்திருந்தார்கள் ‘ என்று எழுதுகிறார்.

அந்த 1947இன் மாதங்களில் எவ்வளவு மக்கள் தன் உயிரை இழந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. சாலை ஓரங்களிலும், கிணற்றில் போடப்பட்டும், தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலும், கிராமங்களிலும், நெருப்பால் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்னும் எண்ண முடியாதது. உத்தேச மதிப்பீடுகள் சுமார் 2 லட்சத்திலிருந்து 10 லட்சத்துக்கு சற்று அதிகமாகவும் கணக்கிடப்படுகின்றன. மிகக் கடுமையான குற்றம் தான் இது.

அகதிகள் எண்ணிக்கை சுமாராய்த் தெரிய வருகிறது.. சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து இரு புறமும் சென்றார்கள். நினைத்தாலே மனக் கிலேசம் உண்டாக்கும் எண்ணிக்கை இது.

இந்த மாபெரும் அழிவைத்தடுத்திருக்க முடியுமா ? நடந்து முடிந்த பின்னர், எல்லோரும் ஆயிரம் உபாயங்கள் சொல்லலாம். ஆனால் நடந்துவிட்டது. இப்படித்தான் அது நடந்தது. விவரிக்க முடியாத கொலைகளும், பரவலான தீவைப்பும், ரத்தக்களரியும், நகர்வும், வீடு விட்டு ஓடுதலும், இன்னும் என்ன என்னவோ. இப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்துக்குச் சுதந்திரம் வந்தது.

வரலாற்றுப் புத்தகங்கள் இந்த படுகொலையை வைத்தும், மக்கள் புலம் பெயர்தலை வைத்தும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டிருக்கின்றன. வழக்கம்போல எழுதப்படும் பிரிவினை பற்றிய வரலாற்று ஆவணங்களில், இந்த பிரிவினைக்குக் காரணத்தையும், இந்த பிரிவினைக்குக் காரணமான மக்கள் தலைவர்களைப் பற்றியும், எழுதப்படுவதில், ஒரு தனிமனிதனுக்கு நடந்த விளைவு உதாசீனப்படுத்தப்பட்டு விடுகிறது. வரலாற்றாசிரியர் ஆயீஷா ஜெலால், ‘சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களை விட, பிரிவினை பற்றிய மனரீதியான பாதிப்பு, மக்கள் மனத்தில் ஆழமாய்ப் பதிந்து இருக்கிறது ‘ என்று எழுதுகிறார்.

ஒரு தனி இறப்பு சோகம் என்றும், பல லட்சக்கணக்கானவர்களின் இறப்பு ஒரு புள்ளிவிவரம் என்றும் கூறிய ஸ்டாலின், இலக்கியத்தின் சக்தியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வெறும் வரலாற்று ரீதியான விவரங்களும், செய்திகளும், குழப்பமான அந்தச் சூழ்நிலையின் மனப்பாதிப்பை சரியாக வெளிக்காட்டிவிடமுடியாது.

ஆய்வுப் புத்தகங்களும், வரலாற்று நூல்களும் நூலக அலமாரிகளில் அடைந்து கிடப்பினும், பிரிவினை மீண்டும் வாழ்கிற உணர்வு நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு நாவல்கள், மற்றும் சிறுகதைகள் வழியே தான் கிடைக்கக் கூடும்.

நெப்போலியன் ரஷ்யாவின் மீது மேற்கொண்ட படையெடுப்பு டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும் ‘ என்ற வலுவான நாவல் ஆயிற்று. எரிக் மரியா ரெமார்க்கின் ‘மேற்குப் போர்முனையில் எல்லாம் அமைதியாய் இருக்கிறது ‘ என்ற நாவலும், ஸ்டாஃபன் கிரேனின் ‘ துணிவின் சிவப்புப் பட்டயம் ‘ நாவலும் போரின் வியர்த்தத்தைச் சொல்கின்றன. அது போன்றே பிரிவினைகாலத் துயரத்தையும், கொடூரத்தையும் புனைகதைகள் பல எடுத்துச் சொல்கின்றன.

ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாய் , சாதாரண மனிதர்களின் பிரிவினைத் துயரை, உளவியல் மற்றும் உணர்வுச் சிக்கல்களைச் சொல்வதில் சில நாவல்கள் வெற்றி பெற்றுள்ளன: குஷ்வந்த் சிங்கின் ‘பாகிஸ்தானுக்கு ஒரு புகைவண்டி ‘, மும்தா ஷா நவாஸ் எழுதிய ‘உடைந்த இதயம் ‘ , கர்தார் சிங் துக்கல் எழுதிய ‘இருமுறை பிறந்து., இரு முறை இறந்து ‘ , பாப்ஸி சித்வாவின் ‘ஐஸ் மிட்டாய் விற்பவன் ‘ இவற்றைச் சொல்லலாம். (பாப்ஸி சித்வாவின் நாவல் ‘எர்த் ‘ என்ற பெயரில் படமாகியுள்ளது . – மொ பெ)

உருது இலக்கியம் பிரிவினை அனுபவம் பற்றி இன்னமும் சிறப்பான படைப்புகளைக் கொண்டுள்ளது. சாதத் ஹாசன் மண்டோ 1947-ன் நிகழ்வுகள் பற்றி நிறைய எழுதியுள்ளார். ‘திறந்து விடு ‘, ‘டோபா டேக் சிங் ‘, ‘சியா ஹஷியே ‘ , ‘குளிர்ந்த மாமிசம் ‘ போன்ற படைப்புகள் இவை.

அந்தப் பிரிவினையின் போது பெண்கள் கடத்தப் பட்டது பற்றி எழுதப் பட்ட மிகச் சிறப்பான கதை என்று எல்லோராலும் கருதப் படுவது ராஜேந்தர் சிங் பேதியின் ‘லாஜ்வந்தி ‘

குரதுலைன் ஹைதரின் மகத்தான படைப்பு ‘அக்கினி ஆறு ‘ பத்துலட்சம் சாவுகளைக் கொண்டு பின்னிய ஒரு சோக காவியம். ஆங்கில மொழியாக்கத்திலும் கூட இது தன் சிறப்பை இழக்கவில்லை.

நஸிம் ஹிஜாஸியின் ‘சாம்பலும் ரத்தமும் ‘, அஹ்சான் ஃபரூகியின் ‘சங்கம் ‘, குதரதுல்லா சாஹப்பின் ‘அய்யோ கடவுளே ‘, இஸ்மத் சுக்தாயியின் ‘வெப்பக் காற்று ‘ (இந்தப் படைப்பும் எம் எஸ் சத்யு இயக்கத்தில் படமாகியுள்ளது. பல்ராஜ் சாஹ்னியின் மிகச் சிறப்பான நடிப்பையும் கொண்டது அந்தப் படம் – மொ பெ) கிஷன் சந்தரின் ‘ நாங்கள் விரட்டப்பட்டவர்கள் ‘ போன்ற படைப்புகளும் , இன்று வரை உலகில் எதிரொலிக்கும் இந்தப் பேரழிவின் இறவாத சித்திரங்கள் எனலாம்.

***

Series Navigation