பழத்தயிர் (ப்ரூட் லஸ்ஸி)
Published May 18, 2002 • By

தேவையான பொருட்கள்
1 கோப்பை புதுத்தயிர்
2 தேக்கரண்டி தேன்
எலுமிச்சை சாறு
1/2 கோப்பை மிகச்சிறிய துண்டங்களாக நறுக்கிய பழம் (வாழைப்பழம், பப்பாளி, தர்பூஸ், மாம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
1 கோப்பை தண்ணீர்
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். ரோஜா இதழ்களைத் தூவி பறிமாறவும்.