பாரதி : காலம் மீறிய கலைஞன்

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue

யமுனா ராஜேந்திரன்


ஞான ராஜசேகரனின் மூன்றாவது திரைப்படம்.பாரதி .தி. ஜானகிராமனின் மோக முள்ளிற்கு அடுத்து ராஜசேகரனுடன் தங்கர்பச்சான் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் பாரதி. ஓளிப்பதிவாளர் சிறீராம் இருந்தும் அர்த்தமற்றுப் போன அபத்த நாடகமாக இருந்த நாசர் நடித்த முகம் படத்தையும் இங்கு ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது : நாடக மேடை குறித்த உணர்வு முன்னாள் நாடக இயக்கனரான ராஜசேகரனிடம் இருப்பதால் தான் பல்வேறு திரைப்படக் காட்சிகள் கூட மேடைநாடகத்தின் பண்பைக் கொண்டிருக்கின்றன என்று புரிந்து கொளவதும் இங்கு பொறுத்தமானது. படம் குறித்த பெரும்பாலுமான விமர்சனங்கள் படத்தை ( இந்தியா டுடே : விண் நாயகன் ) வரிச்சலுகைக்காக அரசுக்கும் அதனது கருவின் சமுக முக்கியத்துவத்திற்காக பார்வையாளனுக்கும் பரிந்துரை செய்பவையாகவே இருந்தன. சில விமர்சனங்கள் படத்தின் வரலாற்றுணர்வு காட்சிகளில் செம்மையாகக் காட்டப்படவில்லை ( துக்ளக்) எனும் வகையில் அமைகின்றன். கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற இடதுசாரி அமைப்புக்கள் படத்தின் கலாச்சார அரசியல் முக்கியத்துவம் கருதி ஞானராஜசேகரனின் பணியைப் பாராடடியிருக்கின்றன். அது பொறுத்தமானதொரு பணி என்பதில் சந்தேகமில்லை இச்சூழலில் எனது விமர்சனத்தை வெகுஜன சினிமாப் பார்வையாளனின் மனோ பாவத்திலிருந்தும் படைப்பாளியாக இயக்குனரை நோக்கியதாகவும் கையாள நினைக்கிறேன்.

பாரதி திரைப்படக்கதையின் விவரிப்பு (Narration) மூன்று நிலைகளிலானது. 1. பாரதியின் குடும்ப வாழ்வு : ஆண் பெண் உறவு தொடர்பான அவரது அனுபவ விகசிப்பு தொடர்பானது. 2. பாரதியின் தேசிய விடுதலை அரசியல் கருத்துக்களின் பரிமாணம் தொடர்பானது. 3. இன்று நிலவும் பாரதி குறித்த விமர்சனங்களை ( அவர் இந்துப் பிராமணன் எனும் குற்றச்சாட்டு) எதிர்கொள்ளும் முகமாக அவரை மறுவாசிப்புச் செய்தல் எனும் நோக்கில் கையாளப் பெறும் சம்பவங்கள் தொடர்பானது. தமிழ் சினிமாவின் நீண்ட தொடர்ச்சியில் வைத்துப் பாரக்கும்போதும் சரி திரைக்கதையின் தர்க்க வளர்ச்சி என்று வைத்துப் பார்க்கும் போதும் சரி இப்படம் ஒரு கவிஞனின் குடும்ப வாழ்வுக்கும் அவனது சமூகக் கனவுக்கும் ( சாதாரண தமிழ்சினிமா பாஷையில் : பாசமா கடமையா : எனும் இரண்டக நிலை) இடையிலான பிரச்சினைகளை முரண்களை சமகால உணர்வுடன் சொல்ல முயல்கிறது. பாரதியின் சமுகக் கருத்துக்கள் பற்றிய மறுவாசிப்பும் படத்தின் போக்கில் மிக முக்கியமான அம்சமாகக் கவனம் பெறுகிறது.

இவ்வகையான கதை சொல்லும் போக்கில் ஒரு பார்வையாளனுக்கு மிக முக்கியமாக கேள்வி எழுகிறது படத்தின் தரக்கத்திற்கு படத்தில் இடம் பெறும் பாரதியின் தேசிய அரசியல் சம்பந்தமான பரிமாணமும் காட்சிகளும் எவ்வாறு உதவுகிறது ? உதாரணமாக அரவிந்தரைச் சந்திக்கும் காட்சிகள், பால கங்காதர திலகர் சம்பந்தமான காட்சிகள்- நாடகத் தன்மை வாய்ந்த- இக்காட்சிகள் எவ்வகையில் உதவுகிறன ? படத்தின் போக்கில் பார்வையாளனின் மனப்பிரதேசத்தில் சம்பந்தப்படாத சம்பவிப்புகளாகவே இக்காட்சிகள் அமைந்திருந்தன. பாரதியின் வரலாற்றில் இவை முக்கியமான சம்பவங்களாக இருக்கலாம் ஆனால் பாரதி குடும்ப வாழ்வ அவரது சமுகக் கருத்துக்களின் மறுவாசிப்பு தொடர்பான படத்தில் இக்காட்சிகள் பொருத்தமுடையனவாகத் தோன்றவில்லை. பாரதியின் எத்தனையோ பரிமாணங்கள் இப்படத்தில் விரிவாகச்ச் சொல்லப்படவில்லை. உதாரணமாக அவரது இயற்கை உபாசனை, அவரது ஆன்மீகப் பிரபஞ்சம் போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் சொல்லவும் அவசியமில்லை. ஏனெனில் நமக்கு இங்கு வைக்கப்படடிருக்கும் பாரதி வரலாற்றுப் பாரதி அல்ல, மாறாக சமகாலத்திற்குப் பொறுத்தமான மறுவாசிப்பிலான பாரதி.

படத்தில் வரலாற்றுணர்வு காப்பாற்றப்படவேண்டும் என்பது ஒரு மிக முக்கிமான பிரச்சனை. தெருக்கள் குடியிருப்புக்கள், நடை உடை பாவனைகள், சின்னங்கள் போன்றவற்றின் ழூலமும் இது சாதிக்கப்படலாம். ‘ஹே ராம் ‘ படத்தில் கையாளப் பெற்றிருக்கும் வரலாற்றுணர்வை இங்கு குறிப்பிடலாம். வரலாற்றுணர்வு காப்பாற்றப்படுதலென்பது யதார்த்தத்தில் படத்தின் தயாரிப்புச் செலவினத்தோடு சம்பந்தப்பட்டது. இவ்வகையில் பாரதி படத்தின் மீது அதீதமான காலவுணர்வு பற்றிய பிரச்சினையை எழுப்புவது சங்கடமானது ஏனெனில் குறைந்த செலவினத்துடன் நல்ல நோக்த்துடன் எடுக்கபட்டிருக்கும் இப்படத்தில் சாத்தியமான அளவில் இப்படம் செய்யப்பட்டிருக்கிறதா எனத்தான் பார்க்க வேண்டும். அக்கிரகாரத்து ஆண்களின் தோற்றத்தில் உள்ள காலவுணர்வு பெண்களின் தோற்றத்தில் இல்லை. பாரதி அருவியில் குளிக்கும் போது பாறையில் பெரிய எழத்தில் தெரியும் ஓம் எனும் எழுத்தை அக்காலத்தில் எழுதியிருக்க நியாயமில்லை. தங்கர்பாச்சன் தனது ஒளி நேர்த்தியின் மூலமும் அவர் பாவித்திருக்கும் புழுதி நிறமான ஒளிப்பதிவின் மூலமும் காலவுணர்வைக் கொண்டுவர படம் முழுக்கவுமே முயன்றிருக்கிறார். காலஞ்சென்ற இயக்குனர் பரதனின் வைசாலி எனும் மலையாளப்படத்தின் ஒளிப்பதிவில் காணப்பட்ட காலவுணர்வு இங்கு ஞாபகம் வருகிறது.

புதினாறு பேர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கில் தொடங்கும் படம் அவனைப் பற்றிய புரிதலைக் கோரும் வேண்டுகோளுடன் அதே இறுதிச் சடங்கில் முடிகிறது. இந்து முஸ்லீம் ஜாதியம் மதமாற்றம் போன்ற பிரச்சினைகளில் பாரதியின் சமநிலையைப் படம் சொல்கிறது. கவிதா கர்வத்தை அலட்சியத்தைப் படம் சுட்டுகிறது. தனது செல்ல மகள் கண்ணம்மாவின் பாலான கனிவைச் சொல்கிறது. அவருக்கு ஏற்பட்ட கஞ்சா குடிக்கும் பழக்கத்தை ஒரு வசனத்தில் சொல்லிச் செல்கிறது. பின்வரும் ஆற்றங்கரை மயக்கக் காட்சிகளுக்கும் அவரது போதைப்பழக்கத்துக்குமான உறவு அழுத்தமானதாக இருந்தும் கூட இது தொடரபான காட்சிகள் வைக்கப்படாதது சுயதணிக்கை சார்ந்த அறவியல் அரசியல் தவிர வேறில்லை.

மிகச்சரியான பாத்திரத் தேர்வுகள். பாரதியை நினைத்தால் நமக்கு நிச்சயமாக பதட்டமும் கம்பீரமும் கணீரென்ற குரலும் மிடுக்கும் நிறைந்த எஸ்வி.சுப்பையா நினைவில் வராமல் போகமாட்டார். ஷாயாஜி ஷிண்டே எனும் மராட்டிய நடிகர் பாரதியாக அந்த மிடுக்குடன் கவித்திமிருடன் வாழ்ந்திருக்கிறார். தேவயானி சொற்களை மீறிய அற்புதங்களை தனது மெளன முகபாவங்களில் கொண்டுவந்திருக்கிறார். நிழல்கள் ரவி ராஜா போன்ற தெரிந்த முகங்கள் பாத்திரப் பொருத்தத்துடன் வருகிறார்கள். குவளை பாத்திரம் கச்சிதமாக உருவாகியிருக்கிறது. போலீஸ்காரர்கள் தொடர்பான காட்சிகள் வழமையான தமிழ்சினிமாக் கோமாளிகளை காட்டியிருந்தாலும் நியாயமாகவே அவர்கள் கோமாளிகள்தான். வயலில் பாட்டுப் பாடிக் கொண்டுவரும் சிறுமி கண்ணம்மாவாக வரும் சிறுமி ( இந்தப் பெண்குழந்தை அந்த நாளில் எனது கனவு நாயகிகளில் ஒருவராக இருந்த சாந்தி கிருஷ்ணா – பன்னீர் புஷ்பங்கள்-சிவப்பு மல்லி நாயகி- ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாட்டு- மாதிரியே இருக்கிறார்- சின்ன வயசு சாந்தி கிருஷ்ணாவைக் குழந்தையாகப் பார்ப்பது மாதிரிச் சந்தோசம்2) சின்ன வயது பாரதி அவரது தந்தை உறவினராக வரும் சிறீகாந்த் எல்லோருமே தமது பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாவது பகுதியில் பார்வையாளனைப் படம் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. அவரது குடும்ப வாழ்வின் முரண்கள் பாரதி குறித்த மறுவாசிப்பு மட்டுமே தொடர்ந்த காட்சிகளில் மையம் பெறுவதுதான் காரணம். பிறிதொரு காரணம் கவிஞன் பற்றிய இப்படத்தில் இந்த இரண்டாவது பகுதியில்தான் அவனது இயற்கை உபாசனையும் இயல்பான மனவெழுச்சியும் பாடல்களின் வழி சொல்லப்பட்டிருக்கிறது. இதே மாதிரியிலான- நாடகபாணி தவிர்ந்த- காட்சியமைப்புக்கள் மற்றும் தன்னெழுச்சியான பாடல்களின் ழூலமே முதல் பகுதிக் கதையையும் சொல்லியிருக்கமுடியும். வுாழ்ககையையே கவிதையாக வாழ்ந்து முடித்த ஒருவனின் கதையை அவ்வாறாகச் சொல்வது உணர்ச்சகரமானதாகவும் பொறுத்தமாக இருந்திருக்கும்.. வெள்ளை நிறத் தொரு பாட்டும் படப்ிபடிப்பும் அருவியினிலான பாடலும் படப்பிடிப்பும் பாரதி போலவே நமக்குக் கிறுக்குப் பிடிக்கச் செய்கிறது. வந்தே மாதரம் பாடலுக்கும் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பாடலுக்கும் இளையராஐா அனுபவித்து அருவி போல் பொங்கியிருக்கிறார்.

ஜாதிய மத இன வெறுப்பு விதைக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் புரையோடியிருக்கும் நமது சூழலில் மனிதர்களாக சமகாலத்தில் சமூகத்துக்கான எமது பொறுப்புணர்வைக் கோரும். புடம். பாரதி. நமது விமர்சனங்களையும் புரிதல்களையும் தாண்டி இப்படம் ஒரு வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு எனச் சொல்ல வேண்டும். பாரதி குறித்த விமர்சனங்கள் வரலாற்று வக்கிரமாக வெளியாகிக் கொண்டிருக்கிற சூழலில் இரத்தமும் சதையுமான இம்மகாகவி பற்றிய இந்த மறுவாசிப்பென்பது காலப் பொருத்தம் வாய்ந்தது. பாலச்சந்தர் கமல்ஹாஸன் என எத்தனையே பேர் முயன்றிருக்கிறார்கள். ஞான ராஐசேகரன் செய்து முடித்திருக்கிறார். சிதைக்காது செதுக்கியிருக்கிறார். சிதைக்காதிருப்பதென்பது மிகமுக்கியம்.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்

பாரதி : காலம் மீறிய கலைஞன்

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue

யமுனா ராஜேந்திரன்


ஞான ராஜசேகரனின் மூன்றாவது திரைப்படம்.பாரதி .தி. ஜானகிராமனின் மோக முள்ளிற்கு அடுத்து

ராஜசேகரனுடன் தங்கர்பச்சான் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் பாரதி. ஓளிப்பதிவாளர்

சிறீராம் இருந்தும் அர்த்தமற்றுப் போன அபத்த நாடகமாக இருந்த நாசர் நடித்த முகம் படத்தையும் இங்கு ஞாபகம்

வைத்துக் கொள்வது நல்லது : நாடக மேடை குறித்த உணர்வு முன்னாள் நாடக இயக்கனரான ராஜசேகரனிடம் இருப்பதால்

தான் பல்வேறு திரைப்படக் காட்சிகள் கூட மேடைநாடகத்தின் பண்பைக் கொண்டிருக்கின்றன என்று புரிந்து

கொளவதும் இங்கு பொறுத்தமானது. படம் குறித்த பெரும்பாலுமான விமர்சனங்கள் படத்தை ( இந்தியா டுடே : விண்

நாயகன் ) வரிச்சலுகைக்காக அரசுக்கும் அதனது கருவின் சமுக முக்கியத்துவத்திற்காக பார்வையாளனுக்கும் பரிந்துரை

செய்பவையாகவே இருந்தன. சில விமர்சனங்கள் படத்தின் வரலாற்றுணர்வு காட்சிகளில் செம்மையாகக்

காட்டப்படவில்லை ( துக்ளக்) எனும் வகையில் அமைகின்றன். கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற இடதுசாரி

அமைப்புக்கள் படத்தின் கலாச்சார அரசியல் முக்கியத்துவம் கருதி ஞானராஜசேகரனின் பணியைப்

பாராடடியிருக்கின்றன். அது பொறுத்தமானதொரு பணி என்பதில் சந்தேகமில்லை இச்சூழலில் எனது விமர்சனத்தை

வெகுஜன சினிமாப் பார்வையாளனின் மனோ பாவத்திலிருந்தும் படைப்பாளியாக இயக்குனரை நோக்கியதாகவும்

கையாள நினைக்கிறேன்.

பாரதி திரைப்படக்கதையின் விவரிப்பு (Narration) மூன்று நிலைகளிலானது. 1. பாரதியின் குடும்ப வாழ்வு

: ஆண் பெண் உறவு தொடர்பான அவரது அனுபவ விகசிப்பு தொடர்பானது. 2. பாரதியின் தேசிய விடுதலை

அரசியல் கருத்துக்களின் பரிமாணம் தொடர்பானது. 3. இன்று நிலவும் பாரதி குறித்த விமர்சனங்களை

( அவர் இந்துப் பிராமணன் எனும் குற்றச்சாட்டு) எதிர்கொள்ளும் முகமாக அவரை மறுவாசிப்புச் செய்தல் எனும்

நோக்கில் கையாளப் பெறும் சம்பவங்கள் தொடர்பானது. தமிழ் சினிமாவின் நீண்ட தொடர்ச்சியில் வைத்துப்

பாரக்கும்போதும் சரி திரைக்கதையின் தர்க்க வளர்ச்சி என்று வைத்துப் பார்க்கும் போதும் சரி இப்படம் ஒரு

கவிஞனின் குடும்ப வாழ்வுக்கும் அவனது சமூகக் கனவுக்கும் ( சாதாரண தமிழ்சினிமா பாஷையில் : பாசமா கடமையா

: எனும் இரண்டக நிலை) இடையிலான பிரச்சினைகளை முரண்களை சமகால உணர்வுடன் சொல்ல முயல்கிறது.

பாரதியின் சமுகக் கருத்துக்கள் பற்றிய மறுவாசிப்பும் படத்தின் போக்கில் மிக முக்கியமான அம்சமாகக் கவனம்

பெறுகிறது.

இவ்வகையான கதை சொல்லும் போக்கில் ஒரு பார்வையாளனுக்கு மிக முக்கியமாக கேள்வி எழுகிறது படத்தின்

தரக்கத்திற்கு படத்தில் இடம் பெறும் பாரதியின் தேசிய அரசியல் சம்பந்தமான பரிமாணமும் காட்சிகளும் எவ்வாறு

உதவுகிறது ? உதாரணமாக அரவிந்தரைச் சந்திக்கும் காட்சிகள், பால கங்காதர திலகர் சம்பந்தமான காட்சிகள்-

நாடகத் தன்மை வாய்ந்த- இக்காட்சிகள் எவ்வகையில் உதவுகிறன ? படத்தின் போக்கில் பார்வையாளனின்

மனப்பிரதேசத்தில் சம்பந்தப்படாத சம்பவிப்புகளாகவே இக்காட்சிகள் அமைந்திருந்தன. பாரதியின்

வரலாற்றில் இவை முக்கியமான சம்பவங்களாக இருக்கலாம் ஆனால் பாரதி குடும்ப வாழ்வ அவரது சமுகக் கருத்துக்களின்

மறுவாசிப்பு தொடர்பான படத்தில் இக்காட்சிகள் பொருத்தமுடையனவாகத் தோன்றவில்லை. பாரதியின் எத்தனையோ

பரிமாணங்கள் இப்படத்தில் விரிவாகச்ச் சொல்லப்படவில்லை. உதாரணமாக அவரது இயற்கை உபாசனை, அவரது

ஆன்மீகப் பிரபஞ்சம் போன்றவற்றைச் சொல்லலாம். இவையெல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் சொல்லவும்

அவசியமில்லை. ஏனெனில் நமக்கு இங்கு வைக்கப்படடிருக்கும் பாரதி வரலாற்றுப் பாரதி அல்ல, மாறாக

சமகாலத்திற்குப் பொறுத்தமான மறுவாசிப்பிலான பாரதி.

படத்தில் வரலாற்றுணர்வு காப்பாற்றப்படவேண்டும் என்பது ஒரு மிக முக்கிமான பிரச்சனை. தெருக்கள் குடியிருப்புக்கள்,

நடை உடை பாவனைகள், சின்னங்கள் போன்றவற்றின் ழூலமும் இது சாதிக்கப்படலாம். ‘ஹே ராம் ‘ படத்தில் கையாளப்

பெற்றிருக்கும் வரலாற்றுணர்வை இங்கு குறிப்பிடலாம். வரலாற்றுணர்வு காப்பாற்றப்படுதலென்பது யதார்த்தத்தில்

படத்தின் தயாரிப்புச் செலவினத்தோடு சம்பந்தப்பட்டது. இவ்வகையில் பாரதி படத்தின் மீது அதீதமான

காலவுணர்வு பற்றிய பிரச்சினையை எழுப்புவது சங்கடமானது ஏனெனில் குறைந்த செலவினத்துடன் நல்ல நோக்த்துடன்

எடுக்கபட்டிருக்கும் இப்படத்தில் சாத்தியமான அளவில் இப்படம் செய்யப்பட்டிருக்கிறதா எனத்தான் பார்க்க வேண்டும்.

அக்கிரகாரத்து ஆண்களின் தோற்றத்தில் உள்ள காலவுணர்வு பெண்களின் தோற்றத்தில் இல்லை. பாரதி அருவியில்

குளிக்கும் போது பாறையில் பெரிய எழத்தில் தெரியும் ஓம் எனும் எழுத்தை அக்காலத்தில் எழுதியிருக்க

நியாயமில்லை. தங்கர்பாச்சன் தனது ஒளி நேர்த்தியின் மூலமும் அவர் பாவித்திருக்கும் புழுதி நிறமான

ஒளிப்பதிவின் மூலமும் காலவுணர்வைக் கொண்டுவர படம் முழுக்கவுமே முயன்றிருக்கிறார். காலஞ்சென்ற இயக்குனர்

பரதனின் வைசாலி எனும் மலையாளப்படத்தின் ஒளிப்பதிவில் காணப்பட்ட காலவுணர்வு இங்கு ஞாபகம் வருகிறது.

புதினாறு பேர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கில் தொடங்கும் படம் அவனைப் பற்றிய புரிதலைக்

கோரும் வேண்டுகோளுடன் அதே இறுதிச் சடங்கில் முடிகிறது. இந்து முஸ்லீம் ஜாதியம் மதமாற்றம் போன்ற

பிரச்சினைகளில் பாரதியின் சமநிலையைப் படம் சொல்கிறது. கவிதா கர்வத்தை அலட்சியத்தைப் படம்

சுட்டுகிறது. தனது செல்ல மகள் கண்ணம்மாவின் பாலான கனிவைச் சொல்கிறது. அவருக்கு ஏற்பட்ட கஞ்சா குடிக்கும்

பழக்கத்தை ஒரு வசனத்தில் சொல்லிச் செல்கிறது. பின்வரும் ஆற்றங்கரை மயக்கக் காட்சிகளுக்கும் அவரது

போதைப்பழக்கத்துக்குமான உறவு அழுத்தமானதாக இருந்தும் கூட இது தொடரபான காட்சிகள் வைக்கப்படாதது

சுயதணிக்கை சார்ந்த அறவியல் அரசியல் தவிர வேறில்லை.

மிகச்சரியான பாத்திரத் தேர்வுகள். பாரதியை நினைத்தால் நமக்கு நிச்சயமாக பதட்டமும் கம்பீரமும் கணீரென்ற

குரலும் மிடுக்கும் நிறைந்த எஸ்வி.சுப்பையா நினைவில் வராமல் போகமாட்டார். ஷாயாஜி ஷிண்டே எனும் மராட்டிய

நடிகர் பாரதியாக அந்த மிடுக்குடன் கவித்திமிருடன் வாழ்ந்திருக்கிறார். தேவயானி சொற்களை மீறிய

அற்புதங்களை தனது மெளன முகபாவங்களில் கொண்டுவந்திருக்கிறார். நிழல்கள் ரவி ராஜா போன்ற தெரிந்த

முகங்கள் பாத்திரப் பொருத்தத்துடன் வருகிறார்கள். குவளை பாத்திரம் கச்சிதமாக உருவாகியிருக்கிறது.

போலீஸ்காரர்கள் தொடர்பான காட்சிகள் வழமையான தமிழ்சினிமாக் கோமாளிகளை காட்டியிருந்தாலும்

நியாயமாகவே அவர்கள் கோமாளிகள்தான். வயலில் பாட்டுப் பாடிக் கொண்டுவரும் சிறுமி கண்ணம்மாவாக வரும்

சிறுமி ( இந்தப் பெண்குழந்தை அந்த நாளில் எனது கனவு நாயகிகளில் ஒருவராக இருந்த சாந்தி கிருஷ்ணா –

பன்னீர் புஷ்பங்கள்-சிவப்பு மல்லி நாயகி- ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாட்டு- மாதிரியே இருக்கிறார்-

சின்ன வயசு சாந்தி கிருஷ்ணாவைக் குழந்தையாகப் பார்ப்பது மாதிரிச் சந்தோசம்2) சின்ன வயது பாரதி அவரது

தந்தை உறவினராக வரும் சிறீகாந்த் எல்லோருமே தமது பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாவது பகுதியில் பார்வையாளனைப் படம் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. அவரது குடும்ப வாழ்வின்

முரண்கள் பாரதி குறித்த மறுவாசிப்பு மட்டுமே தொடர்ந்த காட்சிகளில் மையம் பெறுவதுதான் காரணம். பிறிதொரு

காரணம் கவிஞன் பற்றிய இப்படத்தில் இந்த இரண்டாவது பகுதியில்தான் அவனது இயற்கை உபாசனையும் இயல்பான

மனவெழுச்சியும் பாடல்களின் வழி சொல்லப்பட்டிருக்கிறது. இதே மாதிரியிலான- நாடகபாணி தவிர்ந்த-

காட்சியமைப்புக்கள் மற்றும் தன்னெழுச்சியான பாடல்களின் ழூலமே முதல் பகுதிக் கதையையும் சொல்லியிருக்கமுடியும்.

வுாழ்ககையையே கவிதையாக வாழ்ந்து முடித்த ஒருவனின் கதையை அவ்வாறாகச் சொல்வது உணர்ச்சகரமானதாகவும்

பொறுத்தமாக இருந்திருக்கும்.. வெள்ளை நிறத் தொரு பாட்டும் படப்ிபடிப்பும் அருவியினிலான பாடலும்

படப்பிடிப்பும் பாரதி போலவே நமக்குக் கிறுக்குப் பிடிக்கச் செய்கிறது. வந்தே மாதரம் பாடலுக்கும் அக்கினிக்

குஞ்சொன்று கண்டேன் பாடலுக்கும் இளையராஐா அனுபவித்து அருவி போல் பொங்கியிருக்கிறார்.

ஜாதிய மத இன வெறுப்பு விதைக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் புரையோடியிருக்கும் நமது சூழலில் மனிதர்களாக

சமகாலத்தில் சமூகத்துக்கான எமது பொறுப்புணர்வைக் கோரும். புடம். பாரதி. நமது விமர்சனங்களையும்

புரிதல்களையும் தாண்டி இப்படம் ஒரு வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு எனச் சொல்ல வேண்டும். பாரதி

குறித்த விமர்சனங்கள் வரலாற்று வக்கிரமாக வெளியாகிக் கொண்டிருக்கிற சூழலில் இரத்தமும்

சதையுமான இம்மகாகவி பற்றிய இந்த மறுவாசிப்பென்பது காலப் பொருத்தம் வாய்ந்தது. பாலச்சந்தர் கமல்ஹாஸன்

என எத்தனையே பேர் முயன்றிருக்கிறார்கள். ஞான ராஐசேகரன் செய்து முடித்திருக்கிறார். சிதைக்காது

செதுக்கியிருக்கிறார். சிதைக்காதிருப்பதென்பது மிகமுக்கியம்.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்