பனித்துளியின் தொட்டில்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

புதியமாதவி


ஆகாயப் படுக்கையில்
விளையாடும் மேகங்கள்
சிந்தியது
பனித்துளிகள்
சிலிர்த்துப் போனது
கால் நகங்கள்
கருப்பைக்கு
வெளியே கரு
அறுவைச் சிகிச்சையில்
பிரசவம்
ஆடுகின்றது
தொட்டில்
ஆட்டுவது
புயலா ?
இல்லை
ஆடுவதே
புயலா ?
——————–
புதியமாதவி
மும்பை 42.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை