பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

அறிவிப்பு(Thirukkural – A Multi Disciplinary Approach National Seminar)

தமிழ்த்துறை,பெரியார் பல்கலைக்கழகம்,சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ‘பன்முக நோக்கில் திருக்குறள்’ என்னும் தலைப்பில் தேசியக்கருத்தரங்கு ஒன்றினை மார்ச்சு 26,27,28 – 2008 இல் நடத்துகிறது.26.03.2008 காலை நடைபெறும்

தொடக்க விழாவில் முனைவர் பெ.மாதையன் அவர்கள் வரவேற்புரையாற்ற, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றுகிறார்.

பேராசிரியர் முனைவர் தி.முருகரத்தினம் அவர்கள் தொடக்கவிழா சிறப்புரையாற்ற உள்ளார்.

28.03.2008 இல் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்ற,பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வ.கிருட்டிணகுமார் வாழ்த்துரை வழங்க உள்ளார்.தமிழகப் பல்கலைக்கழக,கல்லூரிப் பேராசிரியர்களின் 22 அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.

செய்தி : முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு